கொன்றை

தாவர இனம் From Wikipedia, the free encyclopedia

கொன்றை

கொன்றை அல்லது சரக்கொன்றை (Cassia fistula, golden rain tree, அல்லது canafistula) என்பது பேபேசியே (Fabaceae) என்னும் தாவரவியற் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இதன் தாயகம் இந்திய துணைக்கண்டம் மற்றும் அருகில் உள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளாகும். பாகித்தானின் தெற்குப் பகுதிகளிலிருந்து, இந்தியா ஊடாகக் கிழக்கே மியன்மார் (பர்மா) வரையும், தெற்கே இலங்கைத் தீவு வரையும் இது பரவலாகக் காணப்படுகின்றது.

விரைவான உண்மைகள் கொன்றை தமிழகத்தில் சரக்கொன்றை, காப்பு நிலை ...
கொன்றை
Thumb
தமிழகத்தில் சரக்கொன்றை
Thumb
பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை
Not evaluated (IUCN 3.1)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Eudicots
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
காசியா
இனம்:
C. fistula
இருசொற் பெயரீடு
Cassia fistula
லி.
வேறு பெயர்கள் [1]
  • Bactyrilobium fistula Willd.
  • Cassia bonplandiana DC.
  • Cassia excelsa Kunth
  • Cassia fistuloides Collad.
  • Cassia rhombifolia Roxb.
  • Cathartocarpus excelsus G.Don
  • Cathartocarpus fistula Pers.
  • Cathartocarpus fistuloides (Collad.) G.Don
  • Cathartocarpus rhombifolius G.Don
மூடு

இது இந்திய மாநிலமான கேரளாவின் மாநில மலராகும். இது மலையாள மக்களிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அலங்கார அழகு தாவாரமாகவும் மருத்துவ குணம் வாய்ந்ததாகவும் உள்ளது. பண்டைய தமிழ் நூலில் இத்தாவரம் கொன்றை எனவும் சங்க காலத்தில் இது முல்லை நிலத்திற்குரிய பூவாகவும் கருதப்பட்டது. இது தாய்லாந்தின் நாட்டின் தேசியப் பூ மற்றும் மரமாகும்.

விளக்கம்

Thumb
Cassia fistula flower detail
Thumb
Cassia Fistula (Golden Shower tree / Konnappoo) inside forest in eastern parts of Kerala state in India

இத்தாவரம் நடுத்தரமான அளவு கொண்டது, 10-20 மீ (33- 66 அடி) உயரம் கொண்டது. வேகமாக வளரக்கூடியது. இதன் இலை கூட்டிலையாகும்; உதிரக்கூடியது. இலையின் நீளம் 15-60 செ.மீ (5.9 – 23.6 அங்குலம்) ஆகும். சிறகு கூட்டிலை மூன்று முதல் எட்டு ஜோடி சிற்றிலைகள் கொண்டது. ஒவ்வொரு இலையடி முதல் நுனி வரை 7 – 21 செமீ (2.8 – 8.3 அங்குலம்) நீளமும் 4-9 செ,மீ (1.6 – 3.5 அங்குலம்) அகலமும் கொண்டது.

இதன் பூவானது, பெண்டுலத்தின் (மணி) சரம் போன்ற அமைப்புக் கொண்ட ரெசிமோஸ் வகை மஞ்சரியாகும். மேலும் இதன் மலர், 20-40 செ.மீ (7.9 – 15.7 அங்குலம்) நீளமும் 4 -7 செ.மீ (1.6 – 2.8 அங்குலம்) விட்டமும் கொண்ட ஐந்து மஞ்சள் நிற சமவளவு உள்ள அல்லி இதழ்களைக் கொண்டது. கனியானது இருபுற வெடிகனி (லெகூம்)யாக, 30.60 செ.மீ (12 -24 அங்குலம்) நீளமும் 1.5 – 2.5 செ.மீ ( 0.59 – 0.98 அங்குலம்) அகலமும் பல விதைகளையும் காரமான, மனதைக் கவரும் வாசனையும் கொண்டது.

