உபுண்டு (இயக்குதளம்)
டெபியன் அடிப்படையிலான லினக்ஸ் இயக்க முறைமை / From Wikipedia, the free encyclopedia
உபுண்டு (/ʊˈbʊntuː/ uu-BUUN-too)[1][2] (Ubuntu) என்பது, குனூ/லினக்சு இயங்குதளத்தின் வழங்கல்களில் ஒன்றாகும். இது டெபியனை அடிப்படையாகக் கொண்டது. இதில் அடங்கியுள்ள அனைத்து மென்பொருட்களும் கட்டற்ற, திறந்த ஆணைமூல மென்பொருட்களாகும். இவ்வழங்கல் முற்றுமுழுதாக இலவசமாகக் கிடைக்கிறது. இவ்வழங்கல் பொதியப்பட்ட இறுவட்டுக்களைப் பணம் எதுவும் செலுத்தாமல் அஞ்சல் மூலம் பெறக்கூடியதாக இருந்தது. உபுண்டு என்ற ஆப்பிரிக்கச் சொல்லிற்கான பொருள், மானிட நேயம் என்றவாறாக அமைகிறது. "மனிதர்களுக்கான லினக்சு" என்ற மகுட வாக்கியத்தோடு இது வெளிவருகிறது.[3]
விரைவான உண்மைகள் விருத்தியாளர், இயங்குதளக் குடும்பம் ...
உபுண்டு | |
உபுண்டு 12.04 LTS (Precise Pangolin) | |
விருத்தியாளர் | கனோனிக்கல் நிறுவனம் / உபுண்டு பவுண்டேசன் |
---|---|
இயங்குதளக் குடும்பம் |
லினக்ஸ் |
மூலநிரல் வடிவம் | திறந்த மூலநிரல் |
முதல் வெளியீடு | 20 அக்டோபர் 2004; 19 ஆண்டுகள் முன்னர் (2004-10-20) |
பிந்தைய நிலையான பதிப்பு | 18.04 Bionic Beaver / 26 ஏப்ரல் 2018; 6 ஆண்டுகள் முன்னர் (2018-04-26) |
பிந்தைய நிலையற்றப் பதிப்பு | 17.10 Artful Aardvark / 26 அக்டோபா், 2017 |
கிடைக்கும் மொழிகள் | பன்மொழி (Multilingual) 55 க்கும் மேற்பட்ட மொழிகள் |
மேம்பாட்டு முறை | APT |
தொகுப்பு மேலாளர் | dpkg, Snappy |
நிலைநிறுத்தப்பட்ட இயங்குதளம் |
I386, IA-32, AMD64; ARMhf (ARMv7 + VFPv3-D16), ARM64; Power, ppc64le; s390x |
கருனி வகை | Monolithic kernel, Linux |
இயல்பிருப்பு இடைமுகம் | குநோம் |
அனுமதி | குனூ பொதுமக்கள் உரிமம் (GNU GPL) |
தற்போதைய நிலை | தற்போதைய (Current) |
வலைத்தளம் | www.ubuntu.com |
மூடு