![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c8/Victoria_Cross_Winners_NA17270.jpg/640px-Victoria_Cross_Winners_NA17270.jpg&w=640&q=50)
கமல் ராம்
From Wikipedia, the free encyclopedia
கமல் ராம் (Kamal Ram), VC (17 டிசம்பர் 1924 – 1 சூலை 1982) பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் படைப்பிரிவின் 8வது அணியில் பணியில் சேர்ந்த படை வீரர் ஆவார். இவர் இராஜபுதனம் முகமையில் இருந்த கரௌலி மாவட்டத்தின் போலுபுரா கிராமத்தில் பிறந்தவர்.[1]
கமல் ராம் | |
---|---|
![]() 26 சூலை 1944 அன்று மன்னர் ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் கமல் ராமுக்கு வழங்கிய விக்டோரிய கிராஸ் பதக்கம் | |
பிறப்பு | (1924-12-17)17 திசம்பர் 1924 போலுபுரா, இராஜபுதனம் முகமை, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 1 சூலை 1982(1982-07-01) (அகவை 57) போலுபுரா, கரௌலி மாவட்டம், இராஜஸ்தான், இந்தியா |
சார்பு | ![]() ![]() |
சேவை/ | இந்தியத் தரைப்படை |
சேவைக்காலம் | 194?-1972 |
தரம் | கௌரவ லெப்டினண்ட் |
படைப்பிரிவு | பஞ்சாப் படைப்பிரிவின் 8வது அணி |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப் போர்
|
விருதுகள் | ![]() |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4c/Victoria_Cross_1939-1945.jpg/640px-Victoria_Cross_1939-1945.jpg)
இரண்டாம் உலகப் போரின் போது, இவர் போர்க்களத்தில் இத்தாலியில் முகாமிட்டிருந்த ஜெர்மனியின் நாஜிப் படைகளுக்கு எதிராக வீரமாக போராடி, நேசப்படைகளின் முன்னேற்றத்திற்கும், நாஜிப்படைகளின் வீழ்ச்சிக்கும் காரணமாக செயல்பட்டவர். போரில் இவரது வீரதீரச் செயல்களைப் பாரட்டி, 26 சூலை 1944 அன்று, ஐக்கிய இராச்சிய மன்னர் ஆறாம் ஜார்ஜ், கமல் ராமுக்கு உயரிய விக்டோரிய கிராஸ் பதக்கம் வழங்கி கௌரவப்படுத்தினார்.[2]
இந்திய விடுதலைக்குப் பின்னர் கமல் ராம் தொடர்ந்து இந்திய தரைப்படையில் பணியாற்றியனா. 1972-ம் ஆண்டில் கமல் ராம் பணி ஓய்வு பெறும் போது கௌரவ லெப்டினண்ட் அதிகாரியாக ஓய்வு பெற்றார்.[3][4]