சுன்னாகம் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
சுன்னாகம் தொடருந்து நிலையம் (Chunnakam railway station) இலங்கையின் வடக்கே சுன்னாகம் என்ற ஊரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இலங்கையின் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கும் வடக்குப் பாதையின் ஒரு பகுதியாக, இலங்கை ரெயில்வே திணைக்களத்தினால் இலங்கையின் நடுவண் அரசின் கீழ் இந்நிலையம் நிருவகிக்கப்படுகிறது. ஈழப்போரின் காரணமாக வடக்கின் ஏனைய தொடருந்து நிலையங்களைப் போன்று சுன்னாகம் தொடருந்து நிலையமும் 1990 முதல் 2015 வரை இயங்காமல் இருந்து வந்தது. வடக்குப் பாதையின் யாழ்ப்பாணத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையேயான போக்குவரத்து சுன்னாகம் ஊடாக 2015 சனவரி 2 இல் ஆரம்பிக்கப்பட்டது.[1][2]
விரைவான உண்மைகள் சுன்னாகம்Chunnakam, பொது தகவல்கள் ...
சுன்னாகம் Chunnakam | |
---|---|
இலங்கைத் தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | சுன்னாகம் இலங்கை |
ஆள்கூறுகள் | 9°44′45.30″N 80°02′00.00″E |
உரிமம் | இலங்கை தொடருந்து போக்குவரத்து |
தடங்கள் | வடக்குப் பாதை |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயங்குகிறது |
வரலாறு | |
மறுநிர்மாணம் | 2 சனவரி 2015 |
மின்சாரமயம் | இல்லை |
மூடு
|