![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/11/Steve_Smith_%2528cricketer%2529%252C_2014_%2528cropped%2529.jpg/640px-Steve_Smith_%2528cricketer%2529%252C_2014_%2528cropped%2529.jpg&w=640&q=50)
ஸ்டீவ் சிமித்
ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
ஸ்டீவன் பீட்டர் சிமித்: (Steven Peter "Steve" Smith, பிறப்பு: சூன் 2 1989) ஆத்திரேலியா துடுப்பாட்ட அணியின் மட்டையாளர் மற்றும் முன்னாள் அணித்தலைவர் ஆவார்.[3][4]ஏப்ரல், 2018 அன்றைய நிலவரப்படி பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தேர்வுத் துடுப்பாட்டத் தரவரிசையில் இரண்டாம்lஇடத்தில் உள்ளார்[5][6]. டிசம்பர் 30, 2017 இல் தேர்வுத் துடுப்பாட்ட தரவரிசையில் 947 புள்ளிகள் பெற்றார். இது துடுப்பாட்ட வரலாற்றில் வீரர் ஒருவர் பெறும் இரண்டாவது அதிகபட்ச புள்ளியாகும்.டான் பிராட்மன் 961 புள்ளிகளோடு முதல் இடத்தில் நீடிக்கிறார்.[7] சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[8][9] உள்ளூர் துடுப்பாட்டப் போட்டிகளில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.[10][11]
![]() 2014இல் சிமித் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஸ்டீவன் பீட்டர் டெவரக்ஸ் சிமித் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 2 சூன் 1989 (1989-06-02) (அகவை 34) கொகரா, சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | ஸ்மட்ஜ், ஸ்மித்தி[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.76[2] m (5 அடி 9 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது-கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது-கை காற்சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | முன்-வரிசை மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 415) | 13 ஜூலை 2010 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 29 நவம்பர் 2019 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 182) | 19 பிப்ரவரி 2010 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 11 ஜூலை 2019 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 49 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 43) | 5 பிப்ரவரி 2010 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 8 நவம்பர் 2019 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 49 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007/08–தற்போது | நியூ சவுத் வேல்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011 | வொர்கெஸ்டர்சைர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011/12–2013/14 | சிட்னி சிக்சர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2012–2013 | புனே வாரியர்ஸ் இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014–2015; 2019 | ராஜஸ்தான் ராயல்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016–2017 | ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018 | பார்படோஸ் ட்ரிடன்ட்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2019 | கொமில்லா விக்டோரியன்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 29 நவம்பர் 2019 |
வலது கை சுழற்பந்துவீச்சாளராக முதலில் அணிக்குத் தேர்வானார்[12] தற்போது மட்டையாளராகவிளையாடி வருகிறார்.[13] 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் சில தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். அதன் பின் 2013 ஆம் ஆண்டுகளில் இருந்து இவருக்கு அணியில் நிரந்தர இடம் கிடைத்தது. 2015 ஆம் ஆண்டின் இறுதியில் மைக்கேல் கிளார்க்கிடம் இருந்த அணித்தலைவர் பொறுப்பு இவரிடம் வந்தது. அதன் பின்பு நான்காவது வீரராக விளையாடி வருகிறார்.[14]
இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதைப் பெற்றார்.[15] மேலும் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான விருதையும், 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான ஆலன்பார்டர் பதக்கத்தையும் , 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆத்திரேலியத் தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான விருது,[16] 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆத்திரேலிய ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரருக்கான விருதுகளைப் பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டில் விசுடன்[17] துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பானது இவரை சிறந்த வீரராக அறிவித்தது.[18] 2014 ஆம் ஆண்டில் மார்ட்டின் குரோவ் என்பவர் ஜோ ரூட், விராட் கோலி, கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் சுமித் ஆகிய நான்கு இளம் வீரர்கள் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்கள் எனத் தெரிவித்தார்.[19][20]
மார்ச், 2018 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டத்தில் பந்தை சேதப்படுத்தியதாக விமர்சனத்திற்கு உள்ளானார்.[21][22] பின் ஆத்திரேலியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விசாரணைக்குப் பின் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட இவருக்கு ஓராண்டு தடைவிதித்தது.[23]