ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்
From Wikipedia, the free encyclopedia
ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன் (Jurassic World: Dominion) என்பது 2022-இல் கோலின் திரெவாரோ இயக்கத்தில் வெளிவந்த அமெரிக்க அறிபுனை சாகசத் திரைப்படம் ஆகும். மேலும் இது ஜுராசிக் வேர்ல்ட் முத்தொகுதியின் இறுதிப் படமும், ஒட்டுமொத்த ஜுராசிக் பார்க் தொடரின் ஆறாம் படமும் ஆகும். திரெவாரோவும் முதல் இரண்டு படங்களை இயக்கிய ஸ்டீவன் ஸ்பில்பேர்க்கும் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகச் செயல்பட்டுள்ளனர்.
ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன் | |
---|---|
இயக்கம் | கோலின் திரெவாரோ |
திரைக்கதை |
|
இசை | மைக்கேல் ஜியாச்சினோ[1] |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஜான் ஸ்வார்ட்ஸ்மன் |
படத்தொகுப்பு | மார்க் சாங்கர்[2] |
விநியோகம் | யுனிவர்சல் பிக்சர்ஸ்[3] |
வெளியீடு | சூன் 11, 2021 (2021-06-11) |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $16.5 கோடி[4] |
ஈஸ்லா நுப்லார் தீவின் தொன்மாக்கள் அமெரிக்கத் தலைநிலத்திலும் உலகிலும் பரவத் தொடங்கி நான்காண்டுகள் கடந்தபின் இப் படத்தின் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.[5][6][7][8][9][10]
முந்தைய படங்களில் தோன்றிய நடிகர்களுள் 10 பேர் தங்கள் பாத்திரங்களை மீண்டும் ஏற்றுள்ளனர். இவர்களோடு புதுமுகங்களும் இணைகின்றனர்.
இப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 24, 2020 அன்று துவங்கியது. பின்னர் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மார்ச் 13, 2020 அன்று நிறுத்திவைக்கப்பட்டது. ஜூலை 6 அன்று மீண்டும் துவங்கி நவம்பர் 6 அன்று நிறைவுற்றது.
யுனிவர்சல் ஸ்டுடியோஸால் வழங்கப்பட்ட இப் படம் மே 23, 2022 அன்று மெக்சிக்கோ சிட்டியில் திரையிடப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் ஜூன் 10, 2022 அன்று ஐமேக்ஸ், 4DX, RealD 3D, டால்பி சினிமா ஆகிய திரை வடிவங்களில் வெளியானது.[11][12][13][14][15] உலகளவில் $75.9 கோடி வருவாய் ஈட்டி, 2022 பட வருவாய்ப் பட்டியலில் நான்காம் இடம் பெற்றது. பல திறனாய்வாளர்கள் இத் தொடர் முன்பே நிறைந்திருக்கவேண்டியது என்பதாகக் கூறினர்.