மாவிட்டபுரம் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
மாவிட்டபுரம் தொடருந்து நிலையம் (Maviddapuram railway station) இலங்கையின் வடக்கே மாவிட்டபுரம் நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கும் வடக்குப் பாதையின் ஒரு பகுதியாக, இலங்கை ரெயில்வே திணைக்களத்தினால் இலங்கையின் நடுவண் அரசின் கீழ் இந்நிலையம் நிருவகிக்கப்படுகிறது. ஈழப்போரின் காரணமாக வடக்கின் ஏனைய தொடருந்து நிலையங்களைப் போன்று மாவிட்டபுரம் தொடருந்து நிலையமும் 1990 முதல் 2015 வரை இயங்காமல் இருந்து வந்தது. வடக்குப் பாதையின் யாழ்ப்பாணத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையேயான போக்குவரத்து மாவிட்டபுரம் ஊடாக 2015 சனவரி 2 இல் ஆரம்பிக்கப்பட்டது.[1][2]
விரைவான உண்மைகள் மாவிட்டபுரம்மாவிட்டபுரம், பொது தகவல்கள் ...
மாவிட்டபுரம் மாவிட்டபுரம் | |
---|---|
இலங்கைத் தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | மாவிட்டபுரம் இலங்கை |
உரிமம் | இலங்கை தொடருந்து போக்குவரத்து |
தடங்கள் | வடக்குப் பாதை |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயங்குகிறது |
வரலாறு | |
மறுநிர்மாணம் | 2 சனவரி 2015 |
மின்சாரமயம் | இல்லை |
மூடு
|