விராட்நகர்
From Wikipedia, the free encyclopedia
விராட்நகர் (Biratnagar) (தேவநாகரி: विराटनगर) நேபாள நாட்டின் நான்கு மாநகராட்சிகளில் ஒன்றாகும்.[2] 40.108 சதுர மைல் (103.88km²) பரப்பளவு கொண்ட விராட்நகர், 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை அடிப்படையில் ஐந்தாம் இடத்திலும், மக்கள்தொகை அடர்த்தியில், காட்மாண்டிற்கு அடுத்து இரண்டாம் இடத்திலும் உள்ளது. விராட்நகரில் அதிக தொழிற்சாலைகள் செயல்படுவதால், இந்நகரை நேபாளத்தின் தொழில் தலைநகரம் எனப்பெயர் பெற்றுள்ளது. நேபாளத்தில் விராட்நகரின் புவியியல் 26°28'60"N 87°16'60"E பாகையில் அமைந்துள்ளது. [3]
விரைவான உண்மைகள் விராட்நகர் बिराटनगर महानगरपालिकाகோக்ரா (பழைய பெயர்), நாடு ...
விராட்நகர்
बिराटनगर महानगरपालिका கோக்ரா (பழைய பெயர்) | |
---|---|
மாநகரம் | |
விராட்நகர் மாநகராட்சி | |
அடைபெயர்(கள்): நேபாளத்தின் தொழில் தலைநகரம் | |
மொரங் மாவட்டத்தில் விராட்நகர் மாநகராட்சியின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26°27′15″N 87°16′47″E | |
நாடு | நேபாளம் |
வளர்ச்சி பிராந்தியம் | கிழக்கு வளர்ச்சி பிராந்தியம் |
மாநிலம் | மாநில எண் 1 |
மண்டலம் | கோசி |
மாவட்டம் | மொரங் |
Wards | 19 |
நாடாளுமன்றத் தொகுதிகள் | 3 |
வீடுகள் & வணிகா வளாகக் கட்டிடங்கள் | 45,131 |
நிறுவிய ஆண்டு | 1914 |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | விராட்நகர் மாநகராட்சி |
• மேயர் | பீம் பிராச்சூலி (நேபாள காங்கிரஸ்) |
• துணை மேயர் | திருமதி கார்க்கி (நேபாள காங்கிரஸ்) |
பரப்பளவு எல்லைகள் : கிழக்கில் சிங்கியாகி கோலா, மேற்கில் கேசலியா கோலா, வடக்கில் புத்திகங்கா மற்றும் தெற்கில் ஜோக்பாணி, இந்தியா | |
• மொத்தம் | 103.88 சகிமீ km2 (Formatting error: invalid input when rounding sq mi) |
ஏற்றம் | 80 m (260 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,42,548[1] |
• இனக் குழுக்கள் | சேத்திரி பாகுன் மார்வாரி மைதிலி லிம்பு தாரு ராய் கோச் ராஜ்வம்சி மேச்சி |
• சமயங்கள் | இந்து சமயம் சமணம் பௌத்தம் இசுலாம் மற்றும் கிறித்துவம் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | நேபாளி |
• வட்டார வழக்கு மொழிகள் | நேபாளி மொழி, மார்வாரி மொழி, மைதிலி மொழி, லிம்பு மொழி, தாரு மொழி மற்றும் கோச் மொழி |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 56600, 56613, 56614 |
Area code | 021 |
இளஞ்சூட்டு இடைவெப்ப மழைக்காலநிலை | மிதவெப்ப மண்டலம் |
இணையதளம் | biratnagar.gov.np biratnagarmun.gov.np |
Biratnagar was incorporated as District Headquarters by Col. Jit Bahadur Khatri. |
மூடு
விராட்நகர் 22 மே 2017 அன்று மாநகராட்சியாக நேபாள அரசால் அறிவிக்கப்பட்டது.[4] தன்கிசுனுவாரி மற்றும் ஜெகதா பகுதிகளை விராட்நகருடன் இணைத்த பின்பு இதன் மக்கள் தொகை 2,40,000 ஆக உயர்ந்துள்ளது. [5]