ஜனக்பூர்
From Wikipedia, the free encyclopedia
ஜனக்பூர் (Janakpur) நேபாளி: जनकपुर) நேபாள மாநில எண் 2-இல் அமைந்த தனுசா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.[1]ஜனக்பூர் நகரத்தில் புகழ் பெற்ற ஜானகி கோயில் அமைந்துள்ளது. இந்நகரம் நேபாளத்தின் ஆன்மீகம் மற்றும் பண்பாட்டுச் சுற்றுலாத் தலமாகும்.[2]இந்தியாவின் பீகார் - நேபாள எல்லையில் அமைந்த ஜனக்பூர் நகரம், பாட்னாவிலிருந்து 180 கிமீ தொலைவிலும்; அயோத்திலிருந்து 520 கிமீ தொலைவிலும் உள்ளது.
விரைவான உண்மைகள் ஜனக்பூர் जनकपुर, நாடு ...
ஜனக்பூர்
जनकपुर | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): மிதிலை | |
குறிக்கோளுரை: சமயம் & பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த நகரம் | |
ஆள்கூறுகள்: 26°43′43″N 85°55′30″E | |
நாடு | நேபாளம் |
மண்டலம் | ஜனக்பூர் மண்டலம் |
மாநிலம் | நேபாள மாநில எண் 2 |
மாவட்டம் | தனுஷா மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 100.20 km2 (38.69 sq mi) |
ஏற்றம் | 74 m (243 ft) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 1,69,287 |
• அடர்த்தி | 1,700/km2 (4,400/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 45600 |
இடக் குறியீடு | 041 |
இணையதளம் | http://janakpurmun.gov.np |
மூடு
மிதிலையை தலைநகராகக் கொண்ட விதேக நாட்டு மன்னர் ஜனகரின் பெயரால், கிபி 18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நிறுவப்பட்ட ஜனக்பூர் நகரத்தை ஜனக்பூர்தாம் என்றும் அழைப்பர். [3]
ஜனக்பூர் நகரம் நேபாள தேசியத் தலைநகரம் காட்மாண்டிலிருந்து தென்கிழக்கே 123 கிமீ தொலைவில் உள்ளது.[4]2015ஆம் ஆண்டில் இந்நகரத்தின் மக்கள் தொகை 1,69,287 ஆக இருந்தது.[5]