மூணார்

From Wikipedia, the free encyclopedia

மூணார்map

மூணாறு கேரளத்தின் தென் மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 1600–1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மூணாறு தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. மூணாறு நகரமும், அதைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்களும் சேர்ந்தே மூணாறு என அழைக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியே இங்குள்ள முக்கியமான தொழில் ஆகும். முதிரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய 3 ஆறுகள் கூடுமிடமாதலால், மூன்றாறு என்றிருந்து மூணாறாகியுள்ளது. தேயிலைத் தோட்டங்களும் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் இந்நகரின் சிறப்பியல்புகள். உதகமண்டலம், கொடைக்கானலிற்குப் பிறகு, தீபகற்ப இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ்பெற்ற கோடை வாழிடம் மூணாறு. இந்நகரின் பெரும்பான்மையான மக்கள் தோட்டத் தொழிலாளர்களான தமிழர்கள் ஆவர்.

விரைவான உண்மைகள் மூணாறு ஊராட்சி, நாடு ...
மூணாறு ஊராட்சி
மலை வாழிடம்
Thumb
மூணாறு தேயிலைத் தோட்டங்கள்
அடைபெயர்(கள்): தென்னிந்தியாவின் காஷ்மீர்
Thumb
மூணாறு ஊராட்சி
மூணாறு ஊராட்சி
Thumb
மூணாறு ஊராட்சி
மூணாறு ஊராட்சி
ஆள்கூறுகள்: 10°05′21″N 77°03′35″E
நாடுஇந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்இடுக்கி
பெயர்ச்சூட்டுதேயிலைத் தோட்டங்கள், குளிர்ச்சியான சூழ்நிலை
அரசு
  வகைகிராம ஊராட்சி
  நிர்வாகம்மூணார் ஊராட்சி
பரப்பளவு
  மொத்தம்187 km2 (72 sq mi)
ஏற்றம்1,532 m (5,026 ft)
மக்கள்தொகை
 (2001)
  மொத்தம்38,471
  அடர்த்தி210/km2 (530/sq mi)
மொழிகள்
  அலுவல் மொழிமலையாளம், ஆங்கிலம்
  பிராந்திய மொழிதமிழ் [2], மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
685 612
தொலைபேசி குறியீடு04865
வாகனப் பதிவுKL-68 & -06
எழுத்தறிவு76%
இணையதளம்keralatourism.org/destination
மூடு

வரலாறு

இப்பகுதி முழுவதும் முதுவான் இன, மலை வாழ் மக்களின் வசம் இருந்தது. இவர்களுக்குப் பின் பூஞ்ஞார் ராஜ வம்சத்தினரின் ஆட்சியில் இருந்தது.பின்னர், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சிக்கு கீழ் வந்தது. ஆங்கிலேயர்கள் தேயிலை பயிரிடத் தொடங்கினர். ஜான் டேணியல் முன்றோ என்ற ஆங்கிலேயர் முதன் முதலில், இங்கே தோட்டப்பயிர் செய்ய வழிவகுத்தார். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு, தமிழகத்தில் இருந்து ஆட்களை வரவழைத்தனர். சரக்குகளை கையாளுவதற்கு தொடர்வண்டி வசதி, கம்பிவட வாகன வசதியை ஏற்படுத்தினர். எனினும் பின்னர் வெள்ளத்தால் தொடருந்து பாதைகள் அழிந்ததால் சாலை வசதி மேம்படுத்தப்பட்டு சரக்குகளை கையாளப்பட்டது. இங்கு உற்பத்தியான தேயிலை உலக அளவில் புகழ் பெற்றது.[3]

சுற்றுலா

Thumb
மாட்டுப்பட்டி அணை, மூணாறு அருகில்.

தமிழ்நாடு-கேரள எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை எழில் வாய்ந்த இந்த அழகிய மலைப் பகுதி. 3 ஆறுகளின் சங்கமத்தினால் மூணாறு எனப் பெயர் பெற்றது. தென்நாட்டில் மிக உயரமான (2,695 மீட்டர்) ஆனைமுடி சிகரம், மூணாறு மலைப் பகுதியில் உள்ள ராஜமலைத் தொடரில் உள்ளது. தென்னிந்தியாவின் மூன்றாவது உயர மலையான சொக்கர்முடி மலை லோக்கார்ட் எஸ்ட்டேட்டின் (Lockhart Estate) ஓர் எல்லைகளாகும். ராஜமலைத் தொடரில் அழிந்துவரும் விலங்கினமான வரையாடு (மலை ஆடு) ஏராளமாக உள்ளது. மூணாறு வரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் ராஜமலைத் தொடரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும், குறிஞ்சி மலர்க்காடு மிகப் புகழ்பெற்றது.

