ஜுராசிக் பார்க்
From Wikipedia, the free encyclopedia
ஜுராசிக் பார்க் (பின்னர் ஜுராசிக் வேர்ல்ட் எனவும் குறிப்பிடப்பட்டது)[1][2][3] என்பது ஒரு அமெரிக்க நாட்டு அறிபுனை ஊடக உரிமைக்குழுமம் ஆகும். இது படியெடுக்கப்பட்ட தொன்மாக்கள் வாழும் கருப்பொருள் பூங்கா ஒன்றின் வீழ்ச்சியை மையமாகக் கொண்டுள்ளது.
படைத்தவர் | மைக்கேல் கிரைட்டன் |
---|---|
அசல் வேலைப்பாடுகள் | ஜுராசிக் பார்க் (1990) |
உரிமையாளர் |
|
ஆண்டுகள் | 1993– இன்றுவரை Jurassic Park (franchise logo).png |
புதினங்கள் | |
சிறுகதைகள் |
|
வரைகதைகள் | List of comic books |
திரைப்படங்கள் |
|
குறும்படங்கள் |
|
ஆதிகாரப்பூர்வ வலைத்தளம் | |
http://www.jurassicworld.com/ |
1990 ஆம் ஆண்டில் அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் கிரைட்டன் எழுதிய ஒரு புதினம் வெளியாகும் முன்பே அதன் உரிமைகளை யுனிவர்சல் ஸ்டுடியோஸும் அம்ப்ளின் என்டர்டெயின்மென்டும் வாங்கியபோது இக்குழுமம் தொடங்கியது. இப்புதினமும் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்கின் திரைப்படத் தழுவலும் வெற்றிகரமாக அமைந்தன. இத் திரைப்படம் 2013-இல் முப்பரிமாண வடிவிலும் வெளியானது.[4] 2018 -இல், அமெரிக்கக் காங்கிரசு நூலகம் , இப் படத்தை "பண்பாட்டு, வரலாற்று அழகியல் முக்கியத்துவம் வாய்ந்தது" என்ற அடிப்படையில் அமெரிக்காவின் தேசிய திரைப்படப் பதிவேட்டில் பாதுகாப்பதற்காகத் தேர்ந்தெடுத்தது.[5]
இவற்றின் தொடர்ச்சிகளாக 1995-இல் ஒரு புதினமும் 1997-இல் ஒரு திரைப்படமும் வெளியாயின. இதன்பின் வந்த ஜுராசிக் பார்க் III முதலான படங்கள், கிரைட்டன் புதினங்களின் நேரடித் தழுவல்கள் அல்ல.
நான்காவதாக ஜுராசிக் வேர்ல்ட் என்ற படம் 2005-இல் வெளியாகவிருந்தது. எனினும் பலமுறை தடைபட்டபின் 2015 ஜூனில் வெளியானது. இது, தன் துவக்க வார இறுதியில் உலகளவில் $ 50 கோடி ஈட்டிய முதல் படம் என்ற பெருமையைப் பெற்றது.[6] மேலும் திரையரங்குகளில் மொத்தமாக $ 160 கோடி ஈட்டி அச்சமயத்தில் அதிக வருவாய் ஈட்டிய மூன்றாம் படமாகவும் 2015-இல் அதிக வருவாய் ஈட்டிய இரண்டாம் படமாகவும் ஆனது. பணவீக்க சரிசெய்தல் படி பார்த்தால் இப் படம் ஜுராசிக் பார்க்-குக்கு அடுத்து இக் குழுமத்திலேயே அதிக வருவாய் ஈட்டிய இரண்டாம் படமாக உள்ளது. இதன்பின் இக்குழுமம் ஜுராசிக் வேர்ல்ட் என்றே அழைக்கப்படுகிறது.
ஐந்தாவதாக ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் என்ற படம் 2018-இல் வெளியானது. இது உலகளவில் $130 கோடிக்குமேல் ஈட்டி $100 கோடியைக் கடந்த மூன்றாவது ஜுராசிக் திரைப்படமாகவும், 2018-இல் அதிக வருவாய் ஈட்டிய மூன்றாம் படமாகவும், தற்போதுவரை அதிக வருவாய் ஈட்டிய 13-ஆம் படமாகவும் உள்ளது. ஆறாவதாக ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் என்ற படம் ஜூன் 10, 2022 அன்று வெளியானது.
இக் குழுமத்திலுள்ள திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு எண்ணற்ற நிகழ்பட ஆட்டங்களும் வரைகதைகளும் (comics) வெளியாகியுள்ளன. உலகெங்கும் உள்ள யுனிவர்சல் கருப்பொருள் பூங்காக்களில் இவற்றின் அடிப்படையிலான நீர் சவாரிகளும் திறக்கப்பட்டுள்ளன. 2000-ஆம் ஆண்டு நிலவரப்படி இக்குழுமம் $ 500 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.[7] பல அசைவூட்டப் படங்களை லெகோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ், ட்ரீம்வொர்க்ஸ் அனிமேஷன் ஆகியன 'ஜுராசிக் வேர்ல்ட்: கேம்ப் கிரடெஷியஸ்' என்ற அசைவூட்டக் குறும்படத் தொடரை செப்டம்பர் 18, 2020 அன்று வெளியிட்டன.