திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
நெல்லை சிவா (Nellai Siva; 16 சனவரி 1952 – 11 மே 2021) என்ற திரைப்பெயரால் அறியப்பட்ட சிவநாதன் சண்முகவேலன் ராமமூர்த்தி என்பவர் ஒரு நகைச்சுவை நடிகர் மற்றும் துணை நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார்.[2] மகாபிரபு, வெற்றிக் கொடி கட்டு, கண்ணும் கண்ணும் போன்ற பிரபல திரைப்படங்களில் இவர் பணியாற்றியுள்ளார். திரைப்படங்களில் இவர் முற்றிலும் நெல்லை வட்டார வழக்கில் பேசும் வழக்கம் உள்ளவர். இது இவரை மற்ற துணை நடிகர்களிடமிருந்து தனித்துவமாகக் காட்டுகிறது. இவர் தனது வாழ்க்கையில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது முதல் படம் 1985 இல் வெளியான ஆண்பாவம் ஆகும்.[3][4]
நெல்லை சிவா | |
---|---|
பிறப்பு | சிவநாதன் சண்முகவேலன் ராமமூர்த்தி 16 சனவரி 1952 தமிழ்நாடு, திருநெல்வேலி இராதாபுரம், பணகுடி, வேப்பிலாங்குளம், |
இறப்பு | 11 மே 2021 69) [1] | (அகவை
தேசியம் | இந்தியர் |
பணி | திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1985–2021 |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | வெற்றிக் கொடி கட்டு, கண்ணும் கண்ணும் |
தொலைக்காட்சி | பாண்டியன் ஸ்டோர்ஸ் (தொலைக்காட்சித் தொடர்), மாமா மாப்பிள்ளை. |
நெல்லை சிவா 16 சனவரி 1952 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வேப்பிலையன்குளம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். சிவாஜி கணேசனின் தீவிர ரசிகராக இருந்த இவர், திரைப்படங்களில் நடிப்பதற்காக சென்னை வந்தார். அந்த நேரத்தில் நடிப்பு வாய்ப்புகளைத் தேடியபடி இருந்த நடிகர்களான மன்சூர் அலி கான் மற்றும் போண்டா மணி ஆகியோரை சந்தித்து நல்ல நட்பைப் பெற்றார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக போராடிய பின்னர், பாக்யராஜை சந்தித்தார். தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் புகழ் பெற்றார்.[5] அப்போதைய பிரபல நடிகர் நாகேசுடன் இணைந்து நடித்து தனது திரைப்பட வாழ்க்கையையும் தொடங்கினார். நாகேசு இவரது திருநெல்வேலி வட்டாரமொழியை படப்பிடிப்புத் தளத்தில் பாராட்டி, அதை நகைச்சுவைக்கு பயன்படுத்திக் கொள்ள ஊக்குவித்தார்.[6]
1985ஆம் ஆண்டில் பாண்டியராஜன் இயக்கிய ஆண்பாவம் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். பின்னர், இவர் சிறிய வேடங்களில் நடித்துவந்தார். 1990களின் பிற்பகுதியில் இவர் ஒரு நகைச்சுவை துணைநடிகராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். வெற்றிக் கொடி கட்டு என்ற படத்தில் தேநீர் கடை உரிமையாளராக நடித்தார். இத்திரைப்படத்திற்குப் பின்னர், இவர் சாமி, அன்பே சிவம், திருப்பாச்சி, கிரீடம் போன்ற பெரிய திரைப்படங்களில் நடிக்குமளவு முன்னேற்றம் பெற்றார். 2000களில் வடிவேலு மற்றும் விவேக் ஆகியோருடன் படங்களில் நடித்தார். நடிகர் வடிவேலு உடன் நடித்த திரைப்படங்களில் இவரது நகைச்சுவை வேடங்களுக்காக இவர் மிகவும் பிரபலமானார்.[7][8][9][10]
2020 இல், விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் மாமா மாப்பிள்ளையிலும் கலந்து கொண்டார்.
நீங்கள் இதை விரிவாக்கலாம்.
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1985 | ஆண்பாவம் | கிராமத்தான் | அறிமுகம் |
1993 | ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் | ||
1994 | என் ஆசை மச்சான் | ||
1994 | சீவலப்பேரி பாண்டி | ||
1994 | இராவணன் | புண்ணாக்கு | |
1995 | காந்தி பிறந்த மண் | ||
1995 | சிந்துபாத் | ||
1996 | மகாபிரபு | உள்ளூர் அரசியல்வாதி | |
1996 | அருவா வேலு | காவல் அதிகாரி | |
1996 | ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே | சந்தனக் கருப்பன் | |
1996 | டாடா பிர்லா | தலைமைக் காவலர் | |
1996 | வாழ்க ஜனநாயகம் | ||
1998 | கண்ணாத்தாள் | ||
1999 | உன்னை தேடி | ||
1999 | சுயம்வரம் | விடுதி காப்பாளர் | |
1999 | உன்னருகே நானிருந்தால் | ||
2000 | கண்ணன் வருவான் | ||
2000 | வெற்றிக் கொடி கட்டு | தேனீர் கடை உரிமையாளர் | |
2002 | இவன் | ||
2002 | ரன் | அரசியல்வாதி | |
2003 | அன்பே சிவம் | ||
2003 | சாமி | பெருமாள் பிச்சையின் ஆதரவாளர் | |
2003 | வின்னர் | ஜோசியக்காரர் | |
2003 | திருமலை | திருமலையின் நண்பர் | |
2003 | சிந்தாமல் சிதறாமல் | ||
2005 | திருப்பாச்சி | கிராமத்தான் | |
2005 | அன்பே ஆருயிரே | போக்குவரத்து காவல் ஆய்வாளர் | |
2005 | ஒரு நாள் ஒரு கனவு | ||
2005 | பதவி படுத்தும் பாடு | ||
2006 | இம்சை அரசன் 23ம் புலிகேசி | புலவர் | |
2006 | வட்டாரம் | ||
2005 | இலக்கணம் | வீட்டுத் தரகர் | |
2007 | மணிகண்டா | ||
2007 | திருத்தம் | தலைமைக் காவலர் | |
2007 | என்னைப் பார் யோகம் வரும் | தலைமைக் காவலர் | |
2007 | என் உயிரினும் மேலான | ||
2007 | கிரீடம் | தானி ஓட்டுநர் | |
2008 | சக்ரவியூகம் | காவல் அதிகாரி | |
2008 | சிலந்தி | ||
2008 | மலரினும் மெல்லிய | ||
2008 | அறை எண் 305ல் கடவுள் | தேனீர் கடை உரிமையாளர் | |
2008 | சுட்ட பழம் | ||
2008 | தித்திக்கும் இளமை | பரந்தாமன் | |
2008 | இயக்கம் | ||
2008 | கண்ணும் கண்ணும் | சடலை | |
2008 | மாணவன் நினைத்தால் | தனியார் அஞ்சல் ஊழியர் | |
2008 | அழைப்பிதழ் | ||
2008 | மதுரை பொண்ணு சென்னை பையன் | கணித ஆசிரியர் | |
2008 | வேள்வி | காவலர் | |
2009 | படிக்காதவன் | கோதண்டம் | |
2009 | தோரணை | ||
2009 | குடியரசு | ||
2009 | மாதவி | இருசக்கர வாகனத்தில் வருபவர் | |
2009 | பிஞ்சு மனசு | அண்ணாச்சி | |
2009 | அய்ம்புலன் | ||
2009 | கந்தசாமி | காவலர் | |
2009 | மதுரை டூ தேனி | ||
2009 | வேடப்பன் | அண்ணாச்சி | |
2010 | அம்பாசமுத்திரம் அம்பானி | தலைமைக் காவலர் | |
2010 | கற்றது களவு | ||
2010 | தமிழ் படம் | அமைச்சர் | |
2010 | பா. ர. பழனிச்சாமி | ||
2010 | அழகான பொண்ணுதான் | ||
2010 | நீயும் நானும் | நெல்லை | |
2011 | மின்சாரம் | தூயவன் | |
2012 | வாச்சாத்தி | ||
2012 | கழுகு | காவல் அதிகாரி | |
2012 | சகுனி | அரசியல்வாதி | |
2013 | புத்தகம் | போக்குவரத்து காவலர் | |
2013 | திருமதி தமிழ் | ||
2013 | பட்டத்து யானை | காவலர் | |
2013 | யாருடா மகேஷ் | ||
2014 | அழகிய பாண்டிபுரம் | ||
2014 | சூரன் | ||
2015 | சவாலே சமாளி | ||
2015 | விந்தை | ||
2015 | எலி | ||
2015 | பாபநாசம் | ||
2015 | துணை முதல்வர் | ||
2015 | சகலகலா வல்லவன் | ||
2015 | விரைவில் இசை | ||
2015 | கலை வேந்தன் | ||
2016 | மிருதன் | குருமூர்த்தியின் அடியாள் | |
2016 | பதிலடி | ||
2016 | அன்பானவன் அசராதவன் அடங்காதவன் | ||
2016 | ஜித்தன் 2 | விஜயகுமார் | |
2016 | தகடு | பூங்கா அதிகாரி | |
2016 | நேர்முகம் | ||
2016 | யோக்கியன் வாரான் | ||
2017 | ஆரம்பம் அட்டகாசம் | ||
2017 | விருதாச்சலம் | ||
2017 | உன்னை தொட்டு கொல்லவா | ||
2017 | நம்மகத | ||
2018 | சொல்லிவிடவா | போக்குவரத்து காவல் அதிகாரி | |
2018 | படித்தவுடன் கிழித்துவிடவும் | ||
2018 | சீமத்துரை | காவல் அதிகாரி | |
2019 | முடிவில்லா புன்னகை | ||
2019 | கழுகு 2 | தலைமைக் காவலர் | |
2019 | உதய் | ||
2019 | 50 ரூவா | ||
2019 | மங்குனி பாண்டிகள் | ||
2019 | பேய் வால் புடிச்ச கதை | ||
2019 | அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் | ||
2020 | என் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா | ||
2020 | பச்சை விளக்கு | ||
2020 | சொல்லுங்கண்ணே சொல்லுங்க | ||
2021 | பேய் இருக்க பயமேன் | ||
2021 | பழகிய நாட்கள் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.