2007 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
என்னைப் பார் யோகம் வரும் (Ennai Paar Yogam Varum) என்பது 2007 ஆம் ஆண்டு வெளியான தமிழ் அதிரடி நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். எம். ஜமீன் ராஜ் இயக்கிய இந்த படத்தில் மன்சூர் அலி கான், புதுமுகம் மஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், இதில் காண்டீபன், குட்டி, பிரியங்கா ஷைலு, ஆர். சுந்தர்ராஜன், அனுராதா, அபிநயஸ்ரீ, பொன்னம்பலம், மாணிக்க விநாயகம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். மன்சூர் அலி கான் தயாரித்த இப்படத்திற்கு ஏ. கே. வாசகன் இசை அமைத்தார். படம் பல தாமதங்களுக்குப் பிறகு 2007 சூலை 6 அன்று வெளியானது.[1]
என்னைப் பார் யோகம் வரும் | |
---|---|
இயக்கம் | எம். ஜமீன் ராஜ் |
தயாரிப்பு | மன்சூர் அலி கான் |
கதை | எம். ஜமீன் ராஜ் (உரையாடல்) |
திரைக்கதை | எம். ஜமீன் ராஜ் |
இசை | ஏ. கே. வாசகன் (பாடல்கள்) தேவேந்திரன் (இசையமைப்பாளர்) (பின்னணி இசை) |
நடிப்பு | மன்சூர் அலி கான் மஞ்சு |
ஒளிப்பதிவு | அசோக்ராஜன் |
படத்தொகுப்பு | கே. எம். பி. குமார் |
கலையகம் | ராஜ் கென்னடி பிலிம்ஸ் |
வெளியீடு | சூலை 6, 2007 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தனது சொந்த பதாகையின் கீழ் மூன்று படங்களைத் தயாரித்த பின்னர், நடிகர் மன்சூர் அலி கான் என்னைப் பார் யோகம் வரும் படத்தின் வழியாக மீண்டும் படத்தயாரிப்புக்கு வந்தார். இந்த படத்தில் ஒரு பாடலில் தொல். திருமாவளவன் தோன்றினார். நகைச்சுவை அம்சங்களுடன் கூடிய குறைந்த செலவில் எடுக்கபட்ட படம் இது என்று மன்சூர் அலிகான் கூறினார்.[2][3]
இப்படத்திற்கு திரைப்பட இசையமைப்பாளர் ஏ. கே. வாசகன் இசையமைத்தார். 2007 ஆம் ஆண்டில் வெளியான இந்த இசைப்பதிவில் திருவள்ளுவர், ஔவையார், மன்சூர் அலி கான், ஏ. கே. வாசகன் ஆகியோரால் எழுதப்பட்ட ஆறு பாடல்கள் உள்ளன.[4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "கோயம்பேடு கொய்யாப்பழம்" | மன்சூர் அலி கான், ஏ. கே. வாசகன், லைலா அலி கான் | 5:22 | |||||||
2. | "ஏறுவாக்கா சாகரோ" | பிரசன்னா, கவிதா கிருஷ்ணமூர்த்தி | 4:03 | |||||||
3. | "போலீஸ் போலிஸ்" | அபிலாஸ், மைதிலி, மன்சூர் அலி கான் | 4:21 | |||||||
4. | "என்னைப் பார் யோகம் வரும்" | பைரவி | 3:15 | |||||||
5. | "வேலை வெட்டிக்கெல்லாம்" | கே. எஸ். மகாதேவன், சிந்தூரி | 3:48 | |||||||
6. | "நான் வைகைக்ககாரி" | ரணினா ரெட்டி, எஸ். எம். மூசா | 4:14 | |||||||
மொத்த நீளம்: |
25:03 |
4 சூன் 2007 அன்று, ஒரு செய்தித்தாளில் இடம்பெற்ற படத்தின் விளம்பரம் பலரின் கவனத்தை ஈர்த்தது. படத்தை வெளியிட திரையரங்குகள் கிடைக்காததைக் கொண்டு அந்த விளம்பரம் நகைச்சுவையாக வெளியிடப்பட்டது.[5] இந்த படம் முதலில் 2007 சூன் 15, அன்று பெரிய செலவில் எடுக்கபட்ட படமான சிவாஜியுடன் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் சென்னை நகரத்தில் திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால், மன்சூர் அலி கான் தனது பட வெளியீட்டை ஒத்திவைத்தார். இதுகுறித்து எந்தக் கொம்பனாலும் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியாது. கருப்புப் பணத்தை ஒழிக்கலாம்ன்னு எவனாவது சொன்னா அதை இருநூறு ரூபா டிக்கெட் ‘பிளாக்ல’ வாங்கி பாக்காதீங்க என்று விளம்பரம் வெளியிட்டார்.[6] இது இறுதியாக 2007 சூலை 6 அன்று வெளியிடப்பட்டது.[7] படம் வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு, அவரது படத்திற்கான மற்றொரு விளம்பரத்தில் அஜித் குமார் நடித்த கிரீடம் (2007) படத்தைக் குறிப்பிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தது.[8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.