![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/02/Rishabh_Pant_%252829693622367%2529_%2528cropped%2529.jpg/640px-Rishabh_Pant_%252829693622367%2529_%2528cropped%2529.jpg&w=640&q=50)
ரிஷப் பந்த்
இந்தியத் துடுப்பாட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
ரிஷப் ராஜேந்திர பந்த் (Rishabh Rajendra Pant (பிறப்பு:4 அக்டோபர்,1997) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் புது தில்லி மாநிலத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடி வருகிறார்.[2] அக்டோபர் 22, 2015 ஆம் ஆண்டில் 2015-2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[3] டிசம்பர் 23, 2015 ஆம் ஆண்டில் 2015- 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற விஜய் அசாரே போட்டித் தொடரின் மூலம் பட்டியல் அ துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[4] டிசம்பர் 2015 ஆம் ஆண்டில் 2016 ஆம் ஆண்டிற்கான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் விளையாடும் இந்தியத் துடுப்பாட்ட அணியில் இவருக்கு இடம் கிடைத்தது.[5]பெப்ரவரி 1, 2016 ஆம் ஆண்டில் இந்தத் தொடரில் 18 பந்துகளில் 50 ஓட்டங்கள் அடித்தார். இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் குறைவான பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார்.[6] 2018 இல் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.பெப்ரவரி 6,2016 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிநிர்வாகம் இவரை 1.9 கோடி ரூபாய் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. அன்றைய தினம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் நூறு அடித்து இந்திய அணி அரையிறுதிக்குச் செல்ல உதவினார்.[7]
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ரிஷப் ராஜேந்திர பந்த் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 4 அக்டோபர் 1997 (1997-10-04) (அகவை 26) ரூர்க்கி,[1] உத்தராகண்டம் இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடதுகை மட்டையாளர், | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | குச்சக் காப்பாளர், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 281) | 18 ஆகஸ்டு 2018 2018 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | டிசம்பர் 14 2018 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 224) | அக்டோபர் 21 2018 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | அக்டோபர் 27 2018 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 68) | நவம்பர் 25 2018 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 25 நவம்பர் 2018 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015- தற்போதுவரை | புது தில்லி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016- தற்போது வரை | டெல்லி டேர்டெவில்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 6 டிசம்பர் 2018 |