மேற்குத் தொடர்ச்சி மலை
மேற்தொடர்ச்சிமலையின் வரலாறு / From Wikipedia, the free encyclopedia
மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats) இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள மலைத்தொடர் ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையைத் தருகின்றது. இதனால் இம்மலைத்தொடரின் கிழக்குப்பகுதியிலுள்ள தக்காணப் பீடபூமி குறைந்தளவு மழைப்பொழிவையே பெறுகிறது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும்.[1] இங்கு சுமார் 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன.
விரைவான உண்மைகள் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், உயர்ந்த இடம் ...
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் | |
---|---|
தமிழ்நாடு, கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் | |
உயர்ந்த இடம் | |
உச்சி | ஆனைமுடி (மலை), கேரளம், எரவிகுளம் தேசிய பூங்கா |
உயரம் | 2,695 மீட்டர் |
பட்டியல்கள் | |
ஆள்கூறு | 10°10′N 77°04′E |
பரிமாணங்கள் | |
நீளம் | 1,600 km (990 mi) N–S |
அகலம் | 100 km (62 mi) E–W |
பரப்பளவு | 160,000 km2 (62,000 sq mi) |
புவியியல் | |
நாடு | இந்தியா |
மாநிலங்கள் | குசராத்து, மகாராட்டிரம், கோவா (மாநிலம்), கருநாடகம், கேரளம் and தமிழ்நாடு |
பகுதிகள் | மேற்கு இந்தியா and தென்னிந்தியா |
ஊர்கள் | மும்பை, சூரத்து, புனே, ஈரோடு, கோயம்புத்தூர், கோலாப்பூர் and கொச்சி |
Biome | வெப்பமண்டல, துணை வெப்பமண்டல ஈரமான அகலக் காடுகள் |
நிலவியல் | |
பாறையின் வயது | செனசோயிக் |
பாறை வகை | பசால்ட்டு, செந்நிறக் களிமண் and சுண்ணக்கல் |
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம் | |
கட்டளை விதி | இயற்கை: ix, x |
உசாத்துணை | 1342 |
பதிவு | 2012 (36-ஆம் அமர்வு) |
பரப்பளவு | 795,315 ha |
மூடு