இந்திய நடிகை, இவர் 1980-90 ஆண்டுகளில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தார் From Wikipedia, the free encyclopedia
ராதா (மலையாளம்: രാധ; பிறப்பு உதய சந்திரிகா 3 ஜூன் 1966)[1] ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.[2] 1981 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் இவர் ஒரு புகழ்பெற்ற முக்கிய நடிகை இருந்தார். இவரது சகோதரி நடிகை அம்பிகாவும் இதே காலகட்டத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து எண்பதுகளில் பல தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளனர், இவர்கள் இருவரும் இணைந்து "ஏ. ஆர். எஸ். ஸ்டுடியோஸ்" என்னும் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். இந்நிறுவனம் 2013 ஆம் ஆண்டில் ஒரு புதிய உணவக வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.
ராதா | |
---|---|
60வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் 2013 நிகழ்ச்சியில் நடிகை ராதா | |
பிறப்பு | உதய சந்திரிகா சூன் 3, 1966 திருவனந்தபுரம், கேரளா, இந்தியா |
செயற்பாட்டுக் காலம் | 1981 முதல் 1991 வரை |
பெற்றோர் | தந்தை : கருணாகரன் நாயர் தாயாா் : சரசம்மா |
வாழ்க்கைத் துணை | ராஜசேகரன் நாயர் (தி.1991 - தற்போது வரை) |
பிள்ளைகள் | கார்த்திகா நாயர் விக்னேஷ் நாயர் துளசி நாயர் |
உறவினர்கள் | அம்பிகா (சகோதரி) |
விருதுகள் | கலைமாமணி சினிமா எக்ஸ்பிரஸ் |
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ’ஜோடி நம்பர் ஒன்’ நடன நிகழ்ச்சியின் 6 & 7 ஆவது பகுதிகளில் நடுவராகப் பொறுப்பாற்றியதன் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
திருவனந்தபுரம் மாவட்டம் கல்லராவில் கருணாகரன் நாயர்–சரசம்மா பிறந்த இவருக்கு அம்பிகா மற்றும் மல்லிகா என இரண்டு மூத்த சகோதரிகளும், அர்ஜுன் மற்றும் சுரேஷ் நாயர் என்ற இரண்டு இளைய சகோதரர்களும் உள்ளனர். இவரது சகோதரிகளுள் ஒருவரான அம்பிகாவும் இவரது காலத்தில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்தவராவார்.
இவர் 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 24 ஆண்டுகளாக மும்பையில் விடுதிகளை நடத்திவரும் இவர்களுக்கு சொந்தமாக கேரளா மாநிலம் கோவளத்தில் UDS என அழைக்கப்படும் இரண்டு உணவகங்களுடன், இங்கிலாந்தில் "ராக் அன் ரோல் கிச்சன்" (RRK) என்ற ஒரு உணவகமும் உள்ளது. இவர்களது கேரள உணவகங்கள் சிறந்த கடலோர கடற்கரை உல்லாச விடுதி விருதினை வென்றுள்ளன.
இவரது மூத்த மகளான கார்த்திகா நாயர், ஜோஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவரது இளைய மகளான துளசி நாயர் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலமாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.