![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c1/Logo_PH_2016.png/640px-Logo_PH_2016.png&w=640&q=50)
பாக்காத்தான் ராக்யாட்
From Wikipedia, the free encyclopedia
பாக்காத்தான் ராக்யாட் (மலாய்: Pakatan Rakyat (PR); ஆங்கிலம்: People's Alliance; சீன மொழி: 人民聯盟); என்பது மலேசியாவில் ஒரு முறைசாரா மலேசிய அரசியல் கூட்டணி ஆகும். முன்னாள் மாற்று முன்னணி கூட்டணிக்குப் பதிலாக இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் பாக்காத்தான் ராக்யாட் Pakatan Rakyat People's Alliance, சுருக்கக்குறி ...
பாக்காத்தான் ராக்யாட் Pakatan Rakyat People's Alliance | |
---|---|
![]() | |
சுருக்கக்குறி | PR |
தலைவர் | டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் |
குறிக்கோளுரை | ஒன்றுபடுங்கள், மாறுங்கள், ஆசீர்வதியுங்கள் Berpadu, Berubah, Berkat |
தொடக்கம் | 1 ஏப்ரல் 2008 |
கலைப்பு | 16 சூன் 2015 |
முன்னர் | மாற்று முன்னணி |
பின்னர் | பாக்காத்தான் அரப்பான், காகாசான் செசத்திரா |
தலைமையகம் | பெட்டாலிங் ஜெயா, மலேசியா (பிகேஆர்) கோலாலம்பூர், மலேசியா (ஜசெக & பாஸ்) கூச்சிங், மலேசியா (சரவாக் தேசிய கட்சி) |
செய்தி ஏடு | Suara Keadilan; The Rocket; Harakah |
உறுப்பினர் | மக்கள் நீதிக் கட்சி (PKR) ஜனநாயக செயல் கட்சி (DAP) மலேசிய இசுலாமிய கட்சி (PAS) சரவாக் தேசிய கட்சி (SNAP) ஏப்ரல் 2010 - மே 2011 |
கொள்கை | சமூக மக்களாட்சி சமூக தாராளவாதம் சமூக நீதி |
அரசியல் நிலைப்பாடு | மத்திம இடதுசாரி |
நிறங்கள் | ஆரஞ்சு; வெள்ளை |
தேர்தல் சின்னம் | |
![]() | |
இணையதளம் | |
pakatanrakyat.my |
மூடு
இந்த அரசியல் கூட்டணி மலேசியாவின் 12 வது மலேசிய பொது தேர்தலுக்கு பின்னர், அதாவது ஏப்ரல் 1, 2008 அன்று, மக்கள் நீதிக் கட்சி, ஜனநாயக செயல் கட்சி, மலேசிய இஸ்லாமிய கட்சி ஆகியவை சேர்ந்து அமைத்த கூட்டணியாகும்.[1]
பின்னர், 2015-ஆம் ஆண்டில் அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)யும், ஜனநாயக செயல் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் அரப்பான் கூட்டணியை உருவாக்கின.