Remove ads
1988 ஆண்டைய தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
பாட்டி சொல்லைத் தட்டாதே என்பது ஏ. வி. எம். தயாரிப்பில் ராஜசேகர் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும்.[1] இதில் பாண்டியராஜன், ஊர்வசி மற்றும் மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இத் திரைப்படத்தில் வித்தியாசமான மகிழுந்து அடங்கிய இறுதிக் காட்சி மிகச் சிறந்த படக்காட்சியாக அனைவராலும் பேசப்பட்டது.[2] இத் திரைப்படம் தெலுங்கு மொழியில் 'பம்ம மாட்ட பங்காரு பாட்ட’ என்ற பெயரில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்தது.[3]
பாட்டி சொல்லைத் தட்டாதே | |
---|---|
இயக்கம் | ராஜசேகர் |
தயாரிப்பு | எம். சரவணன் எம். பாலசுப்ரமணியன் |
கதை | சித்ராலயா கோபு |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | பாண்டியராஜன் ஊர்வசி மனோரமா எஸ். எஸ். சந்திரன் வெண்ணிற ஆடை மூர்த்தி |
ஒளிப்பதிவு | ரங்கா |
படத்தொகுப்பு | ஆர்.விட்டல், சி. லாஸ்னி |
கலையகம் | ஏ. வி. எம் புரடக்ஷன்ஸ் |
வெளியீடு | 22 ஜூலை 1988 |
ஓட்டம் | 148 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கண்ணாத்தா (மனோரமா), பணக்கார வயதான பெண்மணி. அவரது கணவர் வஜ்ஜிரன் சுப்பையா (எஸ். எஸ். சந்திரன்) ஒரு வேட்டைக்காரர். அவர்கள் தாய் தந்தையை இழந்த தங்களது ஒரே பேரன் செல்வத்தின் (பாண்டியராஜன்) வருகைக்காக காத்திருக்கின்றனர். தனது படிப்பினை முடித்து, புகைவண்டியில் ஊருக்கு திரும்பி வரும் செல்வம், சீதாவை (ஊர்வசி) சந்திக்கிறான். சீதாவின் பெற்றோரால் அவளுக்கு நடத்தப்படவுள்ள கட்டாயத் திருமணத்தை தவிர்ப்பதற்காக, வீட்டிற்கு செல்ல மறுக்கிறாள். மேலும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதல் காரணமாக, செல்வம் - சீதா அவர்களது வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசிக்கின்றனர்.
இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் போது பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். அலுவலகத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தெரியாதது போல நடந்து கொள்வது இருவருக்குமே மிகக் கடினமாக உணர்கின்றனர். அதனால் பாட்டியிடம் தங்களுக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருப்பதாக பொய் கூறுகின்றனர். இதற்கிடையில் வஜ்ஜிரன் சுப்பையா தனது பேரனைப் பார்ப்பதற்காக சென்னை வருகிறார். இதை அறிந்த செல்வம், அனுசுயா (சில்க் சுமிதா) என்பவரிடமிருந்து குழந்தையை வாடகைக்கு எடுத்து வருகிறான். சுப்பையாவும் குழந்தையைப் பார்த்து தனது பேரன் என்று நம்பி விடுகிறார். இதைக் கண்ட அனுசூயா சூழ்ச்சி செய்து தம்பதிகளுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். பின்னர் நடைபெறும் சில நிகழ்வுகளுக்குப் பிறகு செல்வத்தின் தாத்தா மற்றும் பாட்டிக்கு உண்மை தெரிந்து குழப்பம் நீங்கி படம் மகிழ்ச்சியாக முடிகிறது. சித்ராலயா கோபுவால் எழுதப்பட்ட இப்படத்தின் வசனங்கள் இன்றளவும் பெரிதும் பேசப்படுகின்றது.
கார்ட்டூன் வடிவத்தில் 1988 ஆம் வருடம் இந்தியத் தொலைக்காட்சியில் "பாட்டி சொல்லைத் தட்டாதே" திரைப்படத்திற்கு முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இது திரைப்பட ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இப் படத்தில் இடம் பெற்ற மகிழுந்து தொடர்பான காட்சிகள் பெருமளவில் வரவேற்பு பெற்றது[4]. ஏ. வி. எம். தயாரிப்பில் வெளிவந்த இப் படம் 175 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.