ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம்
From Wikipedia, the free encyclopedia
ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் (Jurassic World: Fallen Kingdom) என்பது 2018 -இல் வந்த அமெரிக்க அறிபுனை சாகசத் திரைப்படம் ஆகும். மேலும் இது ஜுராசிக் வேர்ல்ட் முத்தொகுதியின் இரண்டாம் படமும், ஒட்டுமொத்த ஜுராசிக் பார்க் தொடரின் ஐந்தாம் படமும் ஆகும். இதற்கு முந்தைய படத்தின் இயக்குனர் கோலின் திரெவாரோவும் முதல் இரண்டு படங்களை இயக்கிய ஸ்டீவன் ஸ்பில்பேர்க்கும் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகச் செயல்பட்டுள்ளனர்.
ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் Jurassic World: Fallen Kingdom | |
---|---|
இயக்கம் | ஜே. ஏ. பெயோனா |
கதை |
|
மூலக்கதை | மைக்கேல் கிரைட்டன் இயற்றிய கதாபாத்திரங்கள் |
இசை | மைக்கேல் ஜியாச்சினோ |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஆஸ்கார் ஃபோரா |
படத்தொகுப்பு | பெர்னாட் விலாப்லானா[1] |
விநியோகம் | யுனிவர்சல் பிக்சர்ஸ்[2] |
வெளியீடு | மே 21, 2018 (2018-05-21) (WiZink மையம்) சூன் 22, 2018 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 128 மணித்துளிகள்[3] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா[4] |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $ 17 கோடி[5] |
மொத்த வருவாய் | $ 130.8 கோடி[6] |
முந்தைய படத்தின் கதைக்களமான ஈஸ்லா நுப்லார் தீவிலேயே இப் படத்தின் கதையும் நடைபெறுகிறது. இத் தீவு ஓர் எரிமலை வெடிப்பால் அழியுமுன் ஓவன் கிராடி-யும் கிளேர் டியரிங்-கும் அங்கு எஞ்சியுள்ள தொன்மாக்களை மீட்க முயல்கின்றனர்.
முந்தைய படத்தில் நடித்த கிறிஸ் பிராட், பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட், பி. டி. வோங் ஆகியோர் மீண்டும் நடித்துள்ளனர். முதல் இரண்டு படங்களில் தோன்றிய ஜெஃப் கோல்ட்ப்ளும் தன் பாத்திரத்தை மீண்டும் ஏற்றுள்ளார். பிறர் புதுமுகங்களாவர்.
படப்பிடிப்பானது 2017 பிப்ரவரி முதல் ஜூலை வரை பிரிட்டனிலும் ஹவாயிலும் நடைபெற்றது. முதன்முதலாக மத்ரித்தில் மே 21 2018 அன்று இப்படம் திரையிடப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் ஜூன் 22, 2018 , அன்று வெளியானது. மேலும் தமிழில் ஜுராசிக் வேர்ல்ட்: சரிந்த சாம்ராஜ்யம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.[7]
உலகளவில் $ 130 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய இப் படம் , 100 கோடி டாலர் இலக்கைக் கடந்த மூன்றாவது ஜுராசிக் வரிசைப் படமாக அமைந்தது. மேலும் 2018-இல் அதிக வருவாய் ஈட்டிய மூன்றாவது படமாகவும் , இதுவரை அதிக வருவாய் ஈட்டிய 12-ஆவது படமாகவும் ஆனது. இப் படத்தில் பிராட் மற்றும் ஹோவர்டின் நடிப்பு, பெயோனாவின் இயக்கம், காட்சி வேலைப்பாடுகள் மற்றும் "வியத்தகு இருண்ட தருணங்கள்" ஆகியவை பாராட்டப்பெற்றன. , மறுபுறம் இத் தொடர் முன்பே நிறைந்திருக்கவேண்டியது என்பதாகக் கூறிய சில திறனாய்வாளர்கள் இப் படத்தின் திரைக்கதை மற்றும் கதைப்போக்கை விமர்சித்தனர்.[8]
இதன் தொடர்ச்சியாக மீண்டும் திரெவாரோ இயக்கத்தில் ஜுராசிக் வேர்ல்ட் : டொமினியன் என்ற படம் ஜூன் 10, 2022 அன்று வெளியானது.