இம்மரம் நீடித்து உழைக்கக்கூடிய கடினமான கட்டைத்தன்மை கொண்டது. இம்மரத்தைப் பயன்படுத்தி இலங்கையின் சிவனொளிபாத மலையில் ”அகலா கனுவா” உருவாக்கப்பட்டுள்ளது. இது கேசியா பிஸ்டூலா ( அகாலா, எகாலா (அல்லது) எ ஹஹாலா-சிங்கள மொழி ) வைரக்கட்டை ஆகும்.

பயிரிடல்

Thumb
சரக்கொன்றை மலர் - சண்டிகர், இந்தியா
Thumb
பெங்களூரில் சரக்கொன்றை

சரக்கொன்றை அலங்காரத் தாவரமாகப் பரந்த அளவில் வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. இம்மரம் வசந்த காலத்தின் இறுதியில் இலைகளே பார்க்க முடியாத அளவில் மரம் முழுவதும் பூக்கள் பூத்துக் குலுங்கும். இது உலர்ந்த கால நிலையில், அதிக சூரிய ஒளி, நீர் தேங்காமல் (அ) நீர் வழிந்தோடும் இடத்தில் நன்றாக வளரும். மேலும் வறட்சியைத் தாங்கும். சிறிதளவு உப்புத்தன்மையைத் தாங்கி வளரக்கூடியது. இலேசான பனிதூவும் தன்மையைத் தாங்கக் கூடியது. ஆனால் அதிக குளிரைத் தாங்கும் தன்மையற்றது. குறிப்பாக இரண்டாம் பருவத்தில் இலையின் மேலாக சிறுசிறு புள்ளியுடன் வளர்கிறது. கோடை காலத்திலிருந்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இம்மரம் நன்றாகப் பூத்துக் குலுங்கும். குறிப்பிட்ட அளவில் குளிர்காலத்துக்கும் கோடைக்கும் இடையே வெப்ப அளவில் குறிப்பிடுமளவு வேறுபாடு கொண்ட இடங்களில் அதிகளவில் பூக்கும்.[2]

மகரந்த சேர்க்கை மற்றும் விதை பரவுதல்

பெரும்பாலான சிற்றினங்கள் தேன் மற்றும் வண்ணத்துப் பூச்சிகள் மூலமாக மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது. கேசீயாபில்டுலா பூக்கள் தேன் ( சைலோகார்ப்பு சிற்றினம் ) இராபர்ட் கூட்ட்டூப் 1911 கேசியா பிஸ்டுலா தாவரம் எப்படி விதையை பரப்புகிறது என்பதை சோதனை மூலம் நிருபித்தார். இதன் கனியை தங்க நரி உணவாக உட்கொள்ளுவதால் விதை பரவ உதவுகிறது.    [3]

மருத்துவ பயன்

Thumb
Leaves in Hyderabad, Telangana, India

ஆயுர்வேத மருத்துவத்தில், தங்க மழை மரம் "அரக்வதா" என்று அழைக்கப்படுகிறது, அதாவது "நோயாளியின் கொலையாளி". பழம் கூழ் ஒரு சுத்திகரிப்பு என கருதப்படுகிறது, மற்றும் சுய மருத்துவ அல்லது மருத்துவ மேற்பார்வை இல்லாமல் எந்த பயன்பாடு கடுமையாக ஆயுர்வேத நூல்களுக்கு எதிராக அறிவுறுத்தப்படுகிறது. இது ஆயிரம் ஆண்டுகளாக மூலிகைப் பயன்பாட்டில் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும், நவீன காலங்களில் சிறிய ஆராய்ச்சி நடத்தப்படுகிறது..

வளர்ப்பு

Thumb
Fruit

கொன்றை கேரளாவின் மாநில மலர் ஆகும். இதன் பூக்கள் விஷு பண்டிகையில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இம்மரம் 20 ரூபாய் தபால் தலையாக வெளியிடப்பட்டுள்ளது. பொன் பொழி. மரப்பூ தாய்லாந்தின் தேசிய மலராகும். இது தாய்லாந்தின் அரச கம்பீரத்தை குறிக்கும் விதமாக உள்ளது. 2006 -2007 நடைபெற்ற மலர் கண்காட்சியில் இத் தாவரம் அரசரது உரிமை பெற்ற ஒரு தேசத்தின் தாவர வகை ராகஸாபுரூக்கி எனப்பட்டது. இது பூத்துக் குலுங்கும் விதம் பொதுவாக டாக்கூண் என்று அழைக்கப்படுகிறது. கே. பிஸ்டூலா சிறப்பு அம்சமாக 2003 ஆம் ஆண்டில் கனடா மற்றும் தாய்லாந்து 48 செண்ட் தபால் தலை வடிவமைத்து வெளியிட்டது. இதன் மூலம் தேசிய சின்னம் உருவாவதற்கு முக்கியத்துவம் பெற்றது..[4]