முக்கிய சுற்றுலா இடங்கள்

  • ராஜமலை (Rajamalai)
  • ஆனை முடி மலைமுடி (Anaimudi Peak)
  • ரோஸ் கார்டன் (Rose Garden)
  • மாட்டுப்பட்டி அணை (Mattupatty Dam)
  • எக்கோ பாயிண்ட் (Echo Point)
  • குண்டலை அணை (Kundalai Dam)
  • லோக்கார்ட் டீ மியூசியம் (Lockhart Tea Museum)
  • லோக்கார்ட் டீ பார்க் (Lockhart Tea Park)
  • லோக்கார்ட்  கேப் வியூ பாயிண்ட்

(Lockhart Gap View Point)

  • கள்ளன் குகை (Kallan Cave)
  • பெரியகானல் அருவி (Periyakanel Water Falls)
  • ஆணையிரங்கல் அணை (Anayirangal Dam)
  • லக்காம் அருவி (Luckam Water Falls)
  • வாகுவரை தேயிலை தோட்டம் (Vaguvarrai Estate)

மூணாறில் இருந்து தமிழக, கேரள எல்லைப் பகுதியான தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதிக்கு வந்து அங்குள்ள சிகரங்களில் நின்று மலைப் பகுதிகளின் எழிலை கண்டு ரசிக்கலாம். குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் சென்று இளைப்பாறுவதற்கு அற்புதமான இடம். இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாறுக்கு தமிழகத்திலிருந்து உடுமலைப்பேட்டை மதுரை, தேனி, கோவை சென்னை யிலிருந்தும், கேரளத்தின் முக்கிய ஊர்களான கொச்சி, ஆலுவா, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களில் இருந்தும் பேருந்தின் வாயிலாகச் செல்லலாம். கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து உடுமலை வழியாகவும் (KSRTC Rajahamsa) அடிமாலி வழியாகவும் KSRTC மூணாறிற்குப் பேருந்துகள் உள்ளன. உடுமலையில் இருந்து 3மணி நேரத்திலும் போடிநாயக்கனூர் நகரிலிருந்து 2 மணி நேரத்திலும் சிற்றுந்தில் செல்லலாம்.உடுமலையில் இருந்து மூணாறு 88 கி. மீ தொலைவில் உள்ளது. போடியில் இருந்து மூணாறு சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ளது. பெங்களூரு , மைசூரு , சேலம் , ஈரோடு , கோயம்புத்தூர் , திருப்பூர் நகரங்களில் இருந்து உடுமலை வழியாகவும், திண்டுக்கல் , மதுரை , தேனி நகரங்களில் இருந்து போடி வழியாகவும் மூணாறை அடையலாம்.உடுமலை, போடி நகரங்களில் இருந்து அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த நகரை அடையும் முன்னர் போடி மெட்டு என்ற அழகிய மலையுச்சியே கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள எல்லையாகும்.

ஆனைமலை புலிகள் காப்பகம், சின்னாறு வனவிலங்கு சரணாலயம் மற்றும் மறையூர் சந்தனக் காடுகள் வழியாகச் செல்லும் உடுமலை - மூணாறு சாலை யானைகள், புள்ளிமான்கள், புலிகள்,காட்டுப்பன்றிகள், காட்டெருமைகள் நடமாட்டம் மிகுந்த ஆபத்தான மலைச்சரிவில் அமைந்த ஒற்றைப் பாதையாகும்.

1600 மீட்டரிலிருந்து 1800 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல் அமைந்துள்ள இந்த நகரில் கண் கொள்ளாக் காட்சியாக முருகன் கோவில் ஒன்றும் உண்டு. இங்கு கார்த்திகைப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும்.

Thumb
மூணாறு தேயிலைத் தோட்டங்கள்

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.