உத்தரப் பிரதேசம்
இந்திய மாநிலம் From Wikipedia, the free encyclopedia
இந்திய மாநிலம் From Wikipedia, the free encyclopedia
உத்தரப் பிரதேசம் (Uttar Pradesh) இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்றாகும். இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் இதுவே. லக்னோ இம்மாநிலத்தின் தலைநகராகும். அலகாபாத், கான்பூர், வாரணாசி, ஆக்ரா ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். இந்தி, உருது ஆகியவை இம்மாநிலத்தில் பெரும்பான்மையாக பேசப்படும் மொழிகள். இந்தியாவின் ஆறு பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, சரண் சிங், வி. பி. சிங், சந்திரசேகர் இம்மாநிலத்தில் பிறந்தவர்கள்.
உத்தரப் பிரதேசம் | |
---|---|
மேலிருந்து கடிகாரச் சுற்றாக: தாஜ் மகால், ஆக்ரா கோட்டை, பத்தேப்பூர் சிக்ரி, சாரநாத், மணிகர்ணிகா படித்துறை, புதிய யமுனை பாலம் | |
சின்னம் | |
இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26.85°N 80.91°E | |
நாடு | இந்தியா |
மாநில அந்தஸ்து | 24 சனவரி 1950[1] |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | லக்னோ |
மாவட்டங்கள் | 75[2][3] |
அரசு | |
• நிர்வாகம் | உத்தரப் பிரதேச அரசு |
• ஆளுநர் | ஆனந்திபென் படேல்[4] |
• முதலமைச்சர் | யோகி ஆதித்தியநாத் (பாஜக) |
• சட்டமன்றம் | ஈரவை (404 + 100 இடங்கள்) |
• நாடாளுமன்ற தொகுதிகள் | மாநிலங்களவை 31 மக்களவை 80 |
• உயர் நீதிமன்றம் | அலகாபாத் உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,43,290 km2 (93,930 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 4வது |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 19,98,12,341 |
• தரவரிசை | 1-வது |
• அடர்த்தி | 820/km2 (2,100/sq mi) |
இனம் | உத்தரப் பிரதேசியர் |
GDP (2018–19) | |
• மொத்தம் | ₹14.89 இலட்சம் கோடி (US$190 பில்லியன்) |
• தனிநபர் வருமானம் | ₹55,339 (US$690) |
மொழிகள்[8] | |
• அலுவல்முறை | இந்தி |
• கூடுதல் அலுவல்முறை | உருது |
நேர வலயம் | ஒசநே+05:30 (IST) |
UN/LOCODE | IN-UP |
வாகனப் பதிவு | UP XX—XXXX |
HDI (2017) | 0.583[9] medium · 35th |
கல்வியறிவு (2011) | 67.68%[10] |
பாலின விகிதம் (2011) | 912 ♀/1000 ♂[10] |
இணையதளம் | Official Website |
இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலமான உத்தரப் பிரதேசம், இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மாநிலங்களில் ஐந்தாம் இடம் வகிக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள் உத்தராகண்டம், இமாசலப் பிரதேசம், அரியானா, தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், மற்றும் பீகார் ஆகியவை. உத்திரப் பிரதேசத்தின் வடக்கில் நேபாள நாடு அமைந்துள்ளது. கங்கை, யமுனை, கோமதி ஆறு ஆகிய பெரு நதிகள் உத்தரப் பிரதேசத்தின் வழியாக ஓடுவதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது.
2000ஆம் ஆண்டு உத்தராகண்டம் மாநிலம், உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது. மாநிலத்தின் தெற்கு பகுதிகளில் புந்தேலி மொழி பேசும் வறண்ட வானிலை கொண்ட புந்தேல்கண்ட் மேட்டு நிலங்கள் அமைந்துள்ளது.
வேத காலத்தில் உத்தரப் பிரதேசம் குரு நாடு, பாஞ்சாலம் மற்றும் கோசல நாடு என மூன்று பகுதிகளாக இருந்தது.
வரலாற்றுக் காலத்தில் உத்தரப் பிரதேசம் புந்தேல்கண்ட், அவத், ரோகில்கண்ட், பூர்வாஞ்சல் மேல், நடு மற்றும் கீழ் தோப் பகுதிகள் என ஐந்து பகுதிகளாக உள்ளது.
பண்டைய வேத காலத்தில் உத்தரப் பிரதேசப் பகுதிகளை குருக்கள், பாஞ்சாலர்கள் மற்றும் கோசலர்கள் என மூன்று அரச குலங்கள் ஆண்டனர்.
வரலாற்றுக் காலத்தில் இம்மாநிலத்தின் வளமான அவத், தோவாப், பூர்வாஞ்சல், புந்தேல்கண்ட் மற்றும் ரோகில்கண்ட் பகுதிகளை தில்லி சுல்தானகம் மற்றும் மொகலாயர்களாலும்; பின்னர் பாரசீக சியா இசுலாமிய நவாப்புகள் மற்றும் ஆப்கானிய பஷ்தூன் அரச குலம் 1719 முதல் 1858 முடிய தனியுரிமையுடனும்; பின்னர் சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர் 1858 முதல் 1947 முடிய ஆங்கிலேயர்களுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் கப்பம் செலுத்தி சுதேச சமஸ்தான மன்னர்களாக ஆட்சி செய்தனர். பின்னர் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948-ஆம் ஆண்டில் அவத் இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அவத் பகுதிகளில் சமசுகிருதம் – பாரசீகம் கலந்த அவதி மொழி பேசப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 199,812,341 ஆக உள்ளது. நகர்புறங்களில் 22.27% மக்களும், கிராமப்புறங்களில் 77.73% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 20.23% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 104,480,510 ஆண்களும் மற்றும் 95,331,831 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 912 வீதம் உள்ளனர். 240,928 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 829 ஆக உள்ளது. இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 67.68% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 77.28% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 57.18% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 30,791,331 ஆக உள்ளது.[11]
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 159,312,654 (79.73 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 38,483,967 (19.26%) ஆகவும், சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 643,500 (0.32%) ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 356,448 (0.18%) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 213,267 (0.11%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 206,285 (0.10%) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 13,598 (0.01%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 582,622 (0.29%) ஆகவும் உள்ளது.
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது, பஞ்சாபி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.[8]
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பதினெட்டு நிர்வாகக் கோட்டங்களின் கீழ், எழுபது வருவாய் மாவட்டங்கள் அமைந்துள்ளன. அவைகள் பின்வருமாறு;
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களும், ஆன்மிக வழிபாட்டுத் தலங்களும்; தாஜ்மகால், பத்தேப்பூர் சிக்ரி , ஆக்ரா, பிரயாகை, வாரணாசி, அயோத்தி, ராம ஜென்மபூமி, மதுரா, பிருந்தாவனம், கிருஷ்ண ஜென்மபூமி, கயை, புத்தகயா, சாரநாத் மற்றும் குசிநகர் ஆகும்.
இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர், பனாரசு இந்து பல்கலைக்கழகம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம், இந்திய மேலாண்மை கழகம் லக்னோ, இராஜிவ் காந்தி பெட்ரேலிய தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் மோதிலால் நேரு தேசிய தொழில் நுட்பக் கழகம் ஆகும்.
மாநிலத்தின் பொருளாதாரம் வேளாண்மைத் தொழிலையே சார்ந்து உள்ளது. முக்கிய விளைபொருட்கள் கோதுமை, நெல், கரும்பு ஆகும். புதிய நொய்டா பெருநகர் ஆசியாவில் மிக விரைவாக வளர்ந்துவரும் தொழில் நகரங்களில் ஒன்றாக உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.