தஞ்சாவூர் மாவட்டம் (Thanjavur district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தஞ்சாவூர் ஆகும். இந்த மாவட்டம் 3,411 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்' என தஞ்சாவூர் அழைக்கப்படுகிறது.

தஞ்சாவூர்
மாவட்டம்

தஞ்சைப் பெருவுடையார் கோயில்

தஞ்சாவூர் மாவட்டம்:அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் தஞ்சாவூர்
பகுதி மத்திய மாவட்டம்
ஆட்சியர்
திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப.
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

திரு. ஆசிசு இராவத், இ.கா.ப.
மாநகராட்சி 2
நகராட்சிகள் 2
வருவாய் கோட்டங்கள் 3
வட்டங்கள் 10
பேரூராட்சிகள் 20
ஊராட்சி ஒன்றியங்கள் 14
ஊராட்சிகள் 589
வருவாய் கிராமங்கள் 906
சட்டமன்றத் தொகுதிகள் 8
மக்களவைத் தொகுதிகள் 2
பரப்பளவு 3,411 ச.கி.மீ.
மக்கள் தொகை
24,05,890 (2011)
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இ.சீ.நே.
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
613 xxx
தொலைபேசிக் குறியீடு
04362, 0435
வாகனப் பதிவு
TN-49, TN-68
பாலின விகிதம்
1035 /
கல்வியறிவு
82.64%
இணையதளம் thanjavur

தஞ்சாவூரானது, மாநிலத்தின் 12-ஆவது மாநகராட்சியாக, 2014 ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது. புவியின் 9.50 முதல் 11.25 வரையிலான கடகரேகை மற்றும் 78.43. முதல் 70.23 வரையிலான அட்சரேகை இடையே உள்ளது. ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் பெரிய பரப்பளவில் இருந்ததால், அதன் நிருவாக நலன் கருதி நாகப்பட்டினம், மன்னார்குடி, மயிலாடுதுறை கோட்டங்களையும், கும்பகோணம் கோட்டத்திலிருந்து, வலங்கைமான் வட்டத்தையும் பிரித்து, நாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு நாகப்பட்டினம் மாவட்டம் சனவரி 19, 1991 அன்று உருவாக்கப்பட்டது. பின்னர் நிருவாக நலன் கருதி 1997-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து, நாகப்பட்டினம் கோட்டத்திலிருந்து நன்னிலம், குடவாசல், திருவாரூர் வட்டங்களைப் பிரித்து மற்றும் மன்னார்குடி கோட்டங்களை உள்ளடக்கிய திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக திருவாரூர் தோற்றுவிக்கப்பட்டது. 2020-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை கோட்டங்களை உள்ளடக்கிய மயிலாடுதுறை தலைமையிடமாகக் கொண்டு தனி மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டம், திருவாரூர் மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி வட்டம்மும் ஆகிய நான்கு மாவட்டங்கள் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

வரலாறு

பிற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கியது தஞ்சாவூராகும். தஞ்சை மராட்டியரிடம் இருந்து, இப்பகுதியின் ஆட்சி உரிமையைப் பெற்ற ஆங்கிலேயர்கள் 1798 இல், இதை ஒரு மாவட்டமாக உருவாக்கினர்.

மாவட்ட வருவாய் நிர்வாகம்

இம்மாவட்டம் மூன்று வருவாய் கோட்டங்களையும், 10 வருவாய் வட்டங்களையும், 50 உள்வட்டங்களையும் [1], 906 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[2] இம்மாவட்டத்தின் மொத்த சாலைகளின் மொத்த நீளம் 1057 கி.மீ. ஆகும். அதில் தேசிய நெடுஞ்சாலை மொத்த நீளம் 144.8 கி.மீ. தமிழ்நாட்டு நெடுஞ்சாலை மொத்த நீளம் 469 கி.மீ. இம்மாவட்ட சாலை பராமரிப்பு மொத்த நீளம் 444 கி. மீட்டர்களாகும்.[3]

