ஜுராசிக் வேர்ல்ட்
From Wikipedia, the free encyclopedia
ஜுராசிக் வேர்ல்ட் (Jurassic World) என்பது 2015-இல் வெளிவந்த அமெரிக்க அறிபுனை சாகசத் திரைப்படம் ஆகும்.மேலும் இது ஜுராசிக் வேர்ல்ட் முத்தொகுதியின் முதல் படமும், ஒட்டுமொத்த ஜுராசிக் பார்க் தொடரின் நான்காம் படமும் ஆகும்.
ஜுராசிக் வேர்ல்ட் | |
---|---|
திரை வெளியீட்டுச் சுவரொட்டி | |
இயக்கம் | கோலின் திரெவாரோ |
தயாரிப்பு |
|
கதை |
|
மூலக்கதை | மைக்கேல் கிரைட்டன் இயற்றிய கதாபாத்திரங்கள் |
இசை |
|
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஜான் சுவார்ட்ஸ்மன் |
படத்தொகுப்பு | கெவின் சிடிட்டு |
கலையகம் | லெஜண்டரி பிக்சர்ஸ் ஆம்ப்லின் என்டேர்டைன்மென்ட் தி கென்னடி/மார்ஷல் கம்பெனி[1] |
விநியோகம் | யுனிவர்சல் பிக்சர்ஸ் |
வெளியீடு | மே 29, 2015 (லெ கிராண்ட் ரெக்ஸ்) ஜூன் 12, 2015 (அமெரிக்க ஐக்கிய நாடு) |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | |
மொத்த வருவாய் | $167.2 கோடி [3] |
ஜுராசிக் பார்க் அழிந்து 22 ஆண்டுகளுக்குப் பின் அதே ஈஸ்லா நுப்லார் தீவில் இப் படத்தின் கதை நடைபெறுகிறது. மீளுருவாக்கப்பட்ட தொன்மாக்களை அங்கு பத்தாண்டுகளாக காட்சிப்படுத்தி வந்த கருப்பொருள் பூங்கா, ஒரு கலப்பினத் தொன்மாவால் அழிகிறது.
யுனிவெர்சல் பிக்சர்ஸ் நிறுவனம், 2005 கோடையில் வெளியிடும் நோக்குடன் 2004 -இல் நான்காம் படத்தைத் தயாரிக்கத் தொடங்கியது. எனினும் திரைக்கதை தொடர்ந்து திருத்தியமைக்கப்பட்ட நிலையில் இப் படம் பத்தாண்டுகளாக முடக்கத்தில் இருந்தது. நிர்வாக தயாரிப்பாளராகச் செயல்பட்ட ஸ்பில்பேர்க்கின் ஆலோசனையைத் தொடர்ந்து திரை எழுத்தாளர்கள் ரிக் ஜாஃபாவும் அமண்டா சில்வரும், செயல்பாடுடைய ஒரு தொன்மாப் பூங்கா பற்றிய கதை வாய்ப்பை ஆராய்ந்தனர். 2013-இல் திரெவாரோ இயக்குநராக நியமிக்கப்பட்டபின் டெரெக் கொன்னோலியுடன் இணைந்து ஒரு புதிய திரைக்கதையை வரைகையில் அதே கருத்தைப் பின்பற்றினார். படப்பிடிப்பு, 2014 ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் லூசியானாவிலும் ஹவாயிலும் நடைபெற்றது.இண்டஸ்ட்ரியல் லைட் & மேஜிக் நிறுவனத்தின் CGI தொழில்நுட்பத்தைக் கொண்டும் லெகசி எபக்ட்ஸ் நிறுவனத்தின் அசைவூட்ட மாதிரிகளைக் கொண்டும் தொன்மாக்கள் உருவாக்கப்பட்டன.
ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படம் மே 10, 2015 அன்று முடிக்கப்பெற்று[4] ஜூன் 10 முதல் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியானது. உலகளவில் $ 50 கோடிக்கும் மேலாக ஈட்டி சாதனை படைத்த வார இறுதிக்குப்பின்[5] பாக்ஸ் ஆபிஸில் $ 160 கோடி ஈட்டியது. மேலும் இதுவரை அதிக வருவாய் ஈட்டிய ஆறாம் படமாகவும் 2015-இல் அதிக வருவாய் ஈட்டிய இரண்டாம் படமாகவும் ஜுராசிக் வேர்ல்ட் தொடரிலேயே அதிக வருவாய் ஈட்டிய படமாகவும் யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியிட்டதிலேயே அதிக வருவாய் ஈட்டிய படமாகவும்[6] (பணவீக்க சரிசெய்தலின்றி) விளங்குகிறது.
திரெவாரோவின் இயக்கம், பிராட் மற்றும் ஹோவர்டின் நடிப்பு, காட்சியமைப்பு ஆகியவை பாராட்டுகளையும் திரைக்கதை, கதைசொல்லல் ஆகியவை விமர்சனங்களையும் பெற்றன.[7][8]
இதன் தொடர்ச்சியாக ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் என்ற படம் ஜூன் 2018-இல் வெளியானது. நான்காம் படத்தின் காலகட்டத்திலேயே நடக்கும் கதைக்களத்தைக் கொண்ட ஜுராசிக் வேர்ல்ட்: கேம்ப் கிரடெஷியஸ் என்ற அசைவூட்டத் தொடர், செப்டம்பர் 2020-இல் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. ஜுராசிக் வேர்ல்ட் முத்தொகுதியின் இறுதிப்படமான ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன், ஜூன் 2022-இல் வெளியானது.