தோன்றி (மலர்)

From Wikipedia, the free encyclopedia

தோன்றி என்னும் மலரைக் காந்தள் மலரின் வகை என்கின்றனர்.[யார்?] மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில்

காந்தள் = செங்காந்தள்
கோடல் = வெண்காந்தள்

என்னும் மலர்கள் உள்ளன. ஆயின் தோன்றி-மலர் என்பது இருநிறமும் கலந்த மலரோ என எண்ணவேண்டியுள்ளது.[சான்று தேவை]

குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்கநூல் இதனைச் ‘சுடர்பூந் தோன்றி’ எனக் குறிப்பிடுகிறது. [1]

இப்பெயர் ‘நள்ளிருள் நாறி’ என்னும் பெயருக்குத் தரப்பட்டுள்ள விளக்கம் போல் உள்ளது. தோன்றி < தோன்றிப்பூ < சுடர்பூந்தோன்றிப்பூ – என இந்தப் பூவின் விளக்கம் அமைகிறது.

மருதோன்றி, மருத்தோன்றி, மருதாணி, அழகணம் என்றெல்லாம் கூறப்படும் பூவின் பெயரே தோன்றி என வழக்காறு நோக்கிக் கொள்வது பொருத்தமானது.[சான்று தேவை]

(‘தாமரை’ என்னும் சொல்லிலுள்ள ‘தா’ குறைந்து ‘மரை’ என நின்று, ‘மரை’ என்னும் சொல் தாமரை மலரை உணர்த்துகிறது.[சான்று தேவை] இதனை முதற்குறை என்று இலக்கணம் குறிப்பிடுகிறது.[2])

அதுபோல ‘மருத்தோன்றி’ என்னும் சொல்லிலுள்ள ‘மரு’ என்னும் முதல் மறைந்து ‘தோன்றி’ என நின்று மருதாணிப் பூவை உணர்த்துகிறது எனல் பொருத்தமானது.[சான்று தேவை] இதனை இப்படிப் பார்க்கவேண்டும். தோன்றி என்பது பழந்தமிழ். மரு = மணம். தொலை தூரம் மணக்கும் பூ என விளக்கும் விளக்கப்பெயராக அமைந்துள்ளது ‘மருத்தோன்றி’.[சான்று தேவை]

சங்கப்பாடல்கள் காட்டும் தோன்றி மலர்

  • இது தலைவியும், தோழியும் குவித்து விளையாடித் தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் ஒன்று. [3]
  • தோன்றிப்பூ தீ போல மலரும். [4]
  • பவள நிறத்தில் இருக்கும். [5]
  • அகல் விளக்கில் சுடர் எரிவது போல இருக்கும். [6]
  • தீச்சுடர் போல இருக்கும். [7]
  • செம்முல்லை பூப் போல இருக்கும். [8]
  • இதழ்கள் நிறைந்த பூ தோன்றி. [9]
  • புதரில் விளக்கு போல் தோற்றமளிக்கும். [10]
  • குவிந்த கொத்துகளாக இருக்கும். [11]
  • உரு என்னும் சிவப்புநிறம் கொண்டிருக்கும். [12]
  • வெறியாட்டம் போல் சுருக்கம் கொண்டிருக்கும். [13]
  • எடுப்பான வண்ணம் கொண்டிருக்கும். [14]
  • தோன்றிப் பூக்கள் மிகுதியாக உள்ள மலை தோன்றி-மலை. அதன் அரசன் தோன்றிக்கோ. [15]

மேலும் காண்க

சங்ககால மலர்கள்

வெளியிணைப்புகள்

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.