சிங்கப்பூர் மீது ஜப்பானிய இராணுவ ஆட்சி (1942-1945) From Wikipedia, the free encyclopedia
சிங்கப்பூரில் சப்பானிய ஆக்கிரமிப்பு அல்லது சிங்கப்பூரில் சப்பானிய ஆட்சி (ஆங்கிலம்: Japanese Occupation of Singapore; மலாய்: Pendudukan Jepun di Singapura) என்பது 1942 பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் 1945 ஆகஸ்டு 15-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், சப்பானிய இராணுவம் சிங்கப்பூரை ஆக்கிரமிப்பு செய்ததைக் குறிப்பிடுவதாகும். 1942 பிப்ரவரி 15-ஆம் தேதி நடந்த சிங்கப்பூர் போரில் ஒருங்கிணைந்த பிரித்தானிய நேச நாட்டுப் படைகள் தோற்கடிக்கப்பட்டன. பின்னர் பிரித்தானிய இராணுவப் படைகள்; ஏகாதிபத்திய சப்பானிய இராணுவத்திடம் சரணடைந்தன.
Japanese Occupation of Singapore 昭南島 Shōnantō | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1942–1945 | |||||||||
நாட்டுப்பண்: (ஆங்கிலம்: "His Imperial Majesty's Reign")[1] | |||||||||
நிலை | சப்பானிய பேரரசின் இராணுவ ஆக்கிரமிப்பு | ||||||||
அதிகாரப்பூர்வ மொழி தேசிய மொழி | சப்பானியம் | ||||||||
பொது மொழிகள் | சீனம்; ஆங்கிலம்; மலாய்; தமிழ் | ||||||||
சமயம் | சிந்தோ சமயம்; பௌத்தம்; கிறிஸ்தவம்; இசுலாம்; தாவோயியம்; இந்து சமயம்; சீக்கியம் | ||||||||
அரசாங்கம் | இராணுவ ஆக்கிரமிப்பு ஒருமுக அரசு; அரசியல்சட்ட முடியாட்சி சர்வாதிகாரம் | ||||||||
மாமன்னன் | |||||||||
• 1942-1945 | இறோகித்தோ | ||||||||
பிரதமர் | |||||||||
• 1942-1944 | இடாக்கி தோஜோ | ||||||||
• 1944-1945 | குனியாக்கி கொய்சோ | ||||||||
வரலாற்று சகாப்தம் | இரண்டாம் உலகப் போர் | ||||||||
8 டிசம்பர் 1941a | |||||||||
15 பிப்ரவரி 1942 | |||||||||
• சிங்கப்பூர் குண்டுவீச்சு | நவம்பர் 1944 – மே 1945 | ||||||||
• சப்பான் சரணடைதல் | 15 ஆகஸ்டு 1945 | ||||||||
• தைடர்ரேசு படை நடவடிக்கை | 4–12 செப்டம்பர் 1945 | ||||||||
• சிங்கப்பூர் காலனிய முடியாட்சி | 1 ஏப்ரல்1946 | ||||||||
நாணயம் | சப்பானிய அரசாங்க டாலர் ("வாழைமரக் காசு") | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | சிங்கப்பூர் |
ஒருங்கிணைந்த பிரித்தானிய நேச நாட்டுப் படைகளில்; பிரித்தானிய போர் வீரர்கள், இந்திய இராணுவ வீரர்கள், ஆஸ்திரேலிய போர் வீரர்கள், மலாயா போர் வீரர்கள், நீரிணை குடியேற்ற போர் வீரர்கள், சிங்கப்பூர் போரில் பங்கெடுத்துக் கொண்டனர்.
சப்பான், ஐக்கிய இராச்சியம், மற்றும் சிங்கப்பூர் உட்பட பல நாடுகளின் வரலாற்றில்; சிங்கப்பூர் மீதான சப்பானிய ஆக்கிரமிப்பு ஒரு முக்கியத் திருப்புமுனையாக மாறியது. அத்துடன் சிங்கப்பூர் போர் நடந்து முடிந்த சில நாட்களில் சிங்கப்பூரின் பெயரும் மாற்றப்பட்டது.
