![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/08/LOKESH_RAHUL_%252815573141953%2529.jpg/640px-LOKESH_RAHUL_%252815573141953%2529.jpg&w=640&q=50)
கே. எல். ராகுல்
இந்தியத் துடுப்பாட்டக்காரர் / From Wikipedia, the free encyclopedia
கே. எல். ராகுல் என அழைக்கப்படும் கன்னூர் லோகேசு ராகுல் (Kannaur Lokesh Rahul, பிறப்பு: 18 ஏப்ரல் 1992),இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் கருநாடக துடுப்பாட்ட அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலக்கைத் துடுப்பாட்டக் காரரான இவர் சிலவேளைகளில் குச்சக் காப்பாளராகவும் விளையாடுகிறார். ராகுல் 19-வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். 2013 ஆம் ஆண்டில் இவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் ஐபிஎல் தொடரில் விளையாடினார். 2014 இல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார்.[2] 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் இவர் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்காக விளையாடி வருகிறார்.
![]() 2015 சனவரியில் சிட்னி கிரிக்கெட் அரங்கில் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | கன்னூர் லோகேசு ராகுல்[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 18 ஏப்ரல் 1992 (1992-04-18) (அகவை 32) பெங்களூரு, கருநாடகம், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துவக்க ஆட்டக்காரர்; இலக்குக் கவனிப்பாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 284) | 26 திசம்பர் 2014 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 30 ஆகத்து 2019 எ. மேற்கிந்தியத்தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 213) | 11 சூன் 2016 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 11 பெப்ரவரி 2020 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 63) | 18 சூன் 2016 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 2 பெப்ரவரி 2020 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2010–தற்போதுவரை | கர்நாடக அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (squad no. 11) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014–2015 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (squad no. 11) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018–தற்போதுவரை | கிங்ஸ் லெவன் பஞ்சாப் (squad no. 1) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 11 பெப்ரவரி 2020 |
ராகுலின் முதல் முதல் தரத் துடுப்பாட்டம் ஆத்திரேலிய அணிக்கு எதிராக மெல்பேர்ணில் நடந்த 2014-15 தேர்வுத் தொடராகும் .சிட்னியில் நடந்த இரண்டாவது தேர்வு ஆட்டத்தில் 110 ஓட்டங்கள் எடுத்தார். 2016 ஆம் ஆண்டில் சிம்பாப்வே, அராரே விளையாட்டு சங்கம் மைதானத்தில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 100* ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அறிமுகப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்த முதல் இந்தியர் எனும் சாதனையைப் படைத்தார்.[3] தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டி ஆகிய முன்ன்று வடிவங்களிலும் நூறு அடித்த மூன்றாவது இந்தியர் எனும் சாதனையைப் படைத்தார். ஆகஸ்டு 27, 2016 இல் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் 51 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 110* ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் பன்னாட்டு இருபது20 போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[4][5][6] அனைத்துவிதமான வடிவ துடுப்பாட்டப் போட்டிகளிலும் பவுண்டரி அடித்து நூறு அடித்த ஒரே சர்வதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ்கு எதிரான போட்டியில் 14 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் குறைவான பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார்.[7]