லினக்சு
லினக்சு கருனியை அடிப்படையாகக் கொண்ட இயங்குதளம். இதில் குனு/லினக்சு மற்றும் ஆன்ட்ராய்டு இயங்க / From Wikipedia, the free encyclopedia
லினக்ஸ் (Linux) என்பது கணினிகளில் உள்ள ஓர் இயக்குதளமாகும். இவ்வியக்குதளம் பொதுவாக லினக்ஸ் என்ற பெயரால் அறியப்படுகிறது. ஆனாலும், இதன் மிகச்சரியான நிறுவன ஏற்புப் (உத்தியோகபூர்வமான) பெயர் குனூ/லினக்ஸ் என்பதேயாகும்.லினக்ஸ் பரவலாக மஞ்சள்-கருப்பு-வெள்ளை பென்குயின் பறவைச் சின்னத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது.
விரைவான உண்மைகள்
மூடு
ஆப்பிள் மாக்கின்டோஷ், யுனிக்ஸ், சொலாரிஸ், பீ எஸ் டீ (BSD), மைக்ரோசாப்ட் விண்டோஸ் போலவே இதுவும் ஒரு இயக்குதளம் என்ற போதிலும் தத்துவ அடிப்படையில் இது மற்றவற்றிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது.