தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் From Wikipedia, the free encyclopedia
சாதனா சர்கம் (Sadhana Sargam) (பிறப்பு: மார்ச் 7, 1969) இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது, மற்றும் பிலிம்பேர் விருது ஆகியவற்றைப் பெற்றவர். சாதனா சர்கம் ஹிந்தி, குஜராத்தி, வங்காளம், பஞ்சாபி, மற்றும் நேபாளம் உட்பட மொத்தம் இருபத்தைந்து மொழிகளில் பாடி ஆகக்கூடுதலான மொழிகளில் பாடியவர் என்ற மதிப்பையும் பெற்றார் [1]
சாதனா சர்கம் | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சாதனா கணேக்கர்[1] |
பிறப்பு | மார்ச்சு 7, 1969 |
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடகி |
தொழில்(கள்) | பாடகி |
இசைத்துறையில் | 1982-இன்று வரை |
சாதனா இந்தியா, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் தாபோல் துறைமுகம் நகரத்தில் உள்ள இசைக் குடும்பத்தில் பிறந்தார்.
சாதனா சர்கம் ஏ. ஆர். ரகுமான் இசையில் 'மின்சார கனவு' (1997) படத்தில் "விண்ணைத்தாண்டி வந்த வெண்ணிலவாய்" இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே அதிகாலை அனுப்பி வைத்த வெண்ணிலவாய்" ஆகிய பாடல்களை முதன் முதலில் தமிழில் பாடினார். அடுத்து தேவாவின் இசையில் நெஞ்சினிலே திரைப்படத்தில் 'மனசே மனசே கதவைத் திற' (1999) என்று ஹரிஹரனுடன் இணைந்து பாடினார்.
1999ல் வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார் ' திரைப்படத்தில் 'சூரிதார் அணிந்து வந்த சொர்க்கமா'ன ஜோதிகாவிற்கு ஹரிஹரனுடன் இணைந்து பாடினார். அலைபாயுதே என்ற திரைப்படத்தில் அவர் 'ஸ்நேகிதனே ஸ்நேகிதனே ' என்ற வைரமுத்துவின் பாடலைப் பாடினார்.
தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்களில் பாடும் வாய்ப்புக்கள் அடுத்தடுத்து வந்தன. வித்யா சாகர், சபேஷ்-முரளி, தேவா, சரண், இளையராஜா, பரத்வாஜ், எஸ்.ஏ.ராஜகுமார் போன்றவர்களின் இசையமைப்பில் மட்டுமின்றி கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா போன்ற அடுத்த தலை முறைப் பாடகர்களின் இசையமைப்பிலும் இப்பாடகி பாடியுள்ளார்.
ஸ்ரீனிவாஸ், உதித் நாராயணன், கே.கே, ஹரிஹரன், ஷங்கர் மகாதேவன், மது பாலகிருஷ்ணன், ஸ்ரீகாந்த் தேவா, உன்னி கிருஷ்ணன், கார்த்திக், ஹரீஷ் ராகவேந்திரா, ஜெஸ்ஸி கிஃப்ட், யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா அத்னான் சாமி, இளைய ராஜா , கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி என்று ஏறத்தாழ எல்லாப் பின்னணிப் பாடகர்களுடனும் இணைந்து பாடியுள்ளார்.
பாடல் ஆசிரியர்களான வைரமுத்து, பழனி பாரதி, வாலி , நா.முத்துக்குமார், உதயகுமார், கலைக்குமார், பா. விஜய், வி.இளங்கோ, மு. மேத்தா போன்ற பலரின் பாடல்களைப் பாடியுள்ளார்.
ரஹ்மான் ஒரு செவ்வியில் இந்தியாவில் உள்ள பாடகர் பாடகிகளில் சாதனா சர்கம் மட்டுமே தான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக பாடல்களைப் பாடி ஆச்சரியமூட்டும் நுட்பமான திறமை கொண்டவர் என்று பாராட்டினார். வட நாட்டுப்பாடகர்களில் அதிகமான தமிழ் பாடல்களை பாடியவர் என்பது மட்டுமல்ல. அதிலும் சிறப்பாக ஒரேயொரு ஹிந்தி பாடகர்/பாடகி ஒருவர் ஒரு தென்னிந்தியப் பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் என்ற சிறப்பையும் பெற்றார். தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ள சர்க்கம் தற்போது மலையாளத்திலும் தனது முதல் பாடலைத் தரவுள்ளார். "Rahman rocks New York". Rediff. June 2007. பார்க்கப்பட்ட நாள் 5 August 2008.
Seamless Wikipedia browsing. On steroids.