இடாய்ச்சு மொழி
மேற்கு செருமானிக்கு மொழி / From Wikipedia, the free encyclopedia
இடாய்ச்சு மொழி (ஜெர்மன், Deutsch - டாய்ட்ஷ்ⓘ) 120 மில்லியன் மக்களால் 38 நாடுகளில் பேசப்படும் ஒரு ஐரோப்பிய மொழியும் உலகின் முதன்மை மொழிகளில் ஒன்றுமாகும்.[12] ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இதன் பல சொற்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து பெறப்பட்டவையாகும்.[13] பல சொற்கள் இலத்தீன், கிரேக்கத்திலிருந்தும், சில சொற்கள் பிரெஞ்சு, ஆங்கிலத்திலிருந்தும் பெறப்பட்டுள்ளன. இடாய்ச்சு மொழியைப் போலவே உள்ள மொழிகள் இலுகுசெம்பூர்கிய மொழி, டச்சு, பிரிசியன், ஆங்கிலம் மற்றும் இசுகாண்டிநேவிய மொழிகளாகும்.
இடாய்ட்சு (செருமன்) | |
---|---|
Deutsch | |
உச்சரிப்பு | [dɔʏtʃ] |
நாடு(கள்) | இடாய்ட்சுலாந்து, ஆத்திரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி (Province of Bolzano-Bozen) லெய்செஸ்டீன், லக்சம்பர்க், டென்மார்க், பெல்ச்சியம் |
பிராந்தியம் | German-speaking Europe, German diaspora worldwide |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தாய்மொழி: ஏறக்குறைய 105 மில்லியன்[1][2] தாய்மொழியாக இல்லாதோர் பேசும் தொகை: ஏறத்தாழ 80 மில்லியன்[1] (date missing) |
இந்திய-ஐரோப்பிய மொழிகள்
| |
இலத்தீன் எழுத்து (இடாய்ட்சுக் கிளை) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ஆஸ்திரியா பெல்ஜியம் ஏனைய நாடுகள்: Krahule/Blaufuß, சிலோவாக்கியா (Official municipal language)[3] Recognised minority language in: செக் குடியரசு[7] ருமேனியா[11] சுலோவாக்கியா,[1][3] போலந்து |
Regulated by | Rat für deutsche Rechtschreibung |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | de |
ISO 639-2 | ger (B) deu (T) |
ISO 639-3 | Variously: deu — New High German gmh — Middle High German goh — Old High German gct — Alemán Coloniero bar — Austro-Bavarian cim — Cimbrian geh — Hutterite German ksh — Kölsch nds — Low German sli — Lower Silesian ltz — Luxembourgish vmf — Main-Franconian mhn — Mócheno pfl — Palatinate German pdc — Pennsylvania German pdt — Plautdietsch swg — Swabian German gsw — Swiss German uln — Unserdeutsch sxu — Upper Saxon wae — Walser German wep — Westphalian |
அரசகரும மற்றும் பெரும்பான்மை மொழி
அரசகரும மற்றும் சிறுபான்மை மொழி
பரவலாகப் பேசப்படும் இடங்கள்
பிராந்தியங்கள் |
இடாய்ச்சு இலத்தீன் அகரவரிசை கொண்டு எழுதப்படுகின்றது. 26 வழமையான எழுத்துக்களைத் தவிர, இடாய்ச்சு மூன்று உயிரெழுத்துக்களை உயிர் மாற்றக் குறியீடுகளுடனும் (Ä/ä, Ö/ö, Ü/ü) எழுத்து ßவையும் பயன்படுத்துகின்றது.
ஆத்திரிய இடாய்ச்சு, சுவிசு இடாய்ச்சு போன்று இடாய்ச்சு மொழி பல வட்டார வழக்குகளைக் கொண்டுள்ளது.
இடாய்ச்சு மொழி ஜெர்மனி, ஆசுதிரியா, லீக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகளில் அலுவல்மொழியாகவும் சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் வரையறுக்கப்பட்ட அலுவல் மொழிகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது. இத்தாலி, சுலோவீனியா, அங்கேரி, நமீபியா, போலந்து போன்ற பல நாடுகளில் சிறுபான்மை மொழியாக ஏற்கப்பட்டுள்ளது. மிகவும் பயன்படுத்தப்படும் மொழியாக அறிவியலில் இரண்டாவதாகவும் ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தலில் மூன்றாவதாகவும் உள்ளது; வணிகம் மற்றும் பண்பாட்டில் முதன்மையான மொழியாக விளங்குகின்றது. உலகளவில், புதிய நூல்கள் வெளியிடுவதில் இடாய்ச்சு மொழி ஐந்தாவது இடத்தில் உள்ளது. உலகின் அனைத்து நூல்களிலும் (மின்னூல்கள் உட்பட) பத்தில் ஒன்று இடாய்ச்சில் உள்ளது.[14][15] இணையதளங்களில் உள்ளுரைக்காக மிகவும் பயன்படுத்தப்படும் மொழிகளில் மூன்றாவதாக உள்ளது.[16]