உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
லக்கிம்பூர் கேரி (Lakhimpur Kheri) மாவட்டம் இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது அம்மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமாகும். இம்மாவட்டம் நேபாள நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லக்கிம்பூர் ஆகும். இம்மாவட்டம் லக்னௌ கோட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 7,680 கிமீ2 ஆகும்.
லக்கிம்பூர் கேரி மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
உத்தரப் பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (Lakhimpur, Uttar Pradesh): 27.6°N 80.34°E - 28.6°N 81.30°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
கோட்டம் | லக்னோ |
தலைமையிடம் | லக்கிம்பூர் |
அரசு | |
• மக்களவை தொகுதி | கேரி மககள்வை தொகுதி, தௌரக்ரா மக்களவை தொகுதி |
பரப்பளவு Total no of Villages : 1808 | |
• மாவட்டம் | 7,680 km2 (2,970 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மாவட்டம் | 40,21,243 |
• அடர்த்தி | 520/km2 (1,400/sq mi) |
• நகர்ப்புறம் | 11.46% |
Demographics | |
• எழுத்தறிவு | 49.10 % |
• பாலின விகிதம் | 894 |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | http://kheri.nic.in |
லக்கிம்பூர் கெரி மாவட்டம் லக்னோ பிரிவின் ஒரு பகுதியாகும். இந்த மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 7,680 சதுர கிலோமீட்டர் (2,970 சதுர மைல்) ஆகும்.[1] 2001 ஆம் ஆண்டின் தேசிய சனத் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் லக்கிம்பூர் கெரி சிறுபான்மை செறிவூட்டப்பட்ட மாவட்டமாகும்.[2]
துத்வா தேசிய பூங்கா லக்கிம்பூர் கெரியில் அமைந்துள்ளது. உத்தரபிரதேசத்தின் ஒரே தேசிய பூங்கா இதுவாகும். புலிகள், சிறுத்தைகள், சதுப்பு மான் , ஹிஸ்பிட் முயல்கள் மற்றும் வங்காள புளோரிகன் உள்ளிட்ட பல அரிய மற்றும் அழிவாய்ப்புக் கூடிய உயிரினங்களின் தாயகமாகும்.
இமயமலையின் அடிவாரத்தில் உள்ள தெராய் தாழ்நிலப்பகுதிகளில் இந்த மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான ஆறுகள் மற்றும் பசுமையான தாவரங்கள் காணப்படுகின்றன. இந்த மாவட்டம் சுமார் 7,680 சதுர கிலோமீற்றர் (2,970 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. தோராயமாக முக்கோண வடிவத்தில் காணப்படுகிறது. இந்த மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 147 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. லக்கிம்பூர் கெரியை வடக்கில் மோகன் நதி நேபாளத்தில் இருந்து பிரிக்கும் எல்லையாகவும், கிழக்கில் கவ்ரியாலா ஆறு பஹ்ரைச்சிலிருந்தும் பிரிக்கும் எல்லையாகவும் அமைந்துள்ளது. தெற்கில் சீதாபூர் மற்றும் ஹார்டோய் என்பன எல்லைகளாகவும் மேற்கில் பிலிபிட் மற்றும் ஷாஜகான்பூர் எல்லைகளாகவும் காணப்படுகின்றன.
இந்த மாவட்டம் மழைக்காலங்களைத் தவிர ஆண்டு முழுவதும் வெப்பமான காலநிலையை கொண்டிருக்கும். கோடையில் (மார்ச் முதல் ஜூன் வரை) வெப்பநிலை 40 °C (104 °F) க்கு அதிகமாகவும் மற்றும் குளிர்காலத்தில் (அக்டோபர் முதல் பிப்ரவரி வரை) 4 °C (39 °F) வரை குறைவாகவும் காணப்படும். குளிர்காலத்தில் இரவுகள் மிகவும் குளிராக இருக்கும். இந்த பருவத்தில் மூடுபனி மிகவும் பொதுவானது. லக்கிம்பூர் கெரியில் ஆண்டு சராசரி மழை 1,500.3 மில்லிமீற்றர் (59.07 அங்குலம்) ஆகும். சூலை முதல் செப்டம்பர் வரையிலான காலம் மழைக்காலமாகும்.[3]
லக்கிம்பூர் முழுவதும் ஏராளமான ஆறுகள் பாய்கின்றன. இவற்றில் சில ஷார்தா , காக்ரா , கோரியலா, உல், சாராயண், சவ்கா, கோம்தி , கதனா, சாராயு மற்றும் மோகனா என்பன சிலவாகும்.
தற்போது பின்தங்கிய பிராந்திய மானிய நிதி திட்டத்திலிருந்து (பி.ஆர்.ஜி.எஃப்) நிதி பெறும் உத்தரபிரதேசத்தின் 34 மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.[4]
கோதுமை, அரிசி, மக்காச்சோளம், பார்லி மற்றும் பருப்பு வகைகள் என்பன முக்கிய உணவுப் பயிர்கள் ஆகும். அண்மையில் விவசாயிகள் மாவட்டத்தில் புதினா பயிர்ச் செய்கையை தொடங்கினர். இது தெராய் பிராந்தியமாக இருப்பதால் புதினா சாகுபடிக்கு ஏற்றது. சர்க்கரை முக்கியமாக பெரும்பாலான விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. கரும்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் உணவு அல்லாத முக்கிய பயிர்கள் ஆகும். இந்த மாவட்டத்தில் கரும்பு பயிரிச் செய்கை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சீனித் தொழிற்சாலையான பஜாஜ் இந்துஸ்தான் லிமிடெட் நிறுவனம் இந்த மாவட்டத்தின் கோலா கோகரநாத்திலும் பாலியா கலானிலும் அமைந்துள்ளன.[5] பஜாஜ் இந்துஸ்தான் லிமிடெட் (பிஎச்எல்) சர்க்கரை ஆலைகள், கும்பியில் உள்ள பால்ராம்பூர் சீனித் தொழிற்சாலைகள் என்பன ஆசியாவின் மூன்று பெரி சீனித் தொழிற்சாலைகள் ஆகும்.
2008 ஆம் ஆண்டில் ஸ்டீல் ஆணையம் ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL) லக்கிம்பூரின் பெஹ்ஜாமில் ஒரு பெரிய எஃகு பதப்படுத்தும் தொழிற்சாலையை நிர்மாணிப்பதாக அறிவித்தது. கட்டுமானப் பணிகளை 2013 ஆம் ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டது.[6]
லக்கிம்பூரில் குடிசைக் கைத்தொழிலாக தூபங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி,
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, மாவட்டத்தில் 94.80% வீதமான மக்கள் இந்தி மொழியையும் , 3.10% உருது மொழியையும் 1.83% பஞ்சாபி மொழிகளை முதன்மை மொழிகளாக கொண்டிருந்தனர்.[8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.