இந்திய விமான சேவை நிறுவனம் From Wikipedia, the free encyclopedia
ஏர் ஆசியா இந்தியா ஓர் மலிவுவிலைஇந்திய விமான சேவை நிறுவனமாகும்.மலேசியாவை சேர்ந்த ஆர்ஆசியா நிறுவனத்தின் இந்திய பிரிவான இதன் கூட்டு நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனம் 51% பங்குகளை கொண்டுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இதன் முதல் சேவை சூன் 12 2014ல் தொடங்கியது.
| |||||||
நிறுவல் | 28 மார்ச்சு 2013 | ||||||
---|---|---|---|---|---|---|---|
செயற்பாடு துவக்கம் | 12 சூன் 2014 | ||||||
மையங்கள் | கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் | ||||||
இரண்டாம் நிலை மையங்கள் |
| ||||||
வானூர்தி எண்ணிக்கை | 24 | ||||||
சேரிடங்கள் | 21 | ||||||
தாய் நிறுவனம் | டாடா குழுமம் | ||||||
தலைமையிடம் | பெங்களூரு, இந்தியா[3] | ||||||
முக்கிய நபர்கள் |
| ||||||
வலைத்தளம் | airasia |
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு நகரைத் தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் இந்தியாவின் குறைந்த கட்டண பயணிகள் விமான சேவை நிறுவனம் ஏர் ஆசியா இந்தியா ஆகும. இந்த நிறுவனம் இந்தியாவின் டாட்டா குழுமம் 51 சதவீத பங்குகளைக் கொண்டும் மலேசியா நாட்டின் ஏர் ஏசியா பெர்ஹாத் நிறுவனம் 49 சதவீத பங்குகளை கொண்டும் இணைந்து கூட்டுமுயற்சியில் இயக்குவது ஆகும். ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல் தேதி முதல் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் முதன்மை மையமாக பெங்களூரு விளங்குகிறது. ஆகும்.
1946ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைத்த பின்பு அறுபது ஆண்டுகள் கழித்து டாட்டா குழுமம் மலேசியாவின் ஏர் ஏசியா பெர்ஹாத் நிறுவனத்துடன் இணைந்து இந்நிறுவனத்தை ஆரம்பித்தது. இந்தியாவில் முதன்முதலாக வெளிநாட்டு விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா, டாடா குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் விமான சேவையை வழங்கி வருகிறது. இண்டிகோ, கோ ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக ஏர் ஆசியா இந்தியா நிறுவனம் 6.5% சதவிகித வர்த்தக சந்தையுடன் குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் நிறுவனத்தில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் தொழில்முறை கால்பந்தாட்ட கழகமான ஜாம்ஷெட்பூர் கால்பந்தாட்ட கழகத்தை வர்த்தக ரீதியாக ஆதரித்து வருகிறது ஏர் ஆசியா இந்தியா நிறுவனம்.
2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய அரசாங்கம் விமான நிறுவனங்களில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தது. அதன்படி மலேசிய நாட்டை சேர்ந்த ஏர் ஆசியா பெர்காத் நிறுவனம் இந்தியாவின் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம்(FIPB) இந்தியாவில் அதன் நிறுவனத்தை தொடங்க அனுமதி கேட்டது.[4][5] 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏர் ஆசியா இந்தியாவின் டாடா குடும்பத்திடம் குடும்பத்துடன் குடும்பத்துடன் குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் விமான சேவையில் ஈடுபட போவதாக அறிவித்தது. டெலிஸ்ட்ரா ட்ரேடு பிளேஸ் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் இரண்டு நிர்வாகத்தில் ஈடுபடாத இயக்குனர்களை நியமிக்கும் எனவும் அறிவித்தது.[6][7][8] ஏர் ஆசியா இந்தியா நிறுவனம் மிகக்குறைந்த கட்டணத்தில் பயணிகள் சேவையை அறிமுகப்படுத்துவதாகவும் முதல் மூன்று வருடத்திற்கான எரிபொருள் தேவைகளை 100% நிறைவேற்றுவதற்காகவும், விமானங்களை விமான நிலையத்தில் பயன்படுத்தும் நேரத்தை 25 நிமிடங்கள் ஆகவும் கணக்கிட்டது.[9]
இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களையும் அதன் சந்தைகளையும் கவருவதற்காக சென்னை சர்வதேச விமான நிலையத்தை முதன்மை முனையமாக கொண்டு இயங்குவதாக ஏர் ஆசியா நிறுவனம் திட்டமிட்டது.[10] ஏர் ஆசியாவின் இந்த திட்டம் இந்திய விமான சந்தையில் மற்றுமொரு கட்டண குறைப்பு போராகவும் விமான போக்குவரத்து அதிகமாகவும் இந்திய விமான சந்தையில் போட்டி அதிகமாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.[11] ஆரம்பத்தில் ஏர் ஆசியா 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் அதன் விமானசேவை இயக்கத்தை இயக்கத்தை தொடங்க முதலீடு செய்தது அதன் அதன் மூலம் அதற்காக இணையவழி மற்றும் நேரடி விமான பயணச்சீட்டு முகவர்களை நியமித்தது.[12][13] 2013ம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் தேதி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம், ஏர் ஆசியா நிறுவனத்தை விமானங்களை வாடகைக்கு எடுக்கவும் சரக்குகளை கையாளவும் முறையான அனுமதி அளித்தது. அதன்படி இந்த நிறுவனம் அத்துடன் பயணிகளைக் விமானத்தில் அனுமதிக்கவும் பயணிக்கவும் அனுமதி கேட்டது.[14][15]
2013ம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதி ஏர் ஆசியா இந்தியா முதலாவது வெளிநாட்டு முதலீட்டுடன் இயக்கப்படும் இந்திய விமான சேவை நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.[16][17] அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏர்ஆசியா இந்தியா விமான ஓட்டிகளையும், விமான கட்டுப்பாட்டு குழுவினரையும் பணிக்கு எடுத்தது..[18] விமான சேவையில் ஈடுபடுவதற்கு இறுதிக்கட்டமாக 2014ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி தேதி மற்றும் 11-ம் தேதிகளில் சென்னை முதல் கொச்சின் சர்வதேச விமான நிலையம், கேரளா கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், பெங்களூரு மற்றும்[[நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம் நிலையம் சர்வதேச விமான நிலையம் நிலையம் போஸ் சர்வதேச விமான நிலையம் நிலையம் சர்வதேச விமான நிலையம் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம் நிலையம் சர்வதேச விமான நிலையம் நிலையம் போஸ் சர்வதேச விமான நிலையம் நிலையம் சர்வதேச விமான நிலையம்]], கொல்கத்தா ஆகியவற்றிற்கு விமானத்தை இயக்கி அனுமதி பெற்றது.[19] இதையடுத்து 2014ம் ஆண்டு மே மாதம் ஏழாம் தேதி பயணிகள் சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதியை இந்நிறுவனம் பெற்றது.[20] அதே மாதம் 30ஆம் தேதி சென்னையில் இருந்து அதன் முதன்மை அதன் முதன்மை முனையத்தை பெங்களூருவுக்கு மாற்றுவதாகும் பெங்களூரு முதல் கோவா வரை அதன் முதல் பயணத்தை இயக்குவதாகவும் ஏர் ஆசியா இந்தியா நிறுவனம் அறிவித்தது.[21] அறிவித்தபடியே கோவா பெங்களூரு முதல் கோவா வரை இந்நிறுவனத்தின் முதல் விமான பயண சேவை 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி ரூபாய் 990/- விமான கட்டணத்துடன் தொடங்கியது.[22][23] வட இந்தியாவில் தனது விமான சேவையை விரிவுபடுத்துவதற்காக 2015 ஆம் ஆண்டு ஜூன் ஆண்டு ஜூன் மாதம் முதல் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை தனது இரண்டாவது முனையமாக அறிவித்தது.[24] 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டாடா குழுமம் 30 சதவீத பங்கிலிருந்து 40.06% சதவீதமாக தனது பங்கை உயர்த்தியது இதன்மூலம் டெலிஸ்ட்ரா நிறுவனத்தின் பங்கு 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைந்தது.[25][26] 2019ஆம் ஆண்டு ஜூலை கணக்கின்படி ஏர் ஆசியா இந்தியா நிறுவனம் இண்டிகோ, கோ ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக ஏர் ஆசியா இந்தியா நிறுவனம் 6.5% சதவிகித வர்த்தக சந்தையுடன் குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் நிறுவனத்தில் நான்காவது இடத்தில் உள்ளது.[27]
ஏர் ஆசியா இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இந்தியாவின் பெங்களூரு நகரத்தில் அமைந்துள்ளது [28] முன்னதாக இந்நிறுவனம் ஆரம்பிக்கப்படும் போது ஏர் ஏசியா குழுமத்தின் குழுமத்தின் நிறுவனரான டோனி பெர்னாண்டஸ், ரத்தன் டாட்டா அவர்களை இந்த விமான சேவை நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்க கேட்டுக்கொண்டார். ஆனால் அதனை மறுத்த ரத்தன் டாட்டா தலைமை ஆலோசகராக இருக்க சம்மதித்து அதன்படி ஏர் ஆசியா இந்தியா நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் ஆனார்.[29][30] 2013ம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி ஏர் ஆசியா இந்தியா ஆசியா இந்தியா தேதி ஏர் ஆசியா இந்தியா இந்தியா நிறுவனம் சிங்கப்பூரில் மேலாண்மை ஆலோசகராக இருந்த மிட்டு சாண்டில்யா அவர்களை தலைமை செயலதிகாரி அதிகாரியாக நியமித்தது.[31] ஒரு மாதத்திற்கு பின்பாக ஜூன் 17ஆம் தேதி டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் உதவித் தலைவராக பணியாற்றிய எஸ் ராமதுரை அவர்களை இந்த விமான சேவை நிறுவனத்தின் தலைவராக நியமித்தது.[32] 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமர் அப்ரோல், மிட்டு சாண்டில்யா க்கு பதிலாக நிறுவன தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.[33] In 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் பதவி விலகியதை அடுத்து சுனில் பாஸ்கரன் தலைமை இயக்குனர் மற்றும் தலைமை செயல் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். முன்னதாக இவரும் டாடா குழுமத்தில் குழுமத்தில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் பங்காற்றியுள்ளார்.[34]
ஏர் ஆசியா இந்தியா நிறுவனம் 26 வழித்தடங்களில் 100 விமானங்களுக்கு விமானங்களுக்கு மேலாக இயக்கி விமான சேவை சேவை வழங்கி வருகிறது.
State | City | Airport | Notes | Refs |
---|---|---|---|---|
ஆந்திரப் பிரதேசம் | விசாகப்பட்டினம் | விசாகப்பட்டினம் விமான நிலையம் | [35] | |
அசாம் | கௌஹாத்தி | லோக்பிரியா கோபிநாத் போர்டொலாய் சர்வதேச விமான நிலையம் | [36] | |
சண்டிகர் | சண்டிகர் | சண்டிகர் விமான நிலையம் | [37] | |
டெல்லி | டெல்லி | இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் | Secondary Hub | [36] |
கோவா | தபோலிம் | தபோலிம் விமான நிலையம் | [23] | |
குஜராத் | அகமதாபாத் | சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் நிலையம் நிலையம் | [38] | |
ஜம்மு - காஷ்மீர் | ஸ்ரீநகர் | ஷேக் உல் ஆலம் சர்வதேச விமான நிலையம் | ||
ஜார்கண்ட் | ராஞ்சி | பிர்சா முண்டா விமான நிலையம் நிலையம் நிலையம் | [39] | |
கர்நாடகா | பெங்களூரு | கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் | விமான முனையம் | [23] |
கேரளா | கொச்சி | கொச்சின் சர்வதேச விமான நிலையம் | [40] | |
மத்திய பிரதேசம் | இந்தூர் | தேவி அகிலா பாய் கோல்கர் விமான விமான விமான நிலையம் | [41] | |
மகாராஷ்டிரா | மும்பை | சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான சர்வதேச விமான நிலையம் | Secondary Hub | [36][42] |
நாக்பூர் | டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையம் | நிறுத்தப்பட்டது | [43] | |
புனே | புனே விமான நிலையம் | [44] | ||
மணிப்பூர் | இம்பால் | இம்பால் விமான நிலையம் | [45] | |
ஒடிசா | புவனேஸ்வர் | பிஜு பட்நாயக் விமான நிலையம் | ||
பஞ்சாப் | அம்ரிஸ்டர் | ஸ்ரீ குரு ராம் தாஸ் தாஸ் ஜி சர்வதேச விமான நிலையம் | நிறுத்தப்பட்டது | [46] |
ராஜஸ்தான் | ஜெய்ப்பூர் | ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையம் | [37] | |
தமிழ்நாடு | சென்னை | சென்னை சர்வதேச விமான நிலையம் | ||
தெலுங்கானா | ஹைதராபாத் | ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் | ||
திரிபுரா | அகர்தலா | மகாராஜா பிர் பிக்ரம் விமானநிலையம் | [47] | |
மேற்கு வங்காளம் | கொல்கத்தா | [[நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம் நிலையம் சர்வதேச விமான நிலையம் நிலையம் போஸ் சர்வதேச விமான நிலையம் நிலையம் சர்வதேச விமான நிலையம் போஸ் சர்வதேச விமான நிலையம் நிலையம் சர்வதேச விமான நிலையம் ]] | ||
சிலிகுரி | பக்டோக்ரா விமான நிலையம் | [39] |
2019ஆம் ஆண்டு டிசம்பர் கணக்கின்படி ஏர் ஆசியா இந்தியா நிறுவனம் கீழ்கண்ட விமானங்களை இயக்கி வருகிறது:[48][49]
Aircraft | In service | Orders | Passengers | Notes |
---|---|---|---|---|
Airbus A320-200 | 27 | 73[50] | 180 | |
Total | 27 | 73 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.