From Wikipedia, the free encyclopedia
தேவேந்திரன் தமிழ்த் திரைப்படத்துறையில் உள்ள ஓர் இசையமைப்பாளர். பல தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் பாடல்களும் அமைத்துள்ளார். 1987ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த வேதம் புதிது திரைப்படத்தின் கண்ணுக்குள் நூறு நிலவா எனும் பாட்டின் மூலம் புகழடைந்தவர்.
தேவேந்திரன் | |
---|---|
இயற்பெயர் | தேவேந்திரன் |
பிறப்பிடம் | திருவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
இசைக்கருவி(கள்) | விசைப்பலகை, தோல் இசைக்கருவிகள் |
இசைத்துறையில் | 1987–நடப்பு |
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே வடகரையில் பிறந்த தேவேந்திரன், கருநாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசையை சிவகிரி, சீமதுறை மற்றும் மதுசூதனனிடமும், மேற்கத்திய இசையை தாம்சன் என்பவரிடமும் பயின்றார்[1].
Year | Movie title | Notes |
---|---|---|
1987 | மண்ணுக்குள் வைரம் | |
1987 | வேதம் புதிது | |
1987 | ஆண்களை நம்பாதே | |
1988 | காலையும் நீயே மாலையும் நீயே | |
1988 | உழைத்து வாழ வேண்டும் | |
1988 | கனம் கோர்ட்டார் அவர்களே | |
1994 | முதல் பயணம் | |
2009 | மூணார் | |
2010 | பாலு தம்பி மனசிலே | |
2012 | நானும் என் ஜமுனாவும் | |
Seamless Wikipedia browsing. On steroids.