கேசியா அக்குவாட்டிக் போலியா (pudding–pipe tree) கேசியா உலர்கனி (ஒரு விதை (அ) பல விதைகள் கொண்டது) வணிகத்திற்கு பயன்படுகிறது.. லாவோசிஸ் பூத்துக்குலுங்கு மலர்களை கொண்ட கேஸியா பிஸ்டூலா வட்டரா மொழியில் டாக் கவுன் என்று அழைக்கப்படுகிறது. இது லாவோ புத்தாண்டுடன் தொடர்புடையது. இப்பூக்களை கோயில் வழிபாடுகளிலும் வீடுகளிலும் புத்தாண்டு கொண்டாத்தின் போது தொங்க விடுகின்றனர். புத்தாண்டுகளில் இது மகிழ்ச்சி மற்றும் யோகம் கொண்டுவரும் என்று நம்புகிறார்கள்.[5]

வட்டாரப் பெயர்கள்

Thumb
Amaltās பூந்துணர்s, கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா

இம்மரம் குறிப்பிடத்தக்க அளவில் பரவலாக வளர்க்கப்படுகிறது. இதனால் அதிக அளவிலான வட்டார பெயர்களை கொண்டது. ஆங்கிலத்தில்[6] purging cassia,[7] இந்திய லேபர்ணம் (சரக்கொன்றை) அல்லது "பொன்பொழி கேசியா" (golden shower cassia). எசுப்பானிய மொழி பேசும் நாடுகளில் '"கேனா பிஸ்தூலா" (caña fistula) என அழைக்கப்படுகிறது.

இம்மரத்தின் தாயகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்படும் வட்டாரப் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளது:[8][9]


இந்துசமயத்தில் கொன்றை

இந்துக்கள், கொன்றைப் பூவைச் சிவனின் பூசைக்குரியதாகக் கருதுகின்றனர். இச் சமய இலக்கியங்கள், சிவபெருமானைக் கொன்றைப் பூவைத் தலையில் சூடியவராக வர்ணிக்கின்றன. (எ.கா: மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே)

இலக்கியத்தில் கொன்றை

  • காயா கொன்றை நெய்தல் முல்லை(ஐங்குறுநூறு 412 , பேயனார், முல்லைத் திணை – தலைவன் சொன்னது)
  • கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை
    (ஔவையார், கொன்றை வேந்தன்)
  • ”பொன்னெனமலர்ந்த கொன்றை மணியென(ஐங்குறுநூறு 420, பேயனார், முல்லை திணை – தலைவன் சொன்னது)
  • கதுப்பில் தோன்றும் புதுப்பூங் கொன்றை(குறுந்தொகை 21 – ஓதலாந்தையார், முல்லை திணை – தலைவி தோழியிடம் சொன்னது)
  • காசி னன்ன போது ஈன் கொன்றைகுருந்தோடு அலம் வரும் ( குறுந்தொகை 148, -இளங் கீரந்தையார், முல்லை திணை )
  • புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ
    பொன் எனக் கொன்றை மலர மணிஎன (நற்றிணை 242 விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார், முல்லை திணை – தலைவன் சொன்னது)
  • காயாங் குன்றத்துக் கொன்றை போல(நற்றிணை 371 – ஒளவையார், முல்லைதிணை – தலைவன் சொன்னது)
  • பைங்காற் கொன்றை மெல்பிணி அவிழ(அகநானுறு 4, பாடியவர் – குறுங்குடி மருதனார், திணை -முல்லை, தோழி தலைவியிடம் சொன்னது)

படக் காட்சியகம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.