சிங்கப்பூருக்கு சப்பானியப் பேரரசு முதன்முதலில் வழங்கிய பெயர் சோனான் ஆங்கிலம்: Syonan Island; மலாய்: Syonanto; சப்பானியம்: 昭南島). அதன் பின்னர் சப்பானிய இராணுவம் சிங்கப்பூரை ஆட்சி செய்யத் தொடங்கியது.[2][3]
1941-ஆம் ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி, சப்பானியர்களின் வானூர்தி வெடிகுண்டுகளால் சிங்கப்பூர் தாக்கப்பட்டது. விமானத் தாக்குதலுக்குப் பிறகு, சப்பானியப் படைகள் மலாயா (இன்றைய தீபகற்ப மலேசியா) மீது தங்கள் படையெடுப்பை மையப்படுத்தின. அந்த நேரத்தில், மலாயா மற்றும் சிங்கப்பூர் வாழ் பொதுமக்கள் பிரித்தானிய ஆட்சியாளர்கள், தங்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என்று பெரிதும் எதிர்பார்த்தார்கள்.
இருப்பினும், சப்பானியர்கள் காட்டுப் போரில் நன்கு பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்டிருந்தனர். காட்டுக்குள் விரைவாகச் செல்லக்கூடிய சிறிய வகை தகரிகளை (Light Tanks) சப்பானியர்கள் பயன்படுத்தினர்கள். அதுவே அவர்களுக்குச் சாதகமாக அமைந்தது.
இதன் விளைவாக, சப்பானியர்கள் 55 நாட்களுக்குள் மலாயாவைக் கைப்பற்ற முடிந்தது. சனவரி 31, 1942-இல், சப்பானியப் படைகள் ஜொகூர் பாருவைக் கைப்பற்றின. பிரித்தானிய படைகள் மலாயாவிலிருந்து சிங்கப்பூருக்குள் பின்வாங்கின. அடுத்தக் கட்டமாக, மலாயாவையும் சிங்கப்பூரையும் இணைக்கும் மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலத்தை பிரித்தானியப் படைகள் தகர்த்தன. சப்பானியர்கள் சிங்கப்பூருக்குள் எளிதாக நுழைந்துவிடக் கூடாது என்பதே அதன் நோக்கமாகும்,
சப்பானியர்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதைத் தொடக்கத்திலேயே தாமதப்படுத்த பிரித்தானியப் படைத் தளபதிகள் பற்பல திட்டங்களை வகுத்து வைத்திருந்தனர். சிங்கப்பூரின் பாதுகாப்பிற்காக, மேலும் ஒரு திட்டத்தையும் முன்கூட்டியே வகுத்து வைத்து இருந்தனர். அதாவது கடலில் இருந்துதான் சப்பானியர்கள், சிங்கப்பூரை முதலில் தாக்குவார்கள் என்று பிரித்தானியர்கள் எதிர்பார்த்தார்கள்.
அந்தக் தாக்குதல்களுக்கு எதிராக சிங்கப்பூரைக் கடல்வழியாகப் பாதுகாப்பது என்பது பிரித்தானியப் படைத் தளபதிகளின் முதன்மைத் திட்டமாகும். அந்த வகையில், சிங்கப்பூரின் தெற்கு கடற்கரையின் கடலோரப் பகுதிகளில் அதிகமான அளவில் பாதுகாப்பு அரண்களை மையப்படுத்தி வைத்தார்கள்.
இருப்பினும், சிங்கப்பூரின் தெற்கு கடற்கரையைப் பயன்படுத்தாமல் வடமேற்கு கடற்கரை வழியாக சிங்கப்பூருக்குள் சப்பானியர்கள் நுழைந்து விட்டனர். இதைப் பிரித்தானியப் படைகள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம் தகர்க்கப்பட்டு இருந்ததால், அந்தப் பாலத்தைச் செப்பனிடுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று பிரித்தானியப் படைகளின் தளபதிகள் எதிர்பார்த்தனர். ஆனால் சப்பானியப் படைகளின் ஒரு பகுதியினர் பெரிய பெரிய மிதவைக் கட்டைகளைப் பயன்படுத்தி ஜொகூர் நீரிணையைக் கடந்து சிங்கப்பூருக்குள் சென்று விட்டனர்.
