பிரித்தானிய மலாயா பகுதிகளில் பிரித்தானிய இராணுவத்தினரின் நிருவாகம் From Wikipedia, the free encyclopedia
பிரித்தானிய மலாயாவில் இராணுவ நிருவாகம் (ஆங்கிலம்: British Military Administration (Malaya) (BMA); மலாய்: Pentadbiran Tentera British (Tanah Melayu)) என்பது 1945 ஆகத்து மாதம் தேதி தொடங்கி; 1946 ஏப்ரல் மாதத்தில் மலாயா ஒன்றியம் (Malayan Union) அமைக்கப்படும் வரையில், பிரித்தானிய மலாயா பகுதிகளைப் பிரித்தானிய இராணுவத்தினர் நிருவாகம் செய்ததைக் குறிப்பிடுவதாகும்.
பிரித்தானிய மலாயாவில் இராணுவ நிருவாகம் British Military Administration of Malaya | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1945–1946 | |||||||||||||||
நிலை | இடைக்கால அரசாங்கம் | ||||||||||||||
தலைநகரம் | கோலாலம்பூர் (இடைக்காலம்) | ||||||||||||||
அரசாங்கம் | இராணுவ நிர்வாகம் | ||||||||||||||
வரலாற்று சகாப்தம் | போருக்கு பிந்தைய | ||||||||||||||
• சப்பான் சரணடைவு | 2 செப்டம்பர் 1945 | ||||||||||||||
• பிரித்தானிய இராணுவ நிர்வாகம் அமைக்கப்படுதல் | 12 செப்டம்பர் 1945 | ||||||||||||||
1 ஏப்ரல் 1946 | |||||||||||||||
நாணயம் | மலாயா டாலர் பிரித்தானிய பவுண்டு | ||||||||||||||
| |||||||||||||||
தற்போதைய பகுதிகள் |
இரண்டாம் உலகப் போர் முடிவு அடைந்த போது சப்பான் சரண் அடைந்தது. அந்த நிலையில் பிரித்தானிய மலாயா பகுதிகளில் நிர்வாக வெற்றிடம் ஏற்பட்டது. அதை நிரப்புவதற்காக ஒரு பாதுகாப்பு நிருவாகம் (Caretaker Government) உருவாக்கப்பட்டது. அந்த நிருவாகம் தான் பிரித்தானிய மலாயாவின் இராணுவ நிர்வாகம் எனும் தற்காலிக நிருவாகம் ஆகும்.[1]
தென்கிழக்கு ஆசிய நேச நாடுகளின் உச்சத் தளபதியான (Supreme Allied Commander South East Asia) மவுண்ட்பேட்டன் பிரபுவின் (Lord Louis Mountbatten) நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் அந்த இராணுவ நிர்வாகம் இயங்கியது.[2]
மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்புக்கு முன்னர், பிரித்தானிய மலாயாவின் மாநிலங்கள் மூன்று அரசியல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன.
1930-ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய காலனித்துவ (British Colonial Office) ஆணையராக இருந்த சர் எட்வர்ட் ஜென்ட் (Sir Edward Gent) அந்த மூன்று அரசியல் கூறுகளையும் ஒன்றிணைக்க முயற்சிகள் செய்து வந்தார்.
மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பு காலத்தில், மலாயாவை எவ்வாறு விடுவிப்பது; பின்னர் அதை எப்படி நிர்வகிப்பது என்று பிரித்தானியர்கள் சிந்திக்கத் தொடங்கினர். மலாயாவை மீட்டு எடுத்த பிறகு அதை நிர்வாகத்திற்கான திட்டமிடல் பிரிவுக்கு (Civil Affairs Malaya Planning Unit) (CAMPU) எட்வர்ட் ஜென்ட்டின் பொறுப்பு வழங்கப்பட்டது.
1946-ஆம் ஆண்டில், பிரித்தானிய மலாயாவில் (British Malaya); பிரித்தானிய நிர்வாகத்தை எளிமைப்படுத்த, ஒரே அரசாங்கத்தின் கீழ், தீபகற்ப மலேசியா மாநிலங்களை ஒன்றிணைத்து, அதற்கு மலாயா ஒன்றியம் என்று பெயர் வைக்கலாம் என பிரித்தானியர்கள் முடிவு செய்தார்கள்.
மலாயா ஒன்றியம் அமைக்கப்படுவதற்கு மலாய் மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, ஈராண்டுகள் கழித்து, 1948-இல், மலாயா ஒன்றியம் என்பது மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) என மறுச் சீரமைப்பு செய்யப்பட்டது.
மலாயாவை மீட்டு எடுத்த பிறகு, மலாயாவை மீண்டும் பழைய நிலைத் தன்மைக்கு கொண்டு வருவதற்கு இராணுவ நிர்வாக அமைப்பு தான் (Military Administration) முதல் கட்டமாக இருந்தது.
அடுத்தக் கட்டமாக மலாயா ஒன்றியம் (Malay Union) மூலமாக அனைத்து மாநிலங்களையும் ஒரே அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவது; மூன்றாவதாக மலாயாவில் உள்ள பிரித்தானிய அரசாங்கத்தின் உடைமைகளைப் பாதுகாப்பது (Secure Britain's Possessions); அவையே பிரித்தானிய அரசாங்கத்தின் திட்டங்கள் ஆகும்.[3]
1945 செப்டம்பர் 9-ஆம் தேதி ’சிப்பர் நடவடிக்கை’ (Operation Zipper) என்ற குறியீட்டுப் பெயரில் மலாயாவை மீட்டு எடுப்பது என திட்டமிடப்பட்டது. முதல் இராணுவத் தரையிறக்கங்கள் கிள்ளான் துறைமுகம் அல்லது போர்டிக்சன் கடல்பகுதிகளில் அமைய வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டது. ஆனால் இது நடப்பதற்கு முன், 1945 ஆகத்து மாதம் 15-ஆம் தேதி சப்பானியர்கள் சரணடைந்தனர்.
இதனால் மலாயா மற்றும் மற்ற பிரதேசங்களின் நிர்வாகங்களை மீண்டும் படிப்படியாக நிறுவுவதற்கான திட்டங்கள் வழக்கற்றுப் போய்விட்டன. மலாயா, சிங்கப்பூர், பர்மா, இந்தோனேசியா, பிரித்தானிய வடக்கு போர்னியோ, தாய்லாந்து, இந்தோசீனா, சரவாக், ஆங்காங் போன்ற பரந்த பகுதிகளை மீண்டும் விரைவாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்கிற ஒரு கட்டாய நிலையும் ஏற்பட்டது.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.