கட்டற்ற மென்பொருள்
பயனர்கள் சுதந்திரமாக இயக்க, படிக்க, மாற்ற, விநியோகிக்க அனுமதிக்கும் விதிமுறைகளின் கீழ் விநியோ / From Wikipedia, the free encyclopedia
கட்டற்ற மென்பொருள் அமையத்தின் வரைவிலக்கணப்படி, கட்டற்ற மென்பொருள் என்பது, எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்த, நகலெடுக்க, கற்க, மாற்றம் செய்ய, மறு விநியோகம் செய்யப்படக்கூடியமென்பொருளாகும். மென்பொருட்களுக்கான கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலையுறுதலே இதன் அடிப்படைக் கருத்துருவாகும்.
கட்டற்ற மென்பொருள் என்பதற்கு எதிர் நிலையிலுள்ளவை தனியுரிமை மென்பொருட்களாகும் ( proprietary software). மென்பொருட்களை விலைக்கு விற்றல் என்பது கட்டற்ற மென்பொருள் தத்துவத்தின் படி தவறான செயல் அல்ல.
பொதுவாக மென்பொருள் ஒன்று கட்டற்ற மென்பொருளாக விநியோகிக்கப்படுவதற்கு, அம்மென்பொருளானது கட்டற்ற மென்பொருள் உரிம ஒப்பந்தம் ஒன்றோடு விநியோகிக்கப்படுகிறது. அத்தோடு, இருமக்கோப்புக்களாக வழங்கப்படும் மென்பொருட்களுக்கு, அவற்றின் ஆணைமூலமும் சேர்த்தே விநியோகிக்கப்படுகிறது.