தமிழ் திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
சித்ராலயா கோபு (Chitralaya Gopu) என்பவர் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் ஆவார். இவர் ஏறக்குறைய 60 படங்களுக்கு எழுதியும், 27 படங்களை இயக்கியுள்ளார்.[3] இவர் மூன்று தெய்வங்கள் , சாந்தி நிலையம் போன்ற உணர்வு பூர்வமான படங்களுக்கும், காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம், உத்தரவின்றி உள்ளே வா போன்ற நகைச்சுவை படங்களுக்கும் திரைக்கதை அமைத்துள்ளார்.[4]
ஸ்ரீதரும் சடகோபனும் செங்கல்பட்டு புனித ஜோசப் உயர்நிலைப் பளியில் பயிலும் காலத்திலிருந்து பல்ய நண்பர்கள்.[5] இருவரும் நாடக எழுத்தாளர்கள்; ஸ்ரீதர் மேடை நாடகங்களை எழுதி நாயகனாக நடித்தார், அதேசமயம் சடகோபன் நாடகத்தின் நகைச்சுவைப் பகுதிகளை எழுதி, நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்று நடித்தார்.[2] பின்னர், ஸ்ரீதருக்கு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தபோது, நகைச்சுவையைப் பகுதிகளை உருவாக்க சடகோபனை அழைத்துக்கொண்டார்.[6][7] கல்யாணப் பரிசு (1959) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஸ்ரீதர் சொந்த தயாரிப்பு நிறுவனமாக சித்ராலயாவைத் தொடங்கினார்.[8] சடகோபன் சித்ராலயா கோபு என்ற பெயரில் புகழ்பெற்றார்.
இவர் 1992 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கலைமாமணி விருதைப் பெற்றார்.
அமெரிக்காவில் படம்பிடிக்கப்பட்ட வாஷிங்டனில் திருமணம் என்ற தொலைக்காட்சித் தொடரை இவர் நடித்து இயக்கியுள்ளார்.
ஆண்டு | திரைப்படம் | பணியாற்றியவை | குறிப்புகள் | |
---|---|---|---|---|
இயக்கம் | எழுத்து | |||
1959 | கல்யாண பரிசு | இ | ஆ | |
1962 | நெஞ்சில் ஓர் ஆலயம் | இ | ஆ | |
1964 | காதலிக்க நேரமில்லை | இ | ஆ | |
1964 | கலைக்கோவில் | இ | ஆ | |
1966 | பியார் கியா ஜா | இ | ஆ | காதலிக்க நேரமில்லையின் மறு ஆக்கம் |
1966 | கொடிமலர் | இ | ஆ | |
1967 | நெஞ்சிருக்கும் வரை | இ | ஆ | |
1967 | ஊட்டி வரை உறவு | இ | ஆ | |
1967 | அனுபவம் புதுமை | இ | ஆ | |
1968 | கலாட்டா கல்யாணம் | இ | ஆ | |
1969 | சாந்தி நிலையம் | இ | ஆ | |
1970 | வீட்டுக்கு வீடு | இ | ஆ | |
1971 | மூன்று தெய்வங்கள் | இ | ஆ | |
1971 | சுமதி என் சுந்தரி | இ | ஆ | |
1971 | உத்தரவின்றி உள்ளே வா | இ | ஆ | |
1972 | காசேதான் கடவுளடா | ஆ | ஆ | |
1974 | அத்தையா மாமியா | ஆ | ஆ | |
1974 | பெண் ஒன்று கண்டேன் | ஆ | ஆ | |
1974 | கலாட்டே சம்சாரா | இ | ஆ | |
1977 | காலமடி காலம் | ஆ | ஆ | |
1977 | ராசி நல்ல ராசி | ஆ | ஆ | |
1979 | அலங்காரி | ஆ | ஆ | |
1979 | ஆசைக்கு வயசில்லை | ஆ | ஆ | |
1979 | தைரியலட்சுமி | ஆ | ஆ | |
1984 | ராஜா வீட்டு கண்ணுக்குட்டி | இ | ஆ | |
1985 | தங்க மாமா 3D | இ | ஆ | |
1985 | வெள்ளை மனசு | ஆ | ஆ | |
1985 | தென்றலே என்னைத் தொடு | இ | ஆ | |
1988 | வசந்தி | ஆ | ஆ | |
1988 | பாட்டி சொல்லைத் தட்டாதே | இ | ஆ | |
1989 | டெல்லி பாபு | ஆ | ஆ | |
1990 | உலகம் பிறந்தது எனக்காக | இ | ஆ | கடைசி படம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.