டேன்ஜெண்ட் (முக்கோணவியல்)
ஒரு செங்கோண முக்கோணியில் எதிர்ப்பக்கத்திற்கும் அயற்பக்கத்திற்குமான நீளங்களின் விகிதம்; திர / From Wikipedia, the free encyclopedia
கணிதத்தில் டேன்ஜெண்ட் அல்லது தான்சன் (tangent) சார்பு என்பது ஒரு கோணத்தின் சார்பாகும். கோணங்களின் சார்புகளாக அமையும் ஆறு முக்கோணவியல் சார்புகளில் இது மூன்றாவது சார்பாக வரிசைப்படுத்தப் படுகிறது. ஒரு செங்கோண முக்கோணத்தில், ஒரு கோணத்தின் டேன்ஜெண்ட் மதிப்பு, அக்கோணத்தின் எதிர்ப் பக்கத்திற்கும் அடுத்துள்ள பக்கத்திற்குமுள்ள விகிதமாகும். ஓரலகு வட்டம், சாய்வு, முடிவிலாத்தொடர் முதலியவை வாயிலாகவும் மற்றும் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வாகவும் டேன்ஜெண்ட் சார்பை வரையறுக்கலாம்.