சங்க நூல்களில் காணப்படும் மலர்களைச் சங்ககால மலர்கள் என இங்குக் குறிப்பிடப்படுகிறது. குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் மகளிர் தொகுத்து விளையாடியதாக 99 மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை அறிஞர்களின் பார்வையில் 103 வரை நீள்கிறது. சில மலர்களின் பெயர்கள் அம்மலர்களைப் பற்றிய விளக்கங்களுடன் அமைந்துள்ளன. இந்தக் கட்டுரையில் அவை 99 என்னும் பார்வையில் தொகுத்து அகரவரிசையில் அடுக்கப்பட்டுள்ளன.
இவற்றைத் தவிர வேறு இலக்கியங்களில் வரும் மலர்கள் தனித்து அகரவரிசை அடுக்கினைப் பெறுகின்றன.
வைகை ஆற்று மணலில் பல்வகை மலர்கள் உதிர்ந்து கிடந்தன. இந்தத் தோற்றம் மகளிர் தம் இடையில் ஆடையின் மேல் அணியும் மேகலையில் பதிக்கப்பட்டுள்ள பல்வண்ண மணிகள் போல இருந்தது என்கிறார் இளங்கோவடிகள்.[1] இங்கு 23 மலர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் அகரவரிசை.
மேலதிகத் தகவல்கள் புதிய மலர்கள், குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள மலர்கள் ...
மணிமேகலை 3 மலர்வனம் புக்க காதையில் புகார் நகரத்து வளர்ப்புப் பூங்காவில் இருந்த மலர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. மணிமேகலையின் சேவடி நிலத்தில் படாமல் இந்த மலர்கள் தாங்கிக்கொண்டனவாம். அவை இங்கு அகர வரிசையில் தரப்படுகின்றன.
மேலதிகத் தகவல்கள் குறிஞ்சிப்பாட்டில் கூறப்படாத மலர்கள், குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள மலர்கள் ...
பிற்கால ஔவையார் கொட்டி, அம்பல் நெய்தல் ஆகிய பூக்கள் வெவ்வேறு என்கிறார்.[3]
நாலடியார் நூல் தரும் செய்தி
நீரில் மிதக்கும் பூக்களில் குவளை மக்களுக்கு உதவும் நீர்மை(நல்லொழுக்கம்) கொண்ட மேன்மக்கள் போன்ற பூ என்றும், ஆம்பல் மக்களுக்கு உதவாத நீர்மை இல்லாதவர் போன்ற பூ என்றும் நாலடியார் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.[4]
நெய்தல், கொட்டி ஆகிய மலர்களை மகளிர் சூடிக்கொள்வர் என்கிறது ஒரு பாடல்.[5]