![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/35/Tux.svg/langta-640px-Tux.svg.png&w=640&q=50)
லினக்சு
லினக்சு கருனியை அடிப்படையாகக் கொண்ட இயங்குதளம். இதில் குனு/லினக்சு மற்றும் ஆன்ட்ராய்டு இயங்க / From Wikipedia, the free encyclopedia
லினக்ஸ் (Linux) என்பது கணினிகளில் உள்ள ஓர் இயக்குதளமாகும். இவ்வியக்குதளம் பொதுவாக லினக்ஸ் என்ற பெயரால் அறியப்படுகிறது. ஆனாலும், இதன் மிகச்சரியான நிறுவன ஏற்புப் (உத்தியோகபூர்வமான) பெயர் குனூ/லினக்ஸ் என்பதேயாகும்.லினக்ஸ் பரவலாக மஞ்சள்-கருப்பு-வெள்ளை பென்குயின் பறவைச் சின்னத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/35/Tux.svg/320px-Tux.svg.png)
விரைவான உண்மைகள்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/47/Sound-icon.svg/45px-Sound-icon.svg.png)
இந்த ஒலிக்கோப்பு 23 March 2023 தேதியிட்ட லினக்சு பதிப்பில் இருந்து உருவாக்கப்பட்டது. இது கட்டுரையின் பிந்திய தொகுப்புக்களைக் காட்டாது. (ஒலி உதவி)
மூடு
ஆப்பிள் மாக்கின்டோஷ், யுனிக்ஸ், சொலாரிஸ், பீ எஸ் டீ (BSD), மைக்ரோசாப்ட் விண்டோஸ் போலவே இதுவும் ஒரு இயக்குதளம் என்ற போதிலும் தத்துவ அடிப்படையில் இது மற்றவற்றிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது.