Remove ads
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
காசியாபாத் மாவட்டம் (Ghaziabad district, இந்தி: ग़ाज़ियाबाद ज़िला, உருது: غازی آباد ضلع}) வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேசியத் தலைநகர் வலயத்தில் அமைந்துள்ள, பெரும்பாலும் புறநகரப் பகுதியாக விளங்கும், ஓர் மாவட்டமாகும். காசியாபாத் நகரம் இதன் தலைமையகமாக விளங்குகிறது. மீரட் கோட்டத்தின் அங்கமாக உள்ளது. தில்லியில் பணிபுரியும் பலருக்கு வசிப்பிடங்கள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளதால் அவர்கள் "இரவுநேர வாசிகள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.
காசியாபாத் மாவட்டம் गाजियाबाद ज़िला غازی آباد ضلع | |
---|---|
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் காசியாபாத் மாவட்டம் அமைவிடம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
Administrative division | மீரட் கோட்டம் |
தலைநகரம் | காசியாபாத் |
பரப்பளவு | 1,548 km2 (598 sq mi) |
மக்கள்தொகை | 4,661,452 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 3,954/ச.கி.மீ (10,240.8/ச.மீ) |
நகரிய மக்கள்தொகை | 54.8% (2001) |
படிப்பறிவு | 85% |
இன வீதம் | 860 (2001) |
கோட்டம் | 4 |
மக்களவைத் தொகுதி | 1. அம்ரோகா (ஜோதிபா பூலேநகர் மாவட்டத்துடன் இணைந்து), 2. மீரட் (மீரட் மாவட்டத்துடன் இணைந்து) 3. காசியாபாத் |
சட்டப் பேரவைத் தொகுதிகள் | 8 |
அலுவல் இணையதளம் |
2011ஆம் ஆண்டுப்படி உத்தரப் பிரதேசத்தின் 71 மாவட்டங்களில் அலகாபாத் மற்றும் மொரதாபாத் மாவட்டங்களை அடுத்து மூன்றாவது மிகுந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டமாக விளங்குகிறது.[1]
காசியாபாத் மாவட்டத்தின் வடமேற்கே பாக்பாத் மாவட்டமும் வடக்கே மீரட் மாவட்டமும் கிழக்கே யமுனா ஆற்றின் அடுத்த கரையில் ஜோதிபா பூலே மாவட்டமும் தென்கிழக்கே புலந்த்ஷயர் மாவட்டமும் தென்மேற்கே கௌதம் புத்தர் மாவட்டமும் மேற்கே தில்லியும் அமைந்துள்ளன.
காசியாபாத் 1740ஆம் ஆண்டில் பேரரசர் காசி-யுத்-தினால் கட்டப்பட்டது. இதற்கு தமது பெயரில் காசியுத்தின் நகர் எனப் பெயரிட்ட அவர் 120 அறைகளைக் கொண்ட பெரும் மாளிகையை எழுப்பினார். தொடர்வண்டி நிலையம் துவக்கப்பட்டபோது இப்பெயர் காசியாபாத் எனச் சுருக்கப்பட்டது. மீரட் மாவட்டத்தின் அங்கமாக இருந்த இப்பகுதி நவம்பர் 14, 1976 அன்று தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது.
2011 கணக்கெடுப்பின்படி காசியாபாத் மாவட்டம், இந்தியா மக்கள்தொகைf 4,661,452 ஆக,[1] அயர்லாந்திற்கு இணையாகவும்[2] அல்லது ஐக்கிய அமெரிக்காவின் தென் கரோலினாவிற்கு இணையாகவும்.[3] உள்ளது. இதனால் இந்தியாவின் 640 மாவட்டங்களில் 28வது நிலையில் உள்ளது.[1] மாவட்டத்தின் மக்கள்தொகை அடர்த்தி சதுர கிமீக்கு 4060ஆக உள்ளது .[1] 2001-2011 பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 41.66 % ஆக இருந்தது.[1] பாலின வீதம் 1000 ஆண்களுக்கு 878 பெண்களாக உள்ளது.[1] படிப்பறிவு வீதம் 85 % ஆகும்.[1][4]
இம்மாவட்டத்தில் 25% பேர்கள் சிறுபான்மையினர் ஆகும். அவர்களது சமூக-பொருளியல் கூறுகளின்படி தேசிய சராசரியை விட தாழ்ந்து பி1 பிரிவு மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.