கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

From Wikipedia, the free encyclopedia

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders சுருக்கமாக KKR எனவும் அழைக்கப்படுகிறது) என்பது இந்திய முதன்மைக் குழுப் போட்டிகளில் கொல்கத்தா நகரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறைத் துடுப்பாட்ட அணியாகும். இதன் உரிமையாளர்களாக பாலிவுட் நடிகர் ஷாருக் கான், நடிகை ஜூஹி சாவ்லா மற்றும் அவரது கணவர் ஜெய் மெஹ்தா ஆகியோர் உள்ளனர். இதன் உள்ளக அரங்கமாக ஈடன் கார்டன்ஸ் உள்ளது.[1]

விரைவான உண்மைகள் தொடர், தனிப்பட்ட தகவல்கள் ...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
Thumb
தொடர்இந்திய முதன்மைக் குழுப் போட்டிகள்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்காலியிடம்
பயிற்றுநர்சந்திரகாந்த் பண்டிட்
உரிமையாளர்ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட், மெஹ்தா குழுமம்
அணித் தகவல்
நகரம்கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
நிறங்கள்
உருவாக்கம்2008
உள்ளக அரங்கம்ஈடன் கார்டன்ஸ்
கொள்ளளவு68,000
அதிகாரபூர்வ இணையதளம்:kkr.in
Thumb

இ20 ஆடை

மூடு

இந்த அணி 2011 இல் முதல் முறையாக ஐபிஎல் தகுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. 2012 இல் சென்னை சூப்பர் கிங்ஸை இறுதிப் போட்டியில் தோற்கடித்து ஐபிஎல் வாகையாளர் ஆனது. 2014 இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை தோற்கடித்து மீண்டும் வாகையாளர் ஆனது.[2]

கொல்கத்தா அணிக்காக அதிக ஓட்டங்களை எடுத்தவராக கவுதம் கம்பீரும்[3] அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவராக சுனில் நரைனும் உள்ளனர்.[4] இதன் அலுவல்முறை நிறங்களாக ஊதாவும் பொன்னிறமும் உள்ளன.

வரலாறு

Thumb
கொல்கத்தா நைட் ரைடர்சின் சின்னத்துடன் சௌரவ் கங்குலி, இடதுபுறத்தில் ஷாருக்கான் மற்றும் வலதுபுறத்தில் கௌரி கான் .

2007ஆம் ஆண்டு இந்திய முதன்மைக் குழுப் போட்டிகள் என்ற இருபது20 போட்டித் தொடரை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் உருவாக்கியது. ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் இத்தொடரில் இந்தியாவின் 8 நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 8 அணிகள் பங்குபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த 8 அணிகளுக்கான ஏலம் 20 பிப்ரவரி 2008இல் நடைபெற்றது. அதில் கொல்கத்தா அணியை பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து நடிகை ஜூகி சாவ்லாவும் அவரது கணவர் ஜெய் மெஹ்தாவும் 75.09 மில்லியன் டாலர்கள் என்ற விலைக்கு ஏலத்தில் எடுத்தனர். இது அப்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 2.98 பில்லியனுக்கு இணையானதாகும்.[5] இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவருமான சௌரவ் கங்குலி கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரராக அறிவிக்கப்பட்டார். 1980களில் புகழ்பெற்ற நைட் ரைடர்ஸ் என்ற அமெரிக்கத் தொடரின் பெயரைத் தழுவி இந்த அணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்று பெயரிடப்பட்டடது.[6]

சூன் 2015 இல், அணியின் உரிமையாளர் குழு கரீபியன் பிரீமியர் லீக்கின் டிரினிடாட் மற்றும் டொபாகோ ரெட் ஸ்டீலில் ஒரு பங்குகளை வாங்கியது, [ [7][8] மேலும் 2016 இல் அதற்கு டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் என மறுபெயரிடப்பட்டது. திசம்பர் 2020 இல், அணி வரவிருக்கும் அமெரிக்க டி20 லீக் மேஜர் லீக் கிரிக்கெட்டிலும் முதலீடு செய்தது.[9]

ஐபிஎல் செயல்திறன்

2008

ஐபிஎல்லின் முதல் பருவத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெக்கான் சார்ஜர்சு அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று நல்ல தொடக்கத்தைத் தந்தனர். தொடக்க ஆட்டக்காரர் ப்ரெண்டன் மெக்குலம் முதல் போட்டியில் 158 ஓட்டங்கள் எடுத்தார். ப இ20 போட்டியில் ஒரு மட்டையாளரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டமாகப் பதிவுசெய்யப்பட்டது.[10] பின்னர் பஞ்சாப் அணிக்கு எதிராக கிறிஸ் கெயில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 175 ஓட்டங்கள் எடுத்து இந்தச் சாதனையினை முறியடித்தார்.

அடையாள உடை

இந்த அணியின் சின்னமானது ஒரு கருப்பான பின்னணியில் ஒளிவீசும் தங்கநிற போர்வீரர் தலைக்கவசத்துடன் அணியின் பெயரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என தங்க நிறத்தில் எழுதப்பட்டு இருந்தது. கோர்போ, லோர்போ, ஜீட்போ ரே (நாம் முயற்சிப்போம், அதற்காக போட்டியிடுவோம், வெற்றி பெறுவோம்) என்ற அணியின் முக்கிய கருவானது விஷால்-ஷேகர் இரட்டையர்களால் உருவாக்கப்பட்டது.[11] நைட் ரைடர் ஆல்பமானது உஷா உதுப் மற்றும் பப்பை லஹ்ரி உள்ளிட்ட பல்வேறு பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் மூலமாகவும் உருவாக்கப்பட்டது.[12] இந்த அணியின் முழக்கமாக ஆல் த கிங்'ஸ் மென் என இருந்தது.[11] இந்த அணியின் அதிகாரப்பூர்வ உடையின் நிறம் கருப்பு மற்றும் பொன்நிறம் ஆகும். கருப்பு நிறம் மா காளியின் வீரத்தையும், பொன்நிறம் வெற்றியின் ஆன்ம வடிவத்தையும் குறிக்கிறது.[12] பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ராவால் வீரர்களுக்கான உடை உருவாக்கப்பட்டது.[11]

உள்ளக அரங்கம்

இதன் உள்ளக அரங்கம் ஈடன் கார்டன்ஸ் ஆகும்.அரங்கத்தின் இரு முனைகளும் ஹை கோர்ட் எண்ட் மற்றும் கிளப் ஹவுஸ் எண்ட் என்று அழைக்கப்படுகின்றன. வங்காளத் துடுப்பாட்ட்ச் சங்கத்திற்குச் சொந்தமான இது, இந்தியாவின் மிகப்பெரிய துடுப்பாட்ட அரஙகமாக இருந்தது, இதில் 90,000க்கும் அதிகமான இருக்கை வசதிகளைக் கொண்டிருந்தது.[13] 2011 ஆம் ஆண்டில், 2011 துடுப்பாட்ட உலகக் கிண்ணத்திற்காக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை நிர்ணயித்த தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அரங்கம் புதுப்பிக்கப்பட்டதால்அதன் இருக்கை அளவானது 68,000 ஆகக் குறைந்தது.[14]

Thumb
2008ஆம் ஆண்டில் ஈடன் கார்டன்ஸ் அரங்கத்தில் நடைபெற்ற போட்டியின்போது

பருவங்கள்

மேலதிகத் தகவல்கள் பருவம், தரவரிசை ...
பருவம் தரவரிசை இறுதி நிலை
2008 8 இல் 6வது குழு நிலை
2009 8 இல் 8வது குழு நிலை
2010 8 இல் 6வது குழு நிலை
2011 10ல் 4வது தகுதிச் சுற்று
2012 9 இல் 2வது வாகையாளர்
2013 9 இல் 7வது குழு நிலை
2014 8 இல் 2வது வாகையாளர்
2015 8 இல் 5வது குழு நிலை
2016 8 இல் 4வது பிளேஆஃப்கள்
2017 8 இல் 3வது பிளேஆஃப்கள்
2018 8 இல் 3வது பிளேஆஃப்கள்
2019 8 இல் 5வது குழு நிலை
2020 8 இல் 5வது குழு நிலை
2021 8 இல் 4வது இரண்டாம் இடம்
2022 10ல் 7வது குழு நிலை
2023 10ல் 7வது குழு நிலை
மூடு

புள்ளிவிவரங்கள்

ஒட்டுமொத்த நிலை

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, விளையாடியது ...
ஆண்டு விளையாடியது வெற்றி தோல்வி சமன் முடிவில்லை வெற்றி% நிலை
2008 14 6 7 0 1 46.16 6/8
2009 14 3 10 0 1 23.07 8/8
2010 14 7 7 0 0 50.00 6/8
2011 15 8 7 0 0 53.33 4/10
2012 18 12 5 0 1 70.58 1/9
2013 16 6 10 0 0 37.50 7/9
2014 16 11 5 0 0 68.75 1/8
2015 14 7 6 0 1 53.84 5/8
2016 15 8 7 0 0 53.33 4/8
2017 16 9 7 0 0 56.25 3/8
2018 16 9 7 0 0 56.25 3/8
2019 14 6 8 0 0 42.86 5/8
2020 14 7 7 0 0 50.00 5/8
2021 17 9 8 0 0 52.94 2/8
2022 14 6 8 0 0 42.85 7/10
2023 14 6 8 0 0 42.85 7/10
மொத்தம் 241 120 117 0 4 50.63
மூடு
மேலதிகத் தகவல்கள் எதிரணி, காலம் ...
எதிரணி காலம் போட்டி வெற்றி தோல்வி சமநிலை வெற்றி%
சென்னை சூப்பர் கிங்ஸ்2008–2015; 2018-தற்போது28101835.71
டெல்லி கேபிடல்ஸ்2008–தற்போது311615051.61
கிங்ஸ் லெவன் பஞ்சாப்2008–தற்போது322111065.62
மும்பை இந்தியன்ஸ்2008–தற்போது32923028.12
ராஜஸ்தான் ராயல்ஸ்2008–2015; 2018-தற்போது271413051.85
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்2008–தற்போது321814056.25
சன்ரைசர்ஸ் ஐதராபாத்2013–தற்போது25169064.00
ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு2016–20174400100.00
குஜராத் லயன்ஸ்2016–2017312033.33
டெக்கான் சார்ஜர்ஸ்2008–2012972077.78
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா201120200.00
புனே வாரியர்ஸ் இந்தியா2011–2013541080.00
மூடு

மூலம்= ESPNCricinfo

நிர்வாகம்

மேலதிகத் தகவல்கள் பதவி, பெயர் ...
பதவி பெயர்
தலைமை செயற்குழு

மற்றும் நிர்வாக இயக்குநர்

வெங்கி மைசூர்
குழு மேலாளர் வெய்ன் பென்ட்லி
தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்
உதவிப் பயிற்சியாளர் அபிசேக் நாயர்
உதவிப் பயிற்சியாளர் ஜேம்ஸ் போஸ்டர்
பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாரத் அருண்
களத்தடுப்புப் பயிற்சியாளர் ரயான் டென் டோசேட்
குழு மருத்துவர் டாக்டர் ஸ்ரீகாந்த் நாராயணசுவாமி
வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் கிறிஸ் டொனால்ட்சன்
வழிகாட்டி கௌதம் கம்பீர்
மூடு
  • உரிமையாளர்கள் - ஷாருக்கான், ஜூகி சாவ்லா & ஜெய் மெக்தா (ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிட்டடு.)
  • CEO — ஜாய் பட்டாசார்யா[15]

குறிப்புகள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.