1942 பிப்ரவரி 7 -ஆம் தேதி, பிரித்தானியப் படைகளை ஏமாற்றும் நோக்கத்தில், உபின் தீவை சப்பானியர்கள் தாக்கினார்கள். ஆனால், சப்பானியர்கள் சிங்கப்பூரை வடகிழக்கிலிருந்து தான் தாக்குவார்கள் என்று பிரித்தானியப் படைகள் தவறாக எடைபோட்டு விட்டன. அடுத்த நாள், பிரித்தானியப் படைகள் எதிர்ப்பார்த்தற்கு மாறாக சப்பானியர்கள், ஜொகூர் நீரிணையைக் கடப்பதற்கு படகுகளைப் பயன்படுத்தினார்கள்.
1942 பிப்ரவரி 9-ஆம் தேதி, மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலத்தை சப்பானியர்கள் பழுது பார்த்து சரிசெய்தனர். அந்தத் தரைப்பாலம் சிலநாட்களுக்கு முன்புதான் பிரித்தானிய நேசப் படைகளால் தகர்க்கப்பட்டது. அதன் பின்னர் சப்பானியர்கள் துரிதமாகச் சிங்கப்பூருக்குள் நுழைந்தனர். 2 நாட்களுக்குப் பிறகு, சப்பானியர்கள் புக்கிட் தீமாவை அடைந்தனர். அங்கு ஒரு நீர்த்தேக்கம் இருந்தது. இங்குதான் பிரித்தானியர்கள் அவர்களுக்கான உணவு மற்றும் ஆயுதங்களை சேகரித்து வைத்திருந்தனர்.
சப்பானியப் படைகளுக்கு எதிராக சீனத் தன்னார்வலர்களும்; பிரித்தானிய படைகளும் கடுமையான சண்டையில் ஈடுபட்டனர். இறுதியில், பிரித்தானியப் படைகள் தோல்வி அடைந்தன. இரு தரப்பிலும் பல வீரர்கள் கொல்லப்பட்டனர். பிப்ரவரி 12-ஆம் தேதி, சப்பானியப் படைகள் செந்தோசாவில் உள்ள சிலோசோ கோட்டையைத் தாக்கின.
இதற்கிடையில் பிரித்தானியப் படைகள் சப்பானிய கப்பல் ஒன்றையும் மூழ்கடித்தன. அடுத்த நாள், பாசிர் பஞ்சாங்கில், பிரித்தானியர்களின் தளவாட முகாம்கள் மீது சப்பானியர்கள் குண்டுகளை சரமாரியாக வீசி தகர்த்தனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான போர் நடந்தது.
பிரித்தானிய நேசப் படைகளில் ஒரு பிரிவான மலாய் படைப்பிரிவும் போரில் இணைந்து கொண்டது. மலாய் படைப் பிரிவிற்கு தலைமை தாங்கிய லெப்டினன்ட் அட்னான் பின் சைதி, போரின் இரண்டாம் நாள் பலியானார். அவர்கள் தலைமை தாங்கினார். சப்பானிய வீரர்கள் அலெக்சாண்ட்ரா இராணுவ மருத்துவமனையில் நுழைந்து, அங்கிருந்த 200-க்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளைக் கொன்றனர்.
தண்ணீர், உணவு மற்றும் வெடிமருந்து பொருட்கள் தீர்ந்துவிட்டன; பிரித்தானியப் படை வீரர்களும் சோர்வு அடைந்து விட்டனர். மேலும் உயிரிழப்புகளைத் தடுக்க பிரித்தானியர்கள் விரும்பினர். இறுதியில், பிரித்தானியப் படைத் தளபதிகள் சரணடைய முடிவு செய்தனர்.
பிப்ரவரி 15, 1942 மாலை நேரத்தில், பிரித்தானியப் படைகளின் தலைவர் ஆர்தர் பெர்சிவல்; சப்பானியப் படைகளின் தளபதி தோமோயுகி யமாசிதா என்பவரைச் சந்தித்தார். தோமோயுகி யமாசிதா மலாயா மற்றும் சிங்கப்பூரைக் கைப்பற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சப்பானியப் படைகளின் தளபதி ஆவார். சந்திப்பிற்குப் பின்னர், பிரித்தானியப் படைகள் சிங்கப்பூரை ஜப்பானியப் படைகளிடம் ஒப்படைத்தன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.