நயன்தாரா (Nayanthara, பிறப்பு: நவம்பர் 18, 1984; இயற்பெயர் - டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[6][7][8] 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.[7]

விரைவான உண்மைகள் நயன்தாரா, பிறப்பு ...
நயன்தாரா
Thumb
பிறப்புடயானா மரியம் குரியன்
நவம்பர் 18, 1984 (1984-11-18) (அகவை 39)
திருவல்லா, கேரளம், இந்தியா[1][2]
பணி
செயற்பாட்டுக்
காலம்
2003 இன்று வரை
வாழ்க்கைத்
துணை
விக்னேஷ் சிவன் (தி. 9 சூன் 2022)
விருதுகள்கலைமாமணி விருது,[3] நந்தி விருது,[4] தமிழக அரசு திரைப்பட விருதுகள்,[5] பிலிம்பேர் விருதுகள்.
கையொப்பம்Thumb
மூடு

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன்.[9][10] டயானா மரியம் குரியன் நவம்பர் 18, 1984 அன்று [11][12] கர்நாடகாவின் பெங்களூரில்,[13] குரியன் கொடியட்டுக்கும் ஓமனா குரியனுக்கும் சிரிய கிறித்தவ குடும்பத்தில் பிறந்தார்.[14][15] இவரது மூத்த சகோதரர் லெனோ ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் வசிக்கிறார்.[16] இவரது தந்தை இந்திய விமானப்படை அதிகாரி என்பதால் நயன்தாரா இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படித்தார்.[16] இவரது குடும்பம் கேரளத்தை சேர்ந்தது, இவரது தாய்மொழி மலையாளம்.[17]

நயன்தாரா தனது பள்ளிப்படிப்பை ஜாம்நகரிலும் தில்லியிலும் படித்தார்.[18] திருவல்லாவில், திருமூலபுரத்திலுள்ள பாலிகாமடம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்,[19] பின்னர் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் திருவல்லாவிலுள்ள மார்த் தோமா கல்லூரியில் பயின்றார்.[20][21]

நயன்தாரா நடித்த தமிழ்ப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படங்கள் ...
ஆண்டுதிரைப்படங்கள் பெயர்கள்குறிப்புகள்
2005ஐயா செல்வி
2005சந்திரமுகி துர்கா
2005சிவகாசி சிறப்புத்தோற்றம்
2005கஜினி
2006கள்வனின் காதலி
2006வல்லவன் ஸ்வப்னா
2006தலைமகன்
2006 ஜோதி
2007சிவாஜி பாடலில் சிறப்புத் தோற்றம்
2007பில்லா
2008யாரடி நீ மோகினி கீர்த்தி/கோமளவள்ளி
2008குசேலன்
2008சத்யம் தெய்வா
2008ஏகன் மல்லிகா
2009வில்லு ஜானவி
2009ஆதவன் தாரா
2010பாஸ் என்கிற பாஸ்கரன் சந்திரிகா
2010கோவா சிறப்புத் தோற்றம்
2013ராஜா ராணி ரெஜினா
2013ஆரம்பம்
2013எதிர்நீச்சல் பாடலில் சிறப்புத் தோற்றம்
2014இது கதிர்வேலன் காதல் பவித்ரா
2015இது நம்ம ஆளு
2015மாசு என்கிற மாசிலாமணி மாலினி
2015தனி ஒருவன் மஹிமா
2015நானும் ரௌடி தான் காதம்பரி
2015நண்பேன்டா ரம்யா
2015நைட் ஷோ படப்பிடிப்பு நடைபெறுகிறது
2015மாயா மாயா, அப்சரா
2016திருநாள் வித்யா
2016இருமுகன் மீரா ஜார்ஜ்
2016காஷ்மோரா ரத்ன மாதேவி
2017கொலையுதிற்காலம்
2017வேலைக்காரன் மிர்னாளினி
2017டோரா
2017வாசுகி வாசுகி
2017அறம் மதிவதனி இஆப
2018காத்துவாக்குல ரெண்டு காதல் கண்மனி
2018கோலமாவு கோகிலா கோகிலா
2018இமைக்கா நொடிகள் அஞ்சலி விக்ரமாதித்யன்
2019விசுவாசம் நிரஞ்சனா
2019மிஸ்டர். லோக்கல் கீர்த்தனா வாசுதேவன்
2019பிகில் ஏஞ்சல்
2020 தர்பார் லில்லி
மூக்குத்தி அம்மன் மூக்குத்தி அம்மன்
2021 நிழல் சர்மிலா
நெற்றிக்கண் துர்கா
அண்ணாத்த பட்டம்மாள்
2022 காத்துவாக்குல ரெண்டு காதல் கண்மணி
O2 பார்வதி
மூடு

நயன்தாரா நடித்த மலையாளப் படங்கள்

  • மனசினக்கரே
  • விஸ்மயதும்பத்து
  • நாட்டுராஜாவு
  • தஸ்கரவீரன்
  • ராப்பகல்
  • 20/20
  • பாடிகார்ட்

நயன்தாரா நடித்த தெலுங்குப் படங்கள்

  • லக்ஷ்மி
  • பாஸ்
  • யோகி
  • துபாய் சீனு
  • துளசி
  • கதாநாயகடு
  • சத்யம்
  • அதுர்ஸ்
  • ஆஞ்சநேயலு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.