![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7d/Slope_picture.svg/langta-640px-Slope_picture.svg.png&w=640&q=50)
சாய்வு
From Wikipedia, the free encyclopedia
ஒரு நேர்கோடு எப்படி சாய்ந்துள்ளது அல்லது சரிந்துள்ளது என்றதன் அளவே சாய்வு (slope) எனப் பொதுவாக அழைக்கப்படும்[1]. சாய்வை ஏற்றம்/ஓட்டம் அல்லது இறக்கம்/ஓட்டம் என்று வரையறுக்கலாம். சாய்வின் அளவு அதிகமானால் அதன் சரிவு அதிகமாய் உள்ளதை குறிக்கும். பொதுவாக சாய்வு m எனக் குறிக்கப்படுகிறது[2].
- ஒரு கோட்டின் திசையானது கூடுவதாக, குறைவதாக, கிடைமட்டமானதாக அல்லது செங்குத்தானதாக ஒரு கோட்டின் திசை இருக்கும்.
- ஒரு கோடு இடப்புறமிருந்து வலப்புறமாக மேல் நோக்கிச் செல்லுமானால் அது கூடும் கோடு. அக்கோட்டின் சாய்வு நேர் மதிப்பாக இருக்கும் (
).
- ஒரு கோடு இடப்புறமிருந்து வலப்புறமாக கீழ் நோக்கிச் செல்லுமானால் அது குறையும் கோடு. அக்கோட்டின் சாய்வு எதிர் மதிப்பாக இருக்கும் (
).
- ஒரு கோடு கிடைமட்டமாக இருந்தால் அதன் சாய்வின் மதிப்பு பூச்சியம் (
). இது ஒரு மாறிலிச் சார்பு.
- ஒரு கோடு செங்குத்தாக இருந்தால் அதன் சாய்வின் மதிப்பு வரையறுக்கப்படாதது ஆகும் (
= வரையறுக்கப்படவில்லை).
- ஒரு கோடு இடப்புறமிருந்து வலப்புறமாக மேல் நோக்கிச் செல்லுமானால் அது கூடும் கோடு. அக்கோட்டின் சாய்வு நேர் மதிப்பாக இருக்கும் (
- ஒரு கோட்டின் சாய்வின் தனிமதிப்பால் அக்கோட்டின் செங்குத்து நிலை, சரிவு நிலை அளவிடப்படுகிறது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7d/Slope_picture.svg/220px-Slope_picture.svg.png)