மகோபா மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
மகோபா மாவட்டம் (Mahoba district) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 75 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் மகோபா ஆகும். இது சித்திரக்கூட கோட்டத்தில் அமைந்துள்ளது. சந்தேல இராஜபுத்திரர்கள் மகோபாவையும் தலைநகராகக் கொண்டு கி பி பத்தாம் நூற்றாண்டு முதல் பதின்முன்றாம் நூற்றாண்டு முடிய ஆண்டனர்.
மகோபாமாவட்டத்தின் இடஅமைவு உத்திரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்திரப் பிரதேசம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | சித்திரகூடம் |
தலைமையகம் | மகோபா |
பரப்பு | 2,884 km2 (1,114 sq mi) |
மக்கட்தொகை | 8,76,055 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 304/km2 (790/sq mi) |
படிப்பறிவு | 66.94 % |
பாலின விகிதம் | 880 |
வட்டங்கள் | 3 |
மக்களவைத்தொகுதிகள் | 1 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 2 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
ஹமீர்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளைப் பிரித்து 11 பிப்ரவரி 1995 அன்று மகோபா மாவட்டம் துவக்கப்பட்டது.
இம்மாவட்டம் உத்தரப் பிரதேச புந்தேல்கண்ட் பகுதியில் அமைந்துள்ளது. மகோபா நகரத்திற்கு அருகே கஜுராஹோ கோயில்கள் அமைந்துள்ளது. இப்பகுதியில் இந்தியுடன் புந்தேலி மொழியும் பேசப்படுகிறது.
மகோபா மாவட்டத்தின் வடக்கில் ஹமீர்பூர் மாவட்டம், வடகிழக்கில் பந்தா மாவட்டம், தெற்கில் சத்தர்பூர் மாவட்டம் மற்றும் மேற்கில் ஜான்சி மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மகோபா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 8,76,055 ஆகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு 2884 சதுர கி மீ., ஆகும். மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 304 நபர்கள் வாழ்கின்றனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கும் 880 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 66.94% ஆக உள்ளது. [1]
இம்மாவட்டத்தின் மக்கள் தொகையில் இந்து சமயத்தவர் மற்றும் சமண சமயத்தவர் கூடுதலாகவும், இசுலாமிய, கிறித்தவ , சீக்கிய, பௌத்த சமய மக்கள் தொகை குறைவாகவும் உள்ளது.
உத்தரப் பிரதேச பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் புந்தேலி மொழி உள்ளிட்ட வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
மகோபா மாவட்டம் மூன்று வருவாய் வட்டங்களையும்; நான்கு ஊராட்சி ஒன்றியங்களையும், 247 கிராம சபைகளையும்; 521 கிராமங்களையும்; இரண்டு நகராட்சிகளையும் கொண்டுள்ளது.
மேலும் மகோபா மற்றும் சர்க்காரி என இரண்டு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. இவ்விரண்டு சட்டமன்ற தொகுதிகளும் ஹமீர்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.
மகோபா மாவட்டத்தை பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய இந்தியாவின் 240 மாவட்டங்களில் ஒன்றாக இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 2006-ஆம் ஆண்டில் அறிவித்துள்ளதால், இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து இராஜ் அமைச்சகம் ஆண்டுதோறும் நிதியுதவி அளித்துவருகிறது.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.