From Wikipedia, the free encyclopedia
இரட்சகன் (Ratchagan) 1997 ஆம் ஆண்டு இந்தியத் தமிழில் வெளிவந்த காதல் அதிரடி திரைப்படமாகும். கே. டி. குஞ்சுமோன் தயாரிப்பில், பிரவீன் காந்தின் அறிமுக இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் இசை, பின்னணி இசை ஆகியவற்றிற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலமாக நாகார்ஜுனா, சுஷ்மிதா சென் ஆகியோர் தமிழில் அறிமுகமானார்கள். ரகுவரன், எஸ். பி. பாலசுப்பிரமணியம், வடிவேலு கிரீஷ் கர்னாட் ஆகியோர் துணை வேடங்களில் நடிந்திருந்தனர். இத்திரைப்படம் 1997 அக்டோபர் 30 அன்று வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் வெளிவந்த நேரத்தில் மிகவும் விலையுயர்ந்த இந்தியப் படமாக இருந்தது. சுஷ்மிதா சென் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த முதலும் கடைசியுமான தமிழ்த் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.[1]
ரட்சகன் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | பிரவீன்காந்த் |
தயாரிப்பு | கே. டி. குஞ்சுமோன் |
கதை | கிரேசி மோகன் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | நாகர்ஜுனா சுஷ்மிதா சென் எஸ். பி. பாலசுப்பிரமணியம் வடிவேல் |
ஒளிப்பதிவு | அஜெயன் வின்சண்ட் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
வெளியீடு | அக்டோபர் 30, 1997 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்தின் எட்டு பாடல்களுக்கும், ஒரு தலைப்பு பாடலுக்கும் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.[2] 1997இல் இத்திரைப்படத்தின் இசை உரிமையை டி- சீரியசு வாங்கியது.[3]
தமிழ் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "சோனியா சோனியா" | வைரமுத்து | உதித் நாராயண், பி. உன்னிகிருஷ்ணன், ஹரிணி | 5:35 | ||||||
2. | "லவ் அட்டேக்" | வாலி | கோபால் இராவ், கவிதா பத்வால் | 5:01 | ||||||
3. | "சந்திரனை தொட்டது யார்" | வைரமுத்து | ஹரிஹரன், சுஜாதா மோகன் | 6:46 | ||||||
4. | "கனவா இல்லை காற்றா" | வைரமுத்து | ஸ்ரீநிவாஸ் | 4:34 | ||||||
5. | "லக்கி லக்கி" | வைரமுத்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுக்விந்தர் சிங், சுவர்ணலதா | 6:06 | ||||||
6. | "நெஞ்சே நெஞ்சே" | வைரமுத்து | கே. ஜே. யேசுதாஸ், சாதனா சர்கம் | 6:56 | ||||||
7. | "போகும் வழியெல்லாம்" | வைரமுத்து | கே. எஸ். சித்ரா | 4:13 | ||||||
8. | "மெர்க்குரி பூக்கள்" | வாலி | அனுபமா, சுவர்ணலதா | 5:23 | ||||||
9. | "தலைப்பு இசை" (இசைக்கருவி) | - | - | 3:42 | ||||||
மொத்த நீளம்: |
48:16 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.