சூரியக் குடும்பத்தின் ஒரு குறுங்கோள் From Wikipedia, the free encyclopedia
மக்கேமக்கே (Makemake, சின்னம்: ;[6] சிறுகோள் வரிசை எண் 136472 மக்கேமக்கே) என்பது ஒரு குறுங்கோள் ஆகும். இது கைப்பர் பட்டை பகுதியில் உள்ள பொருள்களில் சற்று பெரியது. இது புளூட்டோவில் 2/3 பங்கு அளவு உடையது. இதற்கு இயற்கைத் துணைக்கோள் கிடையாது என்பதால், இதன் திணிவை நம்மால் அளவிட முடியும். இது மிகவும் குறைந்த சராசரி வெப்பநிலையை உடையது. இதன் வெப்பநிலை சுமார் 30 கெல்வின் ஆகும். எனவே இது மெத்தேன், எத்தேன் மற்றும் நைட்ரசன் பனிக்கட்டிகளால் மூடப்பட்ட மேற்பரப்பை கொண்டிருக்கும் எனக் கருதப்படுகிறது.
ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியின் வழியாக மேக்மேக் பார்க்கப்படும் போது அமைப்பு |
|
கண்டுபிடிப்பு
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) |
|
கண்டுபிடிப்பு நாள் | 31 மார்ச் 2005 |
பெயர்க்குறிப்பினை
| |
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் | (136,472) மக்கேமக்கே |
வேறு பெயர்கள் | 2005 ஃப்ஒய்9 |
காலகட்டம்ஜூலியன் நாள் 2457000.5 (9 டிசம்பர் 2014) | |
சூரிய சேய்மை நிலை | 52.840 வானியல் அலகு |
சூரிய அண்மை நிலை | 38.590 வானியல் அலகு |
அரைப்பேரச்சு | 45.715 வானியல் அலகு |
மையத்தொலைத்தகவு | 0.15586 |
சுற்றுப்பாதை வேகம் | 309.09 ஜூலியன் ஆண்டு |
சராசரி சுற்றுப்பாதை வேகம் | 4.419 கிமீ/நொடி |
சராசரி பிறழ்வு | 156.353° |
சாய்வு | 29.00685° |
Longitude of ascending node | 79.3659° |
Argument of perihelion | 297.240° |
சிறப்பியல்பு
| |
பரிமாணங்கள் | |
சராசரி ஆரம் | |
தட்டையாதல் | 0.05 |
புறப் பரப்பு | ≈ 6,900,000 கிமீ 2 |
கனஅளவு | ≈ 1.7×109 கிமீ 3 |
அடர்த்தி | 1.4–3.2 கி/செமீ 3[1] |
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் | 7.771±0.003 h[4] |
எதிரொளி திறன் | 0.81+0.01 −0.02[1] |
வெப்பநிலை | 32–36 கெல்வின் [2] |
நிறமாலை வகை | B−V=0.83, V−R=0.5[5] |
மைக்கேல் பிரவுனின் தலைமையிலான குழுவினால், மக்கேமக்கே, 31 மார்ச் 2005 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் 29 ஜூலை 2005 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆரம்பத்தில், இதை 2005 FY9 என பெயரிட்டார்கள், அதன்பின் சிறுகோள் வரிசை எண் 136472 கொடுக்கப்பட்டது. ஜூலை, 2008 இல் உலகளாவிய வானியல் ஒன்றியம் இதற்கு குறுங்கோள் அங்கீகாரத்தைக் கொடுத்தது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.