வேதம் புதிது

பாரதிராஜா இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

வேதம் புதிது

வேதம் புதிது 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சத்யராஜ், அமலா மற்றும் பலர் நடித்திருந்தனர். இசை தேவேந்திரன், கண்ணுக்குள் நூறு நிலவா என்ற பாடல் மிகவும் பிரபலம் ஆனது.

விரைவான உண்மைகள் வேதம் புதிது, இயக்கம் ...
வேதம் புதிது
Thumb
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புச. இரங்கராஜன்
கதைகண்ணன்
நடிப்புசத்யராஜ்
அமலா
சாருஹாசன்
ராஜா
நிழல்கள் ரவி
ஜனகராஜ்
ஒளிப்பதிவுபி. கண்ணன்[1]
வெளியீடு1987
ஓட்டம்130 நிமிடங்கள்[1]
மொழிதமிழ்
மூடு

வகை

கிராமப்படம் / கலைப்படம்

இசை

தேவேந்திரன் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வைரமுத்து பாடல் வரிகளை எழுதினார்.[2][3] பாரதிராஜா எப்பொழுதும் இணைந்து பணி செய்யும் இளையராஜாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தேவேந்திரனிடம் இசையமைக்கச் சொன்னார்.[4] "கண்ணுக்குள் நூறு நிலவா" சண்முகப்பிரியா இராகத்திலும்,[5][6] "சந்திக்கத் துடித்தேன்" பூர்விகல்யாணி இராகத்திலும் அமைந்திருந்தது.[7]

மேலதிகத் தகவல்கள் பாடல்கள், # ...
பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "கண்ணுக்குள் நூறு நிலவா"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 5:14
2. "மந்திரம் சொன்னேன்"  மனோ, எஸ். ஜானகி 4:53
3. "புத்தம் புது ஓலை"  சித்ரா 4:55
4. "மாட்டு வண்டி சாலை"  மலேசியா வாசுதேவன் 4:06
5. "சந்திக்கத் துடித்தேன்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:58
மொத்த நீளம்:
24:06
மூடு

விருதுகள்

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.