இர்பான் கான்
From Wikipedia, the free encyclopedia
இர்பான் அலி கான் (Irfan Ali Khan, 7 சனவரி 1967 – 29 ஏப்ரல் 2020)[2] இந்தியத் திரைப்பட, நாடக நடிகர் ஆவார். இவர் குறிப்பாக இந்தி பாலிவுட் திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார். அத்துடன் ஆங்கிலேய, அமெரிக்கத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்தியத் திரைப்படத்துறையில் ஒரு சிறந்த நடிகராக அறியப்படும் இவர்,[3][4] 30 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றியுள்ளார். தேசிய திரைப்பட விருது, ஆசியத் திரைப்பட விருது, நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்படப் பல விருதுகளை வென்றுள்ளார். 2011 இல் இவருக்குப் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[5]
இக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம்
கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும் |
விரைவான உண்மைகள் இர்பான் கான்Irfan Khan பத்மசிறீ, பிறப்பு ...
இர்பான் கான் Irfan Khan பத்மசிறீ | |
---|---|
2015 இல் கான் | |
பிறப்பு | சகாப்சாத் இர்பான் அலி கான்[1] (1967-01-07)7 சனவரி 1967 செய்ப்பூர், ராஜஸ்தான், இந்தியா |
இறப்பு | 29 ஏப்ரல் 2020(2020-04-29) (அகவை 53) மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
இறப்பிற்கான காரணம் | பெருங்குடல் தொற்று |
படித்த கல்வி நிறுவனங்கள் | நாடகத் தேசியப் பள்ளி |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1985–2020 |
வாழ்க்கைத் துணை | சுதப்பா சிக்தர் (தி. 1995) |
பிள்ளைகள் | 2 |
மூடு
2018 இல் இர்பான் கான் மூளைத்தண்டு வட நரம்புக் கட்டியால் பாதிக்கப்பட்டார்.[6][7] 2020 ஏப்ரல் 29 இல் தனது 53 வது அகவையில் பெருங்குடல் தொற்றினால் காலமானார்.[2]