இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
எஸ். எஸ். சந்திரன் (இறப்பு:9 அக்டோபர் 2010) தமிழ்த் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் நகைச்சுவை செல்வர், கலைமாமணி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.
80களிலும், 90களின் துவக்கத்திலும், இயக்குநர் ராமநாராயணன் இயக்கத்தில், ஏராளமான படங்களில் நடித்தவர். நகைச்சுவை, மற்றும் குணசித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்துடன் மாப்பிள்ளை, உழைப்பாளி ஆகிய படங்களில் நடித்துள்ளார். பாட்டி சொல்லை தட்டாதே, தங்கமணி ரங்கமணி, சகாதேவன் மகாதேவன், கதாநாயகன் ஆகிய படங்களில் இவரது நடிப்பு சிறப்பாகப் பேசப்பட்டது. ஒருமுறை சொல்லி விடு, எங்கள் குரல் ஆகிய படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் "வாங்க பேசலாம்" என்ற நிகழ்ச்சியை டெல்லி கணேசுடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் மன்னார்குடி சென்றிருந்தபோது, 2010 அக்டோபர் 9 அதிகாலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பால் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 69. எஸ்.எஸ். சந்திரனுக்கு ராஜம் என்ற மனைவியும் ரோஹித், ரங்கராஜ் என்ற மகன்களும் கண்மணி என்ற மகளும் உள்ளனர்.
ஆண்டு | படம் | மொழி | பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|---|
2004 | ஒரு முறை சொல்லிவிடு | தமிழ் | ||
2003 | சொக்கத்தங்கம் (திரைப்படம்) | தமிழ் | ||
2001 | சீறிவரும் காளை | தமிழ் | ||
2001 | நினைக்காத நாளில்லை | தமிழ் | ||
2000 | காக்கைச் சிறகினிலே | தமிழ் | ||
2000 | திருநெல்வேலி | தமிழ் | ||
2000 | காதல் ரோஜாவே | தமிழ் | ||
1999 | உனக்காக எல்லாம் உனக்காக | தமிழ் | ||
1999 | பெரியண்ணா | தமிழ் | ||
1999 | மனம் விரும்புதே உன்னை | தமிழ் | காசி | |
1999 | மன்னவரு சின்னவரு | தமிழ் | ||
1998 | வேட்டிய மடிச்சு கட்டு | தமிழ் | ||
1998 | புதுமைப்பித்தன் | தமிழ் | ||
1998 | நாம் இருவர் நமக்கு இருவர் | தமிழ் | ||
1998 | கவலை படாதே சகோதரா | தமிழ் | ||
1997 | ஒன்ஸ்மோர் | தமிழ் | ||
1997 | நல்ல மனசுக்காரன் | தமிழ் | ||
1995 | வாழ்க ஜனநாயகம் | தமிழ் | ||
1996 | புதிய பராசக்தி | தமிழ் | S.S | |
1996 | திரும்பிப்பார் | தமிழ் | கணக்கு | |
1995 | சீதனம் (திரைப்படம்) | தமிழ் | வரதராஜன் | |
1995 | படிக்கிற வயசுல | தமிழ் | ||
1995 | விஷ்ணு | தமிழ் | வரதராஜன் | |
1995 | கல்யாணம் | தமிழ் | ||
1995 | சின்னமணி | தமிழ் | ||
1995 | புதிய ஆட்சி | தமிழ் | கண்ணுசாமி | |
1995 | கருப்பு நிலா | தமிழ் | பி.கே.ஆர் | |
1994 | புதிய மன்னர்கள் | தமிழ் | ||
1994 | வாங்க பார்ட்னர் வாங்க | தமிழ் | ||
1994 | சின்னமுத்து (திரைப்படம்) | தமிழ் | ||
1994 | செவத்த பொண்ணு | தமிழ் | ||
1994 | தாட்பூட் தஞ்சாவூர | தமிழ் | ||
1994 | தாமரை | தமிழ் | பூசாரி | |
1994 | நம்ம அண்ணாச்சி | தமிழ் | ||
1994 | பட்டுக்கோட்டை பெரியப்பா | தமிழ் | ||
1994 | பவித்ரா (திரைப்படம்) | தமிழ் | ரகுநாதனின் பக்கத்து வீட்டுக்காரர் | |
1994 | மேட்டுப்பட்டி மிராசு | தமிழ் | கார்மேகம் | |
1994 | வண்டிச்சோலை சின்ராசு | தமிழ் | ||
1994 | அன்பு மகன் | தமிழ் | ||
1994 | வாட்ச்மேன் வடிவேலு | தமிழ் | ||
1994 | வீட்டைப்பாரு நாட்டைப்பாரு | தமிழ் | ||
1994 | ஹீரோ | தமிழ் | ||
1994 | அமைதிப்படை (திரைப்படம்) | தமிழ் | ||
1994 | இளைஞர் அணி (திரைப்படம்) | தமிழ் | காளியப்பன் | |
1994 | ஒரு வசந்த கீதம் | தமிழ் | ||
1994 | கில்லாடி மாப்பிள்ளை | தமிழ் | ||
1993 | கற்பகம் வந்தாச்சு | தமிழ் | Mayilsamy | |
1993 | என் இதயராணி | தமிழ் | ||
1993 | ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் | தமிழ் | ||
1993 | தூள் பறக்குது | தமிழ் | ||
1993 | திருடா திருடா | தமிழ் | ||
1993 | உழைப்பாளி (திரைப்படம்) | தமிழ் | ||
1991 | தமிபிக்கு ஒரு பாட்டு | தமிழ் | ||
1990 | மருது பாண்டி | தமிழ் | ||
1990 | மை டியர் மார்த்தாண்டன் | தமிழ் | ||
1990 | பெரியவீட்டுப் பண்ணக்காரன் | தமிழ் | ||
1990 | என் வீடு என் கணவர் | தமிழ் | ||
1990 | சாத்தான் சொல்லைத் தட்டாதே | தமிழ் | ஏல வணிகர் | |
1989 | மாப்பிள்ளை | தமிழ் | ||
1989 | ராஜா சின்ன ரோஜா | தமிழ் | வேலாயாள் | |
1989 | வெற்றி விழா | தமிழ் | சிற்றப்புத் தோற்றம் | |
1989 | பாட்டுக்கு ஒரு தலைவன் | தமிழ் | சிங்காரம் | |
1989 | ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் | தமிழ் | ||
1989 | சின்னப்பதாஸ் (திரைப்படம்) | தமிழ் | ||
1989 | ஆடி விரதம் | தமிழ் | ||
1989 | யாமிருக்க பமேன் | தமிழ் | ||
1989 | யோகம் ராஜயோகம் | தமிழ் | ||
1989 | கண் சிமிட்டும் நேரம் | தமிழ் | ||
1989 | சகாதேவன் மகாதேவன் | தமிழ் | அரசியலவாதி ஆடியபாதம் | |
1989 | வாய்க் கொழுப்பு | தமிழ் | ||
1989 | புருஷன் எனக்கு அரசன் (திரைப்படம்) | தமிழ் | ||
1989 | தங்கைக்கோர் கீதம் | தமிழ் | ||
1989 | தூக்கு மேடை | தமிழ் | ||
1989 | மன்மத ராஜாக்கள் | தமிழ் | ||
1988 | உழைத்து வாழ வேண்டும் | தமிழ் | Peter | |
1988 | நல்லவன் | தமிழ் | ||
1988 | பாட்டி சொல்லைத் தட்டாதே | தமிழ் | ||
1988 | கதாநாயகன் | தமிழ் | ||
1988 | கணம் கோர்ட்டார் அவர்களே | தமிழ் | Desikachari | |
1988 | தெற்கத்திக்கள்ளன் | தமிழ் | திரைப்பட இயக்குநர் | |
1987 | உழவன் மகன் (திரைப்படம்) | தமிழ் | கணக்குப் பிள்ளை | |
1987 | கூலிக்காரன் (திரைப்படம்) | தமிழ் | வெங்கடாச்சலம் | |
1987 | பூமழை பொழியுது | தமிழ் | ||
1986 | ஜோதிமலர் | தமிழ் | ||
1985 | ஆகாயத் தாமரைகள் | தமிழ் | ||
1985 | உனக்காக ஒரு ரோஜா | தமிழ் | ||
1984 | வாய்ப்பந்தல் | தமிழ் | ||
1984 | நன்றி (திரைப்படம்) | தமிழ் | Punniyakodi | |
1984 | வெற்றி | தமிழ் | ||
1983 | அடுத்த வாரிசு | தமிழ் | ||
1983 | சரணாலயம் | தமிழ் | ||
1981 | ஆணிவேர் (1981 திரைப்படம்) | தமிழ் | ||
ஆண்டு | படம் | குறிப்புகள் |
---|---|---|
1996 | பொம்மள சிரிச்சா போச்சு | |
ஆண்டு | படம் | நடிகர் | குறிப்பு |
---|---|---|---|
1997 | தேவராகம் | ஜனார்த்தனன் | |
2000 | சண்முகப் பாண்டியன் | ஏ. வி. எஸ். | |
Seamless Wikipedia browsing. On steroids.