வருவாய் கோட்டங்கள்

வருவாய் வட்டங்கள்

.திருவோணம்

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்

இம்மாவட்டம் இரண்டு மாநகராட்சிகள், இரண்டு நகராட்சிகள், 22 பேரூராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்கள்[4][5], 589 கிராம ஊராட்சிகளைக் கொண்டுள்ளது.[6]

மாநகராட்சி

நகராட்சிகள்

பேரூராட்சிகள்

ஊராட்சி ஒன்றியங்கள்

மக்கள்தொகை பரம்பல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, ம.தொ. ...
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.ஆ. ±%
19019,28,222    
19119,78,651+0.53%
19219,58,929−0.20%
19319,86,308+0.28%
194110,59,583+0.72%
195112,28,360+1.49%
196113,17,920+0.71%
197115,92,998+1.91%
198118,48,132+1.50%
199120,53,760+1.06%
200122,16,138+0.76%
201124,05,890+0.82%
சான்று:[7]
மூடு

2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகை 2,405,890 ஆகும். அதில் ஆண்கள் 1,182,416 ஆகவும்; பெண்கள் 1,223,474 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 8.56% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1035 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 957 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 705 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 82.64% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 238,598 ஆகவுள்ளனர்.[8]

இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 2,075,870 (86.28 %), கிறித்தவர்கள் 133,971 (5.57 %), இசுலாமியர் 190,814 (7.93 %) ஆகவும் உள்ளனர். இம்மாவட்டத்தில் மக்கள் தொகை அடர்த்தி, சதுர கிலோ மீட்டருக்கு 708 பேர்கள் உள்ளனர். இம்மாவட்ட மக்களில், நூற்றுக்கு 82.72 சதவிதம் மக்கள் படிப்பறிவு பெற்றுள்ளனர்.

அரசியல்

தஞ்சாவூர் மாவட்டத்தில், இரு மக்களவைத் தொகுதிகளும், எட்டு சட்டமன்றத் தொகுதிகளும் இடம் பெற்றிருக்கின்றன.[9]

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் முன்பு ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்பு, தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி), பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி), பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி), ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி), திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)திருவாரூர் மாவட்டத்திலிருக்கும் மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி

தஞ்சாவூர் மாவட்டத்திலிருக்கும், கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி), திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி), பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுடன் மயிலாடுதுறை மாவட்டத்திலிருக்கும் மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி), சீர்காழி (தனி) (சட்டமன்றத் தொகுதி), பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)களும் சேர்த்து மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அமைக்கப்பட்டிருக்கிறது.

சட்டமன்றத் தொகுதிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 8 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருக்கிறது.

மாவட்ட எல்லைகள்

கிழக்கே திருவாரூர் மாவட்டம், வடக்கே அரியலூர் மாவட்டம், மேற்கே திருச்சிராப்பள்ளி மாவட்டம், வடகிழக்கே மயிலாடுதுறை மாவட்டம், கடலூர் மாவட்டம், தென்மேற்கே புதுக்கோட்டை மாவட்டம், தெற்கே வங்காள விரிகுடாகடல் பகுதிகள் தஞ்சாவூர் மாவட்டத்தின் எல்லைகளாக கொண்டுள்ளது.[10]

வேளாண்மை

Thumb
விவசாயம் - குறிப்பாக, நெல் சாகுபடி - தஞ்சாவூர் மாவட்ட மக்களின், முக்கிய தொழில்.

தமிழ்நாட்டில், காவிரி டெல்டா மாவட்டங்களில் முதன்மை மாவட்டமாக விளங்குவது தஞ்சை மாவட்டம். இம் மாவட்டத்தில் 70 சதவீத மக்கள் விவசாயத்தில் மற்றும் அதன் தொடா்புடைய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் நிலப்பரப்பான, 3.39 லட்சம் எக்டேரில் சுமார் 2.69 லட்சம் எக்டேரில் விவசாய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மிகவும் முற்போக்கு சிந்தனையும், புதிய விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. அதிக விளைச்சலை விளைவித்து வருமானத்தை பெருக்குவதில், இம்மாவட்ட விவசாயிகள் சிறந்து விளங்குகிறார்கள்.

