இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
சுஷ்மிதா சென் (Sushmita Sen; இந்தி: सुष्मिता सेन, பிறப்பு 19 நவம்பர் 1975) என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார். 18 வயதில் பெமினா மிஸ் இந்தியா, 1994 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்சு போன்ற அழகுப் போன்ற போட்டிகளில் வென்றார்.[4]
சுஷ்மிதா சென் | |
---|---|
2023 இல் சென் | |
பிறப்பு | 19 நவம்பர் 1975[1][2] ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா[3] |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1994 – தற்போதும் |
பட்டம் | பெமினா மிஸ் இந்தியா 1994 மிஸ் யுனிவர்சு 1994 |
பிள்ளைகள் | 2 |
சென் 19 நவம்பர் 1975 அன்று ஐதராபாத்தில் வங்காள வைத்தியா குடும்பத்தில் பிறந்தார், இவரது தந்தை சுபீர் சென் இந்திய விமானப்படை முன்னாள் வானூர்திச் சீறகத் தலைவர். இவரது தாய் சுப்ரா சென் நகை வடிவமைப்பாளர், துபாயை தளமாகக் கொண்ட கடையின் உரிமையாளர்.[5][6] இவருக்கு ராசீவ் சென் என்ற இளைய சகோதரர் இருக்கிறார், ராசீவ் தொலைக்காட்சி நடிகை சாரு அசோபாவை மணந்தார்.[7] சென் புது தில்லியில் உள்ள விமானப்படை பொன்விழா பயிலகத்திலும்[8] சிக்கந்தராபாத்திலுள்ள தூய அன்னா உயர்நிலைப்பள்ளியிலும் கல்வி பயின்றார், மேற்கொண்டு உயர் கல்வியைத் தொடரவில்லை.[9][10]
1994 இல், 18 வயதில் சென் நுழைந்து பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். மிஸ் யுனிவர்சு 1994 போட்டியில் போட்டியிடும் உரிமையை பெற்று,[11][12] மிஸ் யுனிவர்சு போட்டியில், மிஸ் கொலம்பியா கரோலினா கோம்ஸ் மற்றும் மிஸ் வெனிசுவேலா மினோர்கா மெர்காடோ ஆகியோருக்குப் பிறகு, முதற்கட்டப் போட்டியில் சென் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அடுத்த சுற்றுகளில் சென் இரண்டாவது, ஐந்தாவது, மூன்றாவது இடத்தைப் பிடித்தார், இறுதியாக மிஸ் யுனிவர்சு 1994 பட்டத்தையும் அதன் கிரீடத்தையும் வென்றார்.[13][14]
மிஸ் யுனிவர்சு இந்திய பிரதிநிதி அழகியைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை டைம்சு குழுமம் கைவிட்ட பிறகு, ஐ அம் சீ – மிஸ் யுனிவர்சு இந்தியா என்ற திட்டத்தை சென் தொடங்கினார், அது மூன்றாண்டுகளுக்கு (2010-2012) இயங்கியது. இதை தொடர்ந்து பெமினா இந்தியாவுக்கு பொறுப்பேற்றார்.[15][16]
சனவரி 2016 இல், மிஸ் யுனிவர்சு 2016 நடுவர்களில் ஒருவராக சென் பிலிப்பீன்சு நாட்டிலுள்ள மணிலா பெருநகரத்தில் மால் ஆப் ஆசியா அரங்கில் தோன்றினார்.[17] சிந்தியா பெய்லி, மிக்கி போர்டுமேன், பிரான்சின் லாப்ராக், லீலா லோப்சு, தயனாரா டோரசு ஆகியோருடன் நடுவராக இணைந்தனர்.[18]
மிஸ் யுனிவர்சை வென்ற பிறகு, சென் இந்தித் திரையுலகில் நுழைந்தார். இவரது முதல் திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியான தஸ்தக் என்ற திரில்லர் திரைப்படம், இதில் சரத் கபூர் நடித்தார்.[19]
இவர் 1997 ஆம் ஆண்டு ரட்சகன் என்ற தமிழ் அதிரடித் திரைப்படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடித்தார்.[20] இது வெளியான சமயத்தில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாக இருந்தது.[21] 1998 ஆம் ஆண்டில், ஜோர் என்ற இந்தித் திரைப்படத்தில் சன்னி தியோலுக்கு ஜோடியாக நிருபராக நடித்தார் இது திரைப்பட நுழைவு சீட்டு விற்பனையகத்தில் தோல்வியை தழுவியது.[22]
1999 இல், டேவிட் தவான் இயக்கிய பிவி நம்பர்.1 என்ற இந்தி நகைச்சுவைத் திரைப்படத்தில் சல்மான் கான், கரிஷ்மா கபூருடன் இணைந்து ரூபாலி வாலியா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் பரந்த அங்கீகாரத்தைப் பெற்றார். இது விமர்சகர்களிடமிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது, 1999 இன் இரண்டாவது அதிக வசூல் செய்த திரைப்படமாக உருவானது.[23] , "சென் வித்தியாசமான பாத்திரத்தில் முத்திரை பதிக்க கடுமையாக முயற்சித்துள்ளார், ஆனால் அவரது பாத்திரமே நினைவில் கொள்ளத்தக்கதாக இல்லை." என்று ரெடிப்.காம் சையத்து பிர்தௌசு அஷ்ரப் குறிப்பிட்டார். இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.[24] அதே ஆண்டு, சிர்ப் தும் என்ற காதல் திரைப்படத்தில் ஆரத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கான இரண்டாவது பரிந்துரையைப் பெற்றார். "படத்தின் நட்சத்திரம்" என்றார் ரெடிப்.காம் சர்மிளா தாலிகுலம்.[25] அந்த வருடத்தின் இறுதிப் படம் ஹிந்துசுதான் கி கசம் இதில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்தார், இப்படம் சராசரி வசூலை பெற்றது.[26]
2000 இல், ஆகாசு என்ற இந்தி அதிரடி திரில்லர் திரைப்படத்தில் சுனில் செட்டிக்கு ஜோடியாக காவல் அதிகாரியாக நடித்தார்.[27]
2001 ஆம் ஆண்டில், முதன்முதலில் கோவிந்தாவுக்கு ஜோடியாக கியோ கியி... மெயின் ஜுத் நஹின் போல்டா என்ற திரைப்படத்தில் நடித்தார்.[28] அந்த ஆண்டின் இரண்டாவது திரைப்படமான பஸ் இத்னா சா குவாப் ஹை திரைப்படத்தில் நடித்தார்.[29]
சென் 2002 இல் இவர் நடித்த பாத்திரங்களுக்காக பாராட்டைப் பெற்றார். ஆன்கென் என்ற 2002 ஆண்டின் முதல் திரைப்படத்தில் அர்ஜுன் ராம்பால், அக்சய் குமார் ஆகியோருக்கு ஜோடியாக இவர் ஒரு ஆசிரியை பாத்திரத்தில் நடித்தார், விமர்சன ரீதியாக நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது, 2002 ஆம் ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் செய்த திரைப்படம் இதுவாகும்.[30][31] அடுத்ததாக தும்கோ நா பூல் பாயேங்கே என்ற அதிரடி திரில்லர் திரைப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்தார்.[32] அந்த ஆண்டின் இறுதித் திரைப்படமான ஃபில்ஹால்... என்ற காதல் திரைப்படத்தில் பதிலித்தாய் பாத்திரத்தில் நடித்தார். "சுஷ்மிதா சென்னின் சிறப்பான நடிப்பு (இன்றைய தேதி வரை) மிகவும் கவர்ந்தது." ஐடில்பிரைன் இராதிகா இராஜாமணி என்றார்.[33]
2003 ஆம் ஆண்டு இவர் சமய்: வென் டைம் ஸ்டிரைக்சு என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்தார், அத்திரைப்படத்தில் ஒரு விதவைக் காவலராக நடித்தார் [34] பாலிவுட் அங்காமா தரண் ஆதர்ஷ், "சுஷ்மிதா சென், சவாலான பாத்திரத்தில் நடித்தார், தனது பாத்திரத்திற்கு முழு நியாயம் செய்கிறார்" என்று குறிப்பிட்டார்.[35]
இவர் நடித்த மூன்று படங்கள் 2004 இல் வெளியானது. முதலில் அவர் முதலில் வாஸ்து சாஸ்திரா என்ற திரைப்படத்தில் ஜே. டி சக்ரவர்த்திக்கு ஜோடியாக மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்தார்.[சான்று தேவை] இரண்டாவது மேயின் ஹூன் நா என்ற திரைப்படமானது இவரது தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த திரைப்படமாகும், இதில் சாருக்கானுக்கு ஜோடியாக வேதியியல் ஆசிரியர் பாத்திரத்தில் நடித்தார். இப்படம் மொத்தம் ₹ 330,000,000 வசூலித்தது, அந்த ஆண்டில் அதிக வசூல் செய்த இரண்டாவது படமாகும்.[36][37] மூன்றாவது திரைப்படம், பைசா வசூல் என்ற திரைப்படத்தில் மனிஷா கொய்ராலாவுடன் இணைந்து நடித்தார்.[38]
சென் தனது 2005 ஆம் ஆண்டின் இரண்டு படங்களின் மூலம் வெற்றியைப் பெற்றார். மைனே பியார் கியூன் கியா? என்ற திரைப்படத்தில் சல்மான் கானுடன் நடித்தார். இது அந்த ஆண்டின் ஐந்தாவது அதிக வசூல் திரைப்படமாக உருவெடுத்தது.[39] ரெட்டிஃப்.காம் சுகன்யா வர்மா, "சென் நைனா பாத்திரத்தில் கவர்ச்சியாக தெரிகிறார், அறிவாக பேசுகிறார், சிறப்பாக செயல்படுகிறார். அவரது புத்திசாலித்தனம், சுற்றுப்புறத்தின் அபத்தத்தில் தலையிடாது. அது உறுதியளிக்கிறது." [40] அந்த ஆண்டின் பிற்பகுதியில், அவர் மெயின் ஐசா ஹி ஹூன் என்ற திரைப்படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ஒரு வழக்கறிஞர் பாத்திரத்தில் நடித்தார்.[41]
சென் 2006 இல் இரண்டு வெளியீடுகளைக் கொண்டிருந்தது. முதல் வெளியீடு, பெயர் சந்தியா தொழில் தாசி என்ற திரைப்படத்தில் அனுஜ் சாவ்னிக்கு ஜோடியாக ஒரு குழந்தையுடன் விபச்சாரியாக நடித்தார். ரெட்டிஃப்.காம் பிரியங்கா ஜெயின், "சுஷ்மிதா மனதைக் கவரும் நடிப்பை வெளிப்படுத்துகிறார். இது அவரது படம். இந்த படத்தைப் பார்ப்பதற்கு அவர் மட்டுமே காரணம்" என்றார்.[42] பின்னர் ஜிந்தகி ராக்சு என்ற இசைத் திரைப்படத்தில் சைனி அஹுஜாவுக்கு ஜோடியாக நடித்தார்.[43]
2007 இல், பிரசாந்த் ராஜ் சச்தேவ் ஜோடியாக ராம் கோபால் வர்மா கி ஆக் என்ற அதிரடி நாடகத் திரைப்படத்தில் விதவையாக நடித்தார்.[44] இது இதுவரை எடுக்கப்பட்ட படங்களில் மிக மோசமான படமாக கருதப்படுகிறது.[45] 2009 இல், கர்மா அவுர் ஹோலி என்ற நாடகத் திரைப்படத்தில் ரந்தீப் ஹூடாவுடன் நடித்தார், இதில் சென் முதன்முதலில் விமர்சன தோல்வி பெற்றார்.[46] பின்னர் கோவிந்தாவுக்கு ஜோடியாக டூ நாட் டிசுடர்ப் என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார்.[47]
2010 இல் இரண்டு வெளியீடுகளைக் கொண்டிருந்தது. அவர் முதலில் சாருக்கான், பர்தீன் கானுக்கு ஜோடியாக துல்ஹா மில் கயா என்ற காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் சிறப்பு வடிவழகியாகத் தோன்றினார். இத்திரைப்படம் அந்த ஆண்டில் சுமாரான வெற்றியைப் பெற்றது.[48] பின்னர் அதே ஆண்டு நோ பிராப்ளம் என்ற அதிரடி-நகைச்சுவை திரைப்படத்தில் தோன்றினார்.[49][50]
சென்னுக்கு ஐந்து ஆண்டுகளாக எந்த வெளியீடும் இல்லை. 2015 இல், இவர் நிர்பாக் என்ற வங்காள நாடகத் திரைப்படத்தில் அஞ்சன் தத்துக்கு மீண்டும் ஜோடியாக நடித்தார்.[51] இதுவே சென்னின் வாழ்க்கையில், வங்காள மொழியில் நடிக்கும் முதல் படம்.[52]
ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு, 2020 ஆம் ஆண்டில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஆர்யா என்ற இணையத் தொடரில் சென் அறிமுகமானார். இதில் சந்திரச்சூர் சிங்குக்கு ஜோடியாக மாபியா இராணியாக நடித்தார்.[53][54] 2022 இல் தொடரின் இரண்டாவது பாகத்தில் சென் தனது பாத்திரத்தை மீண்டும் செய்தார் [55][56]
சென் இரண்டு வளர்ப்பு மகள்களின் தாய். 24 வயதில் அவர் தனது முதல் மகள் ரெனி சென்னை 2000 ஆம் ஆண்டில் தத்தெடுத்தார், அவரது இரண்டாவது மகள் அலிசா 2010 இல் குடும்பத்தில் சேர்ந்தார்.[57]
சென் 2014 ஆம் ஆண்டில் அடிசன் நோய் கண்டறியப்பட்டு, நோயை நிர்வகிக்க அவருக்கு வாழ்நாள் முழுவதும் சுடீராய்டு மருந்துகள் தேவைப்படும் என்று கூறப்பட்டது.[58][59] 2019 இல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு, செனுக்கு சுடீராய்டுகளை எடுக்க வேண்டியதில்லை என்று மருத்துவர்கள் உறுதி செய்தனர்.[60]
2004 முதல் 2006 வரை நடிகர் ரன்தீப் ஹூடாவுடன் சென் உறவில் இருந்தார் [61][62] சென் 2018 முதல் 2021 வரை வடிவழகர் ரோகமன் சாலுடன் களவளாவல் செய்தார் [63][64] சூலை 2022 இல், தொழிலதிபரும் துடுப்பாட்ட நிர்வாகியுமான லலித் மோடியுடன் களவளாவல் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆண்டு | விருது | வகை | திரைப்படம் | விளைவு | மேற். |
---|---|---|---|---|---|
2000 | பிலிம்பேர் விருதுகள் | சிறந்த துணை நடிகை | பீவி நம்பர். 1 | வெற்றி | [65] |
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் | சிறந்த துணை நடிகை | வெற்றி | [66] | ||
திரை விருதுகள் | சிறந்த துணை நடிகை | வெற்றி | [67] | ||
ஜீ திரைப்பட விருதுகள் | சிறந்த துணை நடிகர் - பெண் | வெற்றி | [68] | ||
பிலிம்பேர் விருதுகள் | சிறந்த துணை நடிகை | சிர்ப் தும் | பரிந்துரை | [65] | |
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் | சிறந்த துணை நடிகை | பரிந்துரை | [66] | ||
பீப்பிள்சு சாய்சு விருதுகள் இந்தியா | சிறந்த துணை நடிகை | வெற்றி | [69] | ||
திரை விருதுகள் | சிறந்த துணை நடிகை | பரிந்துரை | [67] | ||
ஜீ திரைப்பட விருதுகள் | சிறந்த துணை நடிகர் - பெண் | பரிந்துரை | [68] | ||
2001 | பீப்பிள்சு சாய்சு விருதுகள் இந்தியா | சிறந்த துணை நடிகை | பாஸ் இத்னா சா குவாப் ஹை | பரிந்துரை | [69] |
2003 | பாலிவுட் திரைப்பட விருதுகள் | சிறந்த துணை நடிகை | ஃபில்ஹால்... | பரிந்துரை | [70] |
பிலிம்பேர் விருதுகள் | சிறந்த துணை நடிகை | பரிந்துரை | [71] | ||
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் | சிறந்த துணை நடிகை | பரிந்துரை | [72] | ||
சான்சுய் வியூவர்சு சாய்சு திரைப்பட விருதுகள் | சிறந்த துணை நடிகை | பரிந்துரை | [73] | ||
திரை விருதுகள் | சிறந்த துணை நடிகை | பரிந்துரை | [74] | ||
ஜீ திரைப்பட விருதுகள் | சிறந்த துணை நடிகர் - பெண் | வெற்றி | [75] | ||
2004 | திரை விருதுகள் | சிறந்த நடிகை | சமய்: வென் டைம் ஸ்ட்ரைக்சு | பரிந்துரை | [76] |
2005 | ஸ்டார்டசுட் விருதுகள் | ஆண்டின் சிறந்த நட்சத்திரம் – பெண் | மெயின் ஹூன் நா | பரிந்துரை | [77] |
ஜீ திரைப்பட விருதுகள் | சிறந்த துணை நடிகர் - பெண் | பரிந்துரை | [78] | ||
2013 | அன்னை தெரசா விருதுகள் | சமூக நீதி | இல்லை | வெற்றி | [79] |
2016 | இந்திய தலைமைத்துவ மாநாடு | தசாப்தத்தின் அழகி மற்றும் நடிகை | இல்லை | வெற்றி | [80] |
2018 | ஐ ஆம் வுமன் விருதுகள் | பொருள் பெண் விருது | இல்லை | வெற்றி | [81] |
2020 | பிலிம்பேர் ஓடிடி விருதுகள் | நாடகத் தொடரில் சிறந்த நடிகர் - பெண் | ஆர்யா | வெற்றி | [82] |
2021 | இந்திய தொலைக்காட்சி அகாடமி விருதுகள் | சிறந்த நடிகை - ஓடிடி | பரிந்துரை | [83] | |
சேம்பியன்சு ஆப் சேஞ்ச் விருது | சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளிப்புக்கான தேசிய விருது | இல்லை | வெற்றி | [84] | |
2022 | பிலிம்பேர் ஓடிடி விருதுகள் | நாடகத் தொடரில் சிறந்த நடிகர் - பெண் | ஆர்யா 2 | பரிந்துரை | [85] |
இந்திய தொலைக்காட்சி அகாடமி விருதுகள் | சிறந்த நடிகை - ஓடிடி | பரிந்துரை | [86] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.