ஆஸ்திரியா
மத்திய ஐரோப்பிய நாடு / From Wikipedia, the free encyclopedia
ஆத்திரியா (Austria ஒலிப்பு/ˈɔːstriə/ⓘ) அல்லது ஆத்திரியக் குடியரசு (Republic of Austria) என்பது ஐரோப்பாவில் உள்ள நிலப்பகுதிகளால் சூழப்பட்ட நாடு ஆகும். இங்கு 8.5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.[2] இதன் எல்லைகளாக வடக்கே செருமனி, செக் குடியரசு, கிழக்கே சிலோவாக்கியா, அங்கேரி, தெற்கே சுலோவீனியா, இத்தாலி, மேற்கே சுவிட்சர்லாந்து, இலீக்கின்சுடைன் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இதன் அரசியல் தலைநகர் வியென்னா ஆகும். ஆல்ப்சு வானிலை உள்ள இந்நாடு 83,855 சதுர கிலோமீட்டர்கள் (32,377 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. இது ஆல்புசு மலைத்தொடர்கள் பல உள்ள ஒரு அழகான நாடு ஆகும். நாட்டின் 32% நிலப்பகுதியே 500 மீட்டர்கள் (1,640 அடி) கீழாக உள்ளது; மிக உயரமான சிகரம் 3,798 மீட்டர்கள் (12,461 அடி) உள்ளது.[3] பெரும்பாலான மக்கள் இடாய்ச்சு மொழியின் உள்ளூர் பவேரிய வழக்குமொழிகளை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.[4] ஆத்திரிய இடாய்ச்சு மொழி நாட்டின் ஆட்சி மொழியாக உள்ளது.[5] மற்ற உள்ளூர் அலுவல் மொழிகளாக அங்கேரிய, பர்கென்லாண்ட் குரோசிய, சுலோவேனிய மொழிகள் உள்ளன.[3]
ஆத்திரியக் குடியரசு Republik Österreich | |
---|---|
குறிக்கோள்: — | |
நாட்டுப்பண்: Land der Berge, Land am Strome (செருமன்) மலைகளின் நாடு, ஆறுகள் சூழப்பட்ட நாடு | |
தலைநகரம் | வியன்னா |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | செருமன், சிலோவேன் , குரேசியன் மற்றும் அங்கேரியன் |
மக்கள் | ஆத்திரியர்கள் |
அரசாங்கம் | கூட்டாட்சி பாராளுமன்றக் குடியரசு |
• குடியரசுத்தலைவர் | அலெக்சாந்தர் வான் டெர் பெலென் |
• சான்சிலர் | செபாசிடியன் குருடசு |
தன்னாட்சி | |
• ஆத்திரிய அரச உடன்பாடு அமலில் உள்ளது. | சூலை 27, 1955 |
• நடுநிலைமை அறிவிப்பு | அக்டோபர் 26, 1955 (முன்பு: ஆத்திரியப் பேரரசு: 1804, முதல் ஆத்திரியக் குடியரசு: 1918) |
பரப்பு | |
• மொத்தம் | 83,883 km2 (32,387 sq mi) (115ஆவது) |
• நீர் (%) | 1.7 |
மக்கள் தொகை | |
• 2007 மதிப்பிடு | 8,316,487 (93ஆவது) |
• 2023 கணக்கெடுப்பு | 9,104,772 |
• அடர்த்தி | 109/km2 (282.3/sq mi) (78ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2008 மதிப்பீடு |
• மொத்தம் | $317.007 பில்லியன்[1] (34ஆவது) |
• தலைவிகிதம் | $39,647[1] (IMF) (8ஆவது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2008 மதிப்பீடு |
• மொத்தம் | $371.219 பில்லியன்[1] (23ஆவது) |
• தலைவிகிதம் | $44,851[1] (IMF) (12ஆவது) |
ஜினி (2000) | 29.1 தாழ் |
மமேசு (2005) | 0,951 Error: Invalid HDI value · 14ஆவது |
நாணயம் | யூரோ (€) ² (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (CET) |
ஒ.அ.நே+2 (CEST) | |
அழைப்புக்குறி | 43 |
இணையக் குறி | .at ³ |
|