வேளாண் அரசுப் பிரிவுகள்

இம்மாவட்டத்தில் பல்வேறு பயிர் ஆராய்ச்சிகளும், முன்னெடுப்புத் திட்டங்களும், அரசுத்துறையால் செயற்படுத்தப்படுகின்றன.[11] உயரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வேளாண்குடிகளின் உற்பத்தியை பெருக்கி, அவர்கள் கூடுதல் வருமானம் பெரும் வகையில் மத்திய மாநில திட்டங்களை, பல்வேறு வேளாண்துறைகள், பல்நோக்கில் செயல்படுத்தி வருகிறது. பிரதான் மந்திரி கிருஷி சஞ்சயி யோஜனா திட்டத்தின் கீழ் நுண்நீா்பாசன கருவிகளை பயன்படுத்தி நீா்மேலாண்மையில் ஈடுபடுத்தப் படுகிறது. பாரத பிரதமரின் புதிய பயிா் காப்பீட்டுத்திட்டம் செயற்படுத்தப் படுகிறது. நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மைத்திட்டத்தின் வழி மானாவாரிப் பயிா்களான பயறுவகை மற்றும் எண்ணெய்வித்து பயிா்களில் அதிக மகசுல் பெற திட்டமிடப் பட்டுள்ளது. கூட்டுப்பண்ணைய திட்டமும், மண்வள மேம்பாட்டுத்திட்டங்களினால்,[12] பசுந்தாள் உரப்பயிா்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகளும், தேசிய வேளாண் வளா்ச்சித்திட்டங்கள்(நெல், பயறுவகைகள், எண்ணெய்வித்துக்கள், கரும்பு, தென்னை மற்றும் பசுந்தாள் உரப்பயிா்கள்), தேசிய எண்ணெய்வித்து மற்றும் எண்ணெய் பனை இயக்கமும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நெல், பயறுவகை மற்றும் எண்ணெய் வித்துகளும் நல்ல சாகுபடி திட்டங்கள் செயற்படுத்தப் படுகின்றன.

குறிப்பாக, குறுவை மற்றும் சம்பா சிறப்பு தொகுப்பு திட்டங்களும், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையும், உலக வங்கி நிதியுதவியுடன் ”நீா்வள நிலவளத்திட்டமும்”, ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் பரிசோதனை நிலையங்கள் மூலமாக பல்வேறு பரிசோதனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை; இந்திய தொழில்நுட்ப உணவு பதனிடும் கழகம், தஞ்சாவூர்; மண் மற்றும் நீா் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம், காட்டுத்தோட்டம்; தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம்; தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் மற்றும் வேளாண்மை கல்லூரி, ஈச்சங்கோட்டை, மாநில தென்னை நாற்றங்கால், பட்டுக்கோட்டை, தென்னை ஒட்டுப்பணி மையம், மருங்கப்பள்ளம்; விதை சுத்திகரிப்பு நிலையங்கள், பட்டுக்கோட்டை, காட்டுத்தோட்டம், கும்பகோணம் மற்றும் மருதாநல்லூா்; கால்நடை ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு; ஆா்.வி.எஸ் விவசாய கல்லூரி, உசிலம்பட்டி, தஞ்சாவூர்; உழவா் பயிற்சி நிலையம், சாக்கோட்டை; இது தவிர தோட்டக்கலைதுறை, வேளாண்மை விற்பனை துறை, வேளாண் பொறியியல்துறை, விதை ஆய்வு, விதைச்சான்று மற்றும் விதை பரிசோதனை துறைகளும், பல்வேறு வேளாண்மை வளர்ச்சிகளுக்கு இயங்கி வருகின்றன. கரும்பு பயிரில் அதிக மகசுல் பெறுவதற்கு அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை, குருங்குளம்,திருஆருரான் சா்க்கரை ஆலை, திருமண்டங்குடி, ஸ்ரீ அம்பிகை சா்க்கரை ஆலை, துகிலி மற்றும் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன.[13]

போக்குவரத்து

பேருந்து போக்குவரத்து

Thumb
தஞ்சாவூர் நகரில் புதுக்கோட்டை சாலை

தஞ்சாவூரிலிருந்து சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருப்பூர், வேலூர், பெரம்பலூர், அரியலூர், மைசூர், சேலம், கடலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மானாமதுரை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பெங்களூரு, எர்ணாகுளம், நாகர்கோயில், திருப்பதி, திருவனந்தபுரம் மற்றும் ஊட்டி ஆகிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தஞ்சாவூரில் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் என இரு பேருந்து நிலையங்கள் உள்ளன. புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அருகிலுள்ள நகரங்களுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்க 1997ஆம் ஆண்டில் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

தொடருந்து போக்குவரத்து

தஞ்சாவூரில் இரயில் நிலையம் ஒன்று உள்ளது. இது திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்தையும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் உடன் தஞ்சாவூர் வழியாக இணைக்கும் முக்கிய இரயில் பாதையாகும். இது தென் இந்திய ரயில்வே கம்பெனியில் 1879 இல் நிறுவப்பட்ட பாதையாகும். இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களுடன் தஞ்சாவூர் ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை, மைசூர், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கரூர், மதுரை, திருநெல்வேலி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், கடலூர், தருமபுரி, விழுப்புரம் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய நகரங்களுக்கு தினமும் மற்றும் பாண்டிச்சேரி, நாகர்கோயில், கன்னியாகுமரி, திருப்பதி, நெல்லூர், இட்டார்சி, விசாகப்பட்டினம், ஹூப்ளி, வாஸ்கோட காமா, கோவா, வாரணாசி, விஜயவாடா, சந்திரபூர், நாக்பூர், மற்றும் புவனேசுவர் ஆகிய நகரங்களுக்கு வாரத்திற்கு ஒருநாள் இரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த இரயில் நிலையத்திலிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் நாகூர் போன்ற நகரங்களுக்கு அடிக்கடி பயணிகள் இரயில்கள் இயக்கப்படுகின்றன.[14][15][16]

வானூர்தி போக்குவரத்து

1990-களில் தஞ்சாவூர் சென்னையுடன் வாயுதூத் சேவைகளால் இணைக்கப்பட்டிருந்தது; போதுமான ஆதரவில்லாமையால் இச்சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது விமானப்படை நிலையம் செயல்பட்டு வருகிறது. வான்படை நிலையம் 2012-க்குள் ஒரு முக்கிய விமான தளமாக மாறியது. இது போர் விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்களை கையாள்வதற்காக அமைக்கப்பட்டது. இருப்பினும், விமான தளத்தை நிறுவுவதும், செயல்படுத்துவதும் மார்ச் 2013 வரை தாமதமானது.[17] தென்னிந்தியாவில் முதல் முறையாக முற்றிலும் போர் விமானங்களைக்கொண்ட புதிய விமானப்படைத் தளம் தமிழகத்தில் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ளது.[18][19] அருகிலுள்ள விமான நிலையம் 55 கி.மீ தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் ஆகும்.

சுற்றுலா

Thumb
கரிகால் சோழனால் கட்டப்பட்ட, கல்லணை

திருவிழாக்கள்

ஆடிப்பெருக்கு விழா

ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் தேதி அன்று, காவிரி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். நதிக்கரையில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் தயார் செய்து படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர்.

கருட சேவை

Thumb
கருட சேவை, 2024 மே மாதம்

தஞ்சாவூரில் ஆண்டு தோறும் நடைபெறும் கருடசேவை வரலாற்றோடு தொடர்புடைய வைணவத் திருவிழாவாகும். இத்திருவிழா கடந்த 90 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. வைணவக் கோயில்களில் அதிக அளவில் கருடசேவை ஒரேநேரத்தில் நடைபெறுவது தஞ்சாவூரில் என்பது குறிப்பிடத்தக்கது. ஆழ்வாருக்குக் காட்சி தந்த நாளான வைகாசி திருவோண நாளில் இந்தவிழா நடைபெறுகிறது.[20][21] இதனைத் தொடர்ந்து மறுநாள் வெண்ணெய்த்தாழி திருநாளும் நடைபெறுகிறது.

இதையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.