From Wikipedia, the free encyclopedia
மன்னவரு சின்னவரு (Mannavaru Chinnavaru) என்பது 1999இல் பி. என். இராமச்சந்திர ராவ் இயக்கத்தில் வெளியான தமிழ்த்திரைப்படம்[1].இப்படத்தில் சிவாஜி கணேசன், அர்ஜூன், சௌந்தர்யா, கே.ஆர். விஜயா ஆகியோர் முன்னணிப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நடிகர் அர்ஜூனின் நூறாவது படம். இப்படம் சுபவர்தா என்னும் தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ்வடிவமாகும்[2][3]. இப்படத்தின் தெலுங்கு வடிவத்தில் அர்ஜூன், சௌந்தர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
மன்னவரு சின்னவரு | |
---|---|
மன்னவரு சின்னவரு | |
இயக்கம் | பி. என். இராமச்சந்திர ராவ் |
தயாரிப்பு | எஸ். தாணு |
கதை | பி.என். இராமச்சந்திரா ராவ் பிரசன்ன குமார் |
திரைக்கதை | பி.என். இராமச்சந்திரா ராவ் |
இசை | கீதபிரியன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் அர்ஜுன் சௌந்தர்யா மகேஷ்வரி |
கலையகம் | வி. கிரியேசன்சு |
வெளியீடு | 15 சனவரி 1999 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அர்ஜுன் தனது தெலுங்குப் படமான சுபாவர்தாவை தமிழில் மறு ஆக்கம் செய்வதில் ஆர்வம் காட்டினார். தாணு ஒரு முக்கியமான பாத்திரத்திற்காக சிவாஜி கணேசனை அணுகினார், அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்தின் தொடக்க விழா சென்னையில், தேனாம்பேட்டை, காமராஜர் மண்டபத்தில், 6 ஆகஸ்ட் 1998 அன்று நடந்தது.
Seamless Wikipedia browsing